<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.11 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Religious Traditions](https://indike.org/pramana/in.sampradaya) › [Śaiva traditions](https://indike.org/pramana/in.sampradaya.saiva) › [Śaiva Siddhānta](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta) › [The Fourteen Meykaṇṭa Śāstras](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda) › [சிவஞானபோதம](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam) › 2.11

# சிவஞானபோதம 2.11

சிவஞானபோதம் 2.11

- **Language:** Tamil

### [2.11](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.11)

நான்காம் அதிகரணம்  
மேற்கோளும் ஏதுவும்: இனி, ஒடுக்கம் அறிதலின் ஆன்மா உளது என்றது.  
பொழிப்புரை: நனவின்கண் கனவு காண்டாம் என்றும் கண்டிலம் என்று நிற்பது உளதாகலின் அதுவே அவ்வான்மாவாம் என்றது.  
உதாரணம்:  
அவ்வுடலின் நின்றுயிர்ப்ப ஐம்பொறிகள் தாம்கிடப்பச்  
செவ்விதின் அவ்வுடலிற் சென்று அடங்கி-- அவ்வுடலின்  
வேறொன்று கொண்டு விளையாடி மீண்டு அதனை  
மாறல், உடல் நீ அல்லை மற்று 19

- [Previous: 2.10](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.10)
- [Next: 2.12](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.12)
- [Up: 2](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2)

---
Source: [https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.11](https://indike.org/pramana/in.sampradaya.saiva.siddhanta.meykanda.civananapotam.2.11) · Pramāṇa
