<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p105 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Philosophy](https://indike.org/pramana/in.darsana) › [Qualified non-dualist Vedānta](https://indike.org/pramana/in.darsana.visistadvaita) › [Piḷḷai Lokācārya and the southern school](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai) › [Parandappadi](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi) › p105

# Parandappadi p105

Parandappaḍi p105

- **Language:** Sanskrit

### [p105](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p105)

'ஸாங்கமான ஸகல தர்மங்களையும் ஸவாஸநமாக த்யஜித்து ஸௌலப்யாதி கல்யாணகுணவிசிஷ்டனா யிருக்கிற என்னையே இஷ்டப்ராப்திக்கும் அநிஷ்டநிவார ணத்துக்கும் நிரபேக்ஷ ஸாதநமாக ஸ்வீகரி; ஜ்ஞாந சக்த்யாதி கல்யாணகுணகண விசிஷ்டனாயிருக்கிற நான், என்னையே நிரபேக்ஷ ஸாதநமாக ப்ரதிபத்தி பண்ணின உன்னை, அவித்யா கர்ம வாஸநா ருசி ப்ரக்ருதி ஸம்பந்தங்களாகிற விரோதிகளினின்றும் முக்தனாக்கு கிறேன், நீ உன்காரியம் சுட்டி சோகிக்கவேண்டா' என்று உபாயாந்தர தர்சநத்தாலே சோகாவிஷ்டனான அர்ஜுநனுடைய சோகத்தை நிவர்த்திப்பிக்கிறான். இதில் பூர்வார்த்த4த்தாலே-ப்ரபத்தாவினுடைய க்ருத்யம் சொல்லுகிறது; உத்தரார்த்த4த்தாலே ப்ரபத்தவ்யனுடைய க்ருத்யம் சொல்லுகிறது. ப்ரபத்தாவுக்கு க்ருத்யம்-உபாய ஸ்வரீகாரம; ப்ரபத்தவ்யனுக்கு க்ருத்யம்-விரோதி4நிவர்த்தநம். ஈஶ்வரனுக்குக் கைங்கர்யத்தில் அந்வயமில்லாதாப்போலே, இவனுக்கு விரோதி4நிவ்ருத்தியில் அந்வயமில்லை. இவனுக்கு ஶேஷித்வத்தில் அந்வயமில்லாதாப்போலே, அவனுக்கும் உபாயஸ்வரீகாரத்தில் அந்வயமில்லை.

- [Previous: p104](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p104)
- [Next: p106](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p106)

---
Source: [https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p105](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p105) · Pramāṇa
