<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p254 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Philosophy](https://indike.org/pramana/in.darsana) › [Qualified non-dualist Vedānta](https://indike.org/pramana/in.darsana.visistadvaita) › [Piḷḷai Lokācārya and the southern school](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai) › [Parandappadi](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi) › p254

# Parandappadi p254

Parandappaḍi p254

- **Language:** Sanskrit

### [p254](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p254)

ஆக, கைங்கர்ய ப்ரதிஸம்பந்தி மிதுநமாயிருக்கை யாலே, ஸ்ரீமச்சப்தம் பெரியபிராட்டியாரோட்டைச் சேர்த்தியைச் சொல்லுகிறது. பூர்வவாக்யத்தில் ஸ்ரீமச் சப்தம், சேதநனுடைய அபராதத்தையும் ஈஸ்வரனுடைய ஸ்வாதந்த்ர்யத்தையுங்கண்டு இவர்கள் அவனுடைய க்ரோதத்துக்கு விஷயபூதராய் நசித்துப்போகாதே இவனைக் கிட்டி உஜ்ஜீவித்துப்போகவேணுமென்று ஸாபராதரான சேதனரை ஈஸ்வரனோடே சேர்க்கைக்காக என்றுமொக்க விடாதேயிருக்குமிருப்பைச் சொல்லுகிறது. இங்குத்தை ஸ்ரீமச்சப்தம் கைங்கர்ய ப்ரதிஸம்பந்தித்வத்தைப்பற்றவும் அவர்கள் பண்ணும் கைங்கர்யத்தை ஈஸ்வரன் திருவுள் ளத்தே ஒன்றுபத்தாகப் படுத்துகைக்காகவும், அநுபவ விச்சேதத்தில் தனக்கு ஸத்தாஹாநி பிறக்கும்படியிருக்கை யாலே நிரந்தர ஸம்ஸ்லேஷத்துக்காகவும் அவனை க்ஷண காலமும் பிரியாதே ஸர்வகாலமும் ஸம்ஸ்லிஷ்டையா யிருக்குமிருப்பைச் சொல்லுகிறது.

- [Previous: p253](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p253)
- [Next: p255](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p255)

---
Source: [https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p254](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p254) · Pramāṇa
