<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.eight_anthologies.akananuru.13 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Eight Anthologies](https://indike.org/pramana/in.sangam.eight_anthologies) › [Akananuru](https://indike.org/pramana/in.sangam.eight_anthologies.akananuru) › 13

# Akananuru 13

Akanāṉūṟu 13

- **Language:** Tamil

### [13](https://indike.org/pramana/in.sangam.eight_anthologies.akananuru.13)

தன்கடற் பிறந்த முத்தின் ஆரமும்,  
முனைதிரை கொடுக்கும் துப்பின், தன்மலைத்  
தெறல் அருமரபின் கடவுட் பேணிக்  
குறவர் தந்த சந்தின் ஆரமும்,  
இருபேர் ஆரமும் எழில்பெற அணியும்  
திருவீழ் மார்பின் தென்னவன் மறவன் -  
குழியில் கொண்ட மராஅ யானை  
மொழியின் உணர்த்தும் சிறுவரை அல்லது,  
வரைநிலை இன்றி இரவலர்க்கு ஈயும்,  
வள்வாய் அம்பின் கோடைப் பொருநன்-  
பண்ணி தைஇய பயம்கெழு வேள்வியின்,  
விழுமிது நிகழ்விது ஆயினும்- தெற்குஏர்பு,  
கழிமழை பொழிந்த பொழுதுகொள் அமையத்துச்,  
சாயல் இன்துணை இவட்பிரிந்து உறையின்,  
நோய் இன்றாக செய்பொருள்! வயிற்பட  
மாசுஇல் தூமடி விரிந்த சேக்கை,  
கவவுஇன் புறாமைக் கழிக- வள வயல்,  
அழல்நுதி அன்ன தோகை ஈன்ற  
கழனி நெல்லின் கவைமுதல் அலங்கல்  
நிரம்புஅகன் செறுவில் வரம்பு அணையாத் துயல்வரப்,  
புலம்பொடு வந்த பொழுதுகொள் வாடை,  
இலங்குபூங் கரும்பின் ஏர்கழை இருந்த  
வெண்குருகு நரல, வீசும்  
நுண்பல் துவலைய தண்பனி நாளே!

> A garland of pearls born from his own sea, / and a garland of sandalwood offered by the Kuravar / who revere the god of unapproachable tradition on his mountain / of strength that repels hostile armies— / adorned handsomely with both great garlands / on his Lakshmi-favored chest is the warrior of the Southerner, / the lord of the Kōṭai hill with broad-tipped arrows / who gives without limit to supplicants, / except for the brief moment he spends directing by command / the rutting elephants captured in pits— / even if it were greater than the fruit-yielding sacrifice / performed by Paṇṇi, / if he stays separated from her, his sweet, graceful mate, / at this seasonal hour when excessive rains have poured, rising from the south, / may the wealth he makes be free from sorrow! / May these cold, dewy days pass without the joy of embrace / upon this pure, flawless bed, / when the seasonal chill north wind arrives bringing loneliness, / swaying the forked, ripe ears of field paddy / whose tips resemble flames in fertile tracts, / moving from ridge to ridge in the wide, full fields, / while white herons screech upon the shapely stalks / of bright-flowered sugarcane, / spraying fine, abundant drops of spray!  
> — English (machine translation) (machine translation)

- [Previous: 12](https://indike.org/pramana/in.sangam.eight_anthologies.akananuru.12)
- [Next: 14](https://indike.org/pramana/in.sangam.eight_anthologies.akananuru.14)

## Translations (1)

- [English (machine translation)](https://indike.org/pramana/in.sangam.eight_anthologies.akananuru~en-mt.13) — English, machine translation

## Discussed in (1)

- [History of Tamil Language and Literature (Beginning to 1000 A.D.)](https://indike.org/pramana/ins.literature.vaiyapuri-pillai-1956.c6.s2.1) — Pillai 1956, English

---
Source: [https://indike.org/pramana/in.sangam.eight_anthologies.akananuru.13](https://indike.org/pramana/in.sangam.eight_anthologies.akananuru.13) · Pramāṇa
