<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.eight_anthologies.akananuru.304 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Eight Anthologies](https://indike.org/pramana/in.sangam.eight_anthologies) › [Akananuru](https://indike.org/pramana/in.sangam.eight_anthologies.akananuru) › 304

# Akananuru 304

Akanāṉūṟu 304

- **Language:** Tamil

### [304](https://indike.org/pramana/in.sangam.eight_anthologies.akananuru.304)

இருவிசும்பு இவர்ந்த கருவி மாமழை  
நீர்செறி நுங்கின் கண்சிதர்ந் தவைபோல்  
சூர்ப்பனி பன்ன தண்வரல் ஆலியொடு  
பரூஉப்பெயல் அழிதுளி தலைஇ வான்நவின்று  
குரூஉத்துளி பொழிந்த பெரும்புலா வைகறை  
செய்துவிட் டன்ன செந்நில மருங்கிற்  
செறித்துநிறுத் தன்ன தெள்ளறல் பருகிச்  
சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை  
வலந்திரி மருப்பின் அண்ணல் இரலையொடு  
அலங்குசினைக் குருந்தின் அல்குநிழல் வதியச்  
சுரும்புமிர்பு ஊதப் பிடவுத்தளை அவிழ  
அரும்பொறி மஞ்ஜை ஆல வரிமணல்  
மணிமிடை பவளம் போல அணிமிகக்  
காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவும்  
ஈயல் மூதாய் ஈர்ம்புறம் வரிப்பப்  
புலனணி கொண்ட காரெதிர் காலை  
'ஏந்துகோட்டு யானை வேந்தன் பாசறை  
வினையொடு வேறுபுலத்து அல்கி நன்றும்  
அறவர் அல்லர்நம் அருளா தோரன  
நந்நோய் தன்வயின் அறியாள்  
எந்நொந்து புலக்குங்கொல் மாஅ யோளே?

> As dark rainclouds ascend the vast sky,  
> like torn eyes of water-laden palmyra fruits,  
> hailstones that feel like shivering fright fall in heavy drops,  
> and the sky, having practiced, pours forth colored torrents at early dawn  
> smelling of raw earth; in the red soil resembling worked metal,  
> drinking clear water held still as if stored,  
> a tender-striding doe embracing her little fawn,  
> rests in the staying shade of a waving kuruntu tree  
> along with the majestic blackbuck antelope with right-spiraled horns;  
> humming bees buzz, pidavu buds untie their bonds,  
> peacocks with rare spots dance, and upon the striped sand,  
> fallen flowers of the kāyā spread in great beauty  
> like sapphires mixed with corals, while winged white ants and velvet mites  
> mark the damp surface with lines; in this dawn facing the rainy season,  
> when the land has taken on beauty—'Remaining in an alien land with duty  
> at the camp of the king with uplifted tusked elephants,  
> he who has no grace for us is not righteous at all,'  
> so not knowing my distress for her,  
> suffering what sorrow will the dark-complexioned girl sulk?  
> — English (machine translation) (machine translation)

- [Previous: 303](https://indike.org/pramana/in.sangam.eight_anthologies.akananuru.303)
- [Next: 305](https://indike.org/pramana/in.sangam.eight_anthologies.akananuru.305)

## Translations (1)

- [English (machine translation)](https://indike.org/pramana/in.sangam.eight_anthologies.akananuru~en-mt.304) — English, machine translation

---
Source: [https://indike.org/pramana/in.sangam.eight_anthologies.akananuru.304](https://indike.org/pramana/in.sangam.eight_anthologies.akananuru.304) · Pramāṇa
