<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p63 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Philosophy](https://indike.org/pramana/in.darsana) › [Qualified non-dualist Vedānta](https://indike.org/pramana/in.darsana.visistadvaita) › [Piḷḷai Lokācārya and the southern school](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai) › [Parandappadi](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi) › p63

# Parandappadi p63

Parandappaḍi p63

- **Language:** Sanskrit

### [p63](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p63)

அஹங்கார மமகார ராஹித்யமில்லாதபோது ஈஶ்வர ஸம்ப₃ந்த₄ யோக்₃யதையில்லை. ஸ்வஸ்மிந் ஸ்வத்வாநு ஸந்தா₄நமில்லாதபோது - ஸ்வாமிஸந்நிதி₄யில் நிற்கைக்கு அர்ஹனாயிறேயிருப்பது. அஹங்காரமமகாரங்களிரண்டும் அந்யோந்யம் அவிநாபூ₄தமாகையாலே அஹங்காரம் வந்த விடத்தே மமகாரம் வந்து, மமகாரம் வந்தவிடத்தே அஹங் காரம் வரும்படியாயிருக்கையாலே அஹங்காரமமகாரங்க ளிரண்டும் ப்ரஸ்துதமாய், இரண்டினுடைய நிவ்ருத்தியும் இவ்விடத்திலே அநுஸந்தே₄யம். a “யானேயென்றனதே என்றிருந்தேன்” என்று அஹங்காரமமகாரங்கள் இரண் டையும் அநுஸந்தி₄த்தவர்தாமே, a “யானே நீயென்னுடை மையும் நீயே” என்று, அநந்தரத்திலே அவற்றினுடைய நிவ்ருத்தியையும் அநுஸந்தி₄த்தாரிறே. 1. “யஸ்யைதே தஸ்ய தத்₃த₄நம்” என்கிறபடியே அஹங்காரம்போனவாறே மமகாரம்போமிறே. அஹங்காரமமகார நிவ்ருத்திமாத்ரமே யன்றிக்கே, 2. “ப₄க₃வத ஏவாஹமஸ்மி” என்றும், 3. “தேஷாமபி நமோ நம:” என்றும், 4. “த்வதீ₃யத₂ர்ஸநே ப்யேவம் ப₄வேத்” என்றும், b “உற்றதுமுன்னடியார்க் கடிமை” என்றும், c “அடியார்க்காட்படுத்தாய்” என்றும், d “ அடியார்க்கென்னையாட்படுத்த விமலன் ” என்றும் இத்யாதி₃யிற்படியே ப₄க₃வத்பாரதந்த்ர்யமும், தத்காஷ்டா₂ பூ₄மியான பா₄க₃வதபாரதந்த்ர்யமும் அநுஸந்தே₄யமாகக் கடவது.

- [Previous: p62](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p62)
- [Next: p64](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p64)

---
Source: [https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p63](https://indike.org/pramana/in.darsana.visistadvaita.tenkalai.parandappadi.p63) · Pramāṇa
