<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p230 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Philosophy](https://indike.org/pramana/in.darsana) › [Qualified non-dualist Vedānta](https://indike.org/pramana/in.darsana.visistadvaita) › [Piḷḷai Lokācārya and the southern school](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai) › [Parandappadi](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi) › p230

# Parandappadi p230

Parandappaḍi p230

- **Language:** Sanskrit

### [p230](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p230)

ஸௌலப்⁴யமாவது-அதீந்த்₃ரியனான தன்னைச் சேதநன் கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கலாம்படி நயநவிஷய தாங்க₂தனாகை; அதினுடைய பூர்த்தியுள்ளது அர்ச்சாவ தாரத்திலே; 1. "மாம்" என்று காட்டின ஸௌலப்⁴யம் பரத்வ மென்னும்படியிறே அர்ச்சாவதார ஸௌலப்⁴யம். 1. "மாம்" என்று கையுமுழவுகோலும் பிடித்த சிறுவாய்க்கயிறுமாய்க் கொண்டு ஸாரதி₄யாய்நின்ற நிலையையிறே பற்றச் சொல்லிற்று; அங்குத்தை ஸௌலப்⁴யம், 2. "மய்யாஸக்த மநா: பார்த்த₂" என்று - தன்பக்கலிலே ஆஸக்தமான மநஸ்ஸையுடைய அர்ஜுநன் ஒருவனுக்குமாயிருக்கும். அர்ச்சாவதார ஸௌலப்⁴யம் ஸர்வவிஷயமாயிருக்கும்; 'நீயே நமக்கு வேண்டா' என்றவர்களையும் விடமாட்டாத ஸௌலப்⁴யமிறேயிது; அந்த ஸௌலப்⁴யம் காதா₃சித்கமா யிருக்கும்; இந்த ஸௌலப்⁴யம் ஸார்வகாலிகமாயிறே யிருப்பது. ஸ்வீகாரத்துக்கு உபயுக்தங்களான கு₂ண விஸேஷங்களோபாதி, உபாயத்வோபயோகி₂களான கு₂ண விஸேஷங்களும் இவ்விடத்தே அநுஸந்தே₄யங்கள். ப்ரத₂ம பதா₂நந்தரத்தில் அஸ்மச்ச₂ப்₃த₂த்துக்குப்போலே இதுக்கு ஸங்கோசமில்லாமையாலே, அஸ்மச்ச₂ப்₃த₂த்வயார்த்₂த₂மும் இவ்விடத்திலே அநுஸந்தே₄யம்.

- [Previous: p229](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p229)
- [Next: p231](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p231)

---
Source: [https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p230](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p230) · Pramāṇa
