<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p42 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Philosophy](https://indike.org/pramana/in.darsana) › [Qualified non-dualist Vedānta](https://indike.org/pramana/in.darsana.visistadvaita) › [Piḷḷai Lokācārya and the southern school](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai) › [Parandappadi](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi) › p42

# Parandappadi p42

Parandappaḍi p42

- **Language:** Sanskrit

### [p42](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p42)

\ ப்ரணவந்தான் - ஆத்மஸ்வரூபத்தையும் பரஸ்வரூபத் தையும் ப்ரகாஸிப்பியாநிற்கச்செய்தே, ஆத்மஸ்வரூபத்திலே தத்பரமாயிருக்கும். "ராஜபுருஷ : என்கிறவிடத்தில், ராஜாவும் ப்ரஸ்துதனாய், புருஷனும் ப்ரஸ்துதனாயிருக்கச் செய்தே, ஸப்₂த₂த்தாலே புருஷன் ப்ரதா₄நனாய், அர்த்த₂த: ராஜா ப்ரதா₄நனாயிருக்கும்; அப்படியே இவ்விடத்திலும் ஸப்₂த₂த்தாலே சேதனன் ப்ரதா₄நனாய், அர்த்த₂த்தாலே ஈஸ்வரன் ப்ரதா₄நனாயிருக்கும்" என்று ஆழ்வான் அருளிச் செய்யும். ஆகையாலே, ஸாப்த₂மான சேதநப்ராதா₄ந் யத்தைப்பற்ற, 1. "ஓமித்யாத்மாநம் யுஞ்ஜீத" என்று ஆத்ம வாசகமாகச் சொல்லும்; ஆர்த்த₂மான ஈஸ்வர ப்ராதா₄ந் யத்தைப்பற்ற, 2. "ஓங்காரோ ப₄க₃வாந் விஷ்ணு:" என் றும், 3. "ப்ரணவஸ்ஸர்வவேதே₂ஷு" என்றும் இத்யாதி₃ களிற் சொல்லுகிறபடியே ப₄க₃வத்₂வாசகமுமாயிருக்கும்.

- [Previous: p41](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p41)
- [Next: p43](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p43)

---
Source: [https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p42](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p42) · Pramāṇa
