<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p121 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Philosophy](https://indike.org/pramana/in.darsana) › [Qualified non-dualist Vedānta](https://indike.org/pramana/in.darsana.visistadvaita) › [Piḷḷai Lokācārya and the southern school](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai) › [Parandappadi](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi) › p121

# Parandappadi p121

Parandappaḍi p121

- **Language:** Sanskrit

### [p121](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p121)

இவைதான் ஓராகாரத்தாலே த்யாஜ்யங்களாய், ஓரா காரத்தாலே உபாதேயங்களாயிருக்கும். கர்மாநுஷ்டாநம் தேஹயாத்ரையிலே அந்தர்பூதமாயிருக்கும். ஸ்வஸ்வரூப ஜ்ஞாநத்திலே அந்விதமாயிருக்கும்-ஜ்ஞாநயோகம். போஜ நத்துக்கு க்ஷுத்துபோலே கைங்கர்யத்துக்குப் பூர்வக்ஷணத் திலே அநுவர்த்திக்கக்கடவதான ருசிவிஸேஷத்திலே அந் வஸித்திருக்கும்-பக்தி. இருவர்பக்கலிலும் அநுஷ்டாநம் ஸமாநமாயிருக்கச்செய்தே ஹேதுவைஷம்யமுண்டாயிருக் கும். ஸாதநத்வபுத்தி அநுவர்த்திக்கும் உபாஸகனுக்கு. ஸாத்யத்வபுத்தி அநுவர்த்திக்கும் ப்ரபந்நனுக்கு. விஹித கர்மா நுஷ்டாநத்துக்கு முக்யாதிகாரி ஸித்தஸாதந நிஷ்டன். ஸாத்யாந்தரநிஷ்டன் ஸ்வர்க்காதிஸாதநமாக நினைத்திருக்கும். ஸாதநாந்தரநிஷ்டன் மோக்ஷஸாதநமாக நினைத்திருக்கும். ஸித்தஸாதநநிஷ்டன் ஸ்வயம் ப்ரயோஜந மாக நினைத்திருக்கும்.

- [Previous: p120](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p120)
- [Next: p122](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p122)

---
Source: [https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p121](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p121) · Pramāṇa
