<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.eight_anthologies.purananuru.71 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Eight Anthologies](https://indike.org/pramana/in.sangam.eight_anthologies) › [Purananuru](https://indike.org/pramana/in.sangam.eight_anthologies.purananuru) › 71

# Purananuru 71: இவளையும் பிரிவேன்! — பாடியவர்: ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் — திணை: காஞ்சி துறை: வஞ்சினக் காஞ்சி

Puṟanāṉūṟu 71

- **Language:** Tamil

### [71](https://indike.org/pramana/in.sangam.eight_anthologies.purananuru.71)

மடங்கலின் சினைஇ, மடங்கா உள்ளத்து,  
அடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்து  
என்னொடு பொருந்தும் என்ப ; அவரை  
ஆரமர் அலறத் தாக்கித் தேரொடு  
அவர்ப்புறம் காணேன் ஆயின் - சிறந்த  
பேரமர் உண்கண் இவளினும் பிரிக:  
அறன்நிலை திரிய அன்பின் அவையத்துத்,  
திறன்இல் ஒருவனை நாட்டி, முறை திரிந்து  
மெலிகோல் செய்தேன் ஆகுக; மலி புகழ்  
வையை சூழ்ந்த வலங்கெழு வைப்பின்  
பொய்யா யாணர் மையற் கோமான்  
மாவனும், மன்எயில் ஆந்தையும், உரைசால்  
அந்துவஞ் சாத்தனும், ஆதன் அழிசியும்,  
வெஞ்சின இயக்கனும், உளப்படப் பிறரும்,  
கண்போல் நண்பிற் கேளிரொடு கலந்த  
இன்களி மகிழ்நகை இழுக்கிய யான் ஒன்றோ,  
மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த  
தென்புலம் காவலின் ஒரிஇப், பிறர்  
வன்புலங் காவலின் மாறி யான் பிறக்கே!

> Furious like Kālaṉ, kings with unyielding hearts / and uncontrollable armies have united, saying / they will fight against me; / if I do not strike them in a harsh battle causing them to wail / and see their backs along with their chariots— / let me be separated from her of eminent, wide, fighting, kohl-rimmed eyes; / having appointed an incapable man in the assembly / where love has abandoned the standing of righteousness, may I become one who practiced a weak scepter, perverting justice; / or, having missed the pleasant joy and laughter shared with eye-like friends and kin / including Māvaṉ, lord of Maiyal of unfailing yields / in the prosperous region surrounded by the celebrated Vaiyai, / and Āntai of enduring fortress, renowned Antuvañ Cāttaṉ, / Ātaṉ Al̲ici, and fierce-tempered Iyakkaṉ, / may I be cast out from ruling the southern realm / distinguished by an ancient lineage protecting humanity, / and be reborn to rule the harsh lands of others!  
> — English (machine translation)

- [Previous: 70](https://indike.org/pramana/in.sangam.eight_anthologies.purananuru.70)
- [Next: 72](https://indike.org/pramana/in.sangam.eight_anthologies.purananuru.72)

## Translations (1)

- [English (machine translation)](https://indike.org/pramana/in.sangam.eight_anthologies.purananuru~en-mt.71) — English, machine translation

## Commentaries (1)

- [Puṟanāṉūṟu paḻaiya urai](https://indike.org/pramana/in.sangam.eight_anthologies.purananuru!old-urai.71) — Tamil

## Other recensions (1)

- [Puṟanāṉūṟu (romanised, ISO 15919)](https://indike.org/pramana/in.sangam.eight_anthologies.purananuru*romanised.71) — Tamil

## Discussed in (1)

- [The Pāṇḍyan Kingdom from the Earliest Times to the Sixteenth Century](https://indike.org/pramana/ins.general.sastri-1929.c7.18) — Sastri 1929, English

---
Source: [https://indike.org/pramana/in.sangam.eight_anthologies.purananuru.71](https://indike.org/pramana/in.sangam.eight_anthologies.purananuru.71) · Pramāṇa
