<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p55 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Philosophy](https://indike.org/pramana/in.darsana) › [Qualified non-dualist Vedānta](https://indike.org/pramana/in.darsana.visistadvaita) › [Piḷḷai Lokācārya and the southern school](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai) › [Parandappadi](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi) › p55

# Parandappadi p55

Parandappaḍi p55

- **Language:** Sanskrit

### [p55](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p55)

மத்யமாக்ஷரமான உகாரம், ஸேஷத்வ விரோதியான அந்யஸேஷத்வத்தினுடைய நிவ்ருத்தியை ப்ரதிபாதிக் கிறது. சதுர்த்தீவிபக்தியாலே ஈஸ்வரஸேஷத்வம் ப்ரதி பாதிதமாகச்செய்தே அந்யஸேஷத்வம் ப்ரஸ்துதமாமோ வென்னில்; லோகத்ருஷ்ட்யா ஒரு அந்யஸேஷத்வ பங்கை யுண்டு அநுவர்த்திப்பது. லோகத்திலே ஒருவனுக்கு ஸேஷமான க்ருஹ க்ஷேத்ர புத்ர தாஸ தாஸிகள் வேறே யும் சிலர்க்கு ஸேஷமாகக் காணாநின்றோம். அப்படிப் பட்ட அந்யஸேஷத்வம் இந்த ஸ்தலத்திலுமுண்டோ? என்றொரு பங்கை உதிக்குமிறே; ஆகையாலே, தாத்ரூபமான அந்யஸேஷத்வம் இங்கில்லை என்னு மிடத்தை ப்ரதிபாதிக்கிறது உகாரம். 5. "ததேவ பூதம் தநுபவ்யமா இதம்" என்றும், 6. "ததே வாக்நிஸ் தத்வாயுஸ் தத்ஸூர்யஸ் தது சந்த்ரமா:" என்றும் இத்யாதிகளிலே, ஏவகார ஸ்தானத்திலே உகா ரத்தை ப்ரயோகிக்கக் காண்கையாலே, இவ்வுகாரம்

- [Previous: p54](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p54)
- [Next: p56](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p56)

---
Source: [https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p55](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p55) · Pramāṇa
