<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p142 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Philosophy](https://indike.org/pramana/in.darsana) › [Qualified non-dualist Vedānta](https://indike.org/pramana/in.darsana.visistadvaita) › [Piḷḷai Lokācārya and the southern school](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai) › [Parandappadi](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi) › p142

# Parandappadi p142

Parandappaḍi p142

- **Language:** Sanskrit

### [p142](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p142)

ப்ரார்த்தனை என்செய்ய? என்னில்; பலதசையிற்போலே இங்கு ப்ரார்த்தனையுண்டு. பலதசையி்ல் புருஷார்த்த தானித்த்யார்த்தமாக ப்ரார்த்தநம் அபேக்ஷிதமாகக் கடவது. பாரதந்த்ர்யம் நித்யமாகிறவோபாதி பரதந்த்ரமான வஸ்துதான் சித்வஸ்துவாகையாலே, சைதன்யகார்யமான அந்த ப்ரார்த்தநாவிஸேஷமும் நித்யஸித்தமாயிருக்கும். இது த்யாஜ்யகோடியிலும் அந்வயியாது. உபாயகோடியிலும் அந்வயியாது க"அதுவுமவன தின்னருளே" என்கையாலே ப்ரதிபத்திவிஸேஷத்துக்கு உபாய கார்யத்வமுண்டித்தனையல்லது உபாயத்வமில்லை. ஈஸ்வரன் உபாயமாகையாலே இத்தை உபாயமென்ன வொண்ணாது. உபாயாங்கமென்ன வொண்ணாது, உபாய பூதமான ஈஸ்வரஸ்வரூபம் ஸித்தமாய், பரமசேதந மாய், ஸர்வஸக்தியுக்தமாயிருக்கையாலே. அங்கத்வம் கொள்ளில், ஈஸ்வரனுக்கு உத்பாத்யத்வாநித்யத்வாநேக ரூபத்வங்களாதல், அசைதன்யாஸாமர்த்யஸாபேக்ஷதை களாதல் உண்டாம். அப்போது, உபாயாந்தரவ்யாவ்ருத்தி ரூபமான ஸித்தத்வம், ஏகரூபத்வம், பரமசேதநத்வம், ஸர்வ ஸக்தியோகம், நைரபேக்ஷ்யம் தொடக்கமான தர்மங்களும் குலையும். இவ்வுபாயவிஸேஷம் ஸ்வவ்யதிரிக்தமாயிருப்ப தொன்றை ஸஹியாமையாலேயிறே ஆநுகூல்யஸங்கல் பாதிகளுக்கு உபாயாங்கத்வமின்றிக்கே அவகாதஸ்வேதம் போலே ஸம்பாவிதஸ்வபாவத்வமுண்டாகிறது. ப்ரபத்த வ்யக்தங்களான ரக்ஷகத்வாதிகள் போலே ப்ரபந்நகதமான இப்ரதிபத்திவிஸேஷம் ஸ்வரூபாநுபந்தியாய்க் கிடக்கு மித்தனை. த்யாகத்துக்கு உபாயாந்தர்பாவமுண்டாம் போதாய்த்து இது உபாயத்தில் அந்தர்பூதமாவது. இவ்வதிகாரியினுடைய ஜ்ஞாநகார்யமாய், ராகப்ராப்தமாய், ஸ்வரூபநிஷ்டமாய், ப்ராப்யகோடிகடிதமாயிருக்குமத்தனை. பரித்யக்தங்களான தர்மங்கள்போலே ஸ்வீகார்யமான இந்த தர்மமும் ஸாதநமாகில் ஸாங்கமாக விருக்கவேண்டாவோ?

- [Previous: p141](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p141)
- [Next: p143](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p143)

---
Source: [https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p142](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p142) · Pramāṇa
