<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.11.7 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 11.7

# Maṇimēkalai's Renunciation 11.7

Maṇimēkalai urai 11.7

- **Language:** Tamil

### [11.7](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.11.7)

மந்திரங் கொடுத்த காதை  
  
35  
விராமலர்க் கூந்தங் அவன்வாய் புதையா  
வானூ டிழிந்தோன் மலரடி வணங்காது  
நாநல் கூர்ந்தனை என்றவன் றன்னொடு  
பகையறு பாத்தியன் பாதம் பணிந்தாங்  
கமர கெள்நின் தமரல மாயினும்  
அந்தீந் தண்ணீர் அமுதொடு கொணர்கேம்  
உண்டி யாமுன் குறிப்பின மென்றலும்  
  
32  
  
உரை  
  
38  
  
விரா மலர்க் கூந்தல் அவன் வாய் புதையா - மணம் பொருந்திய மலர்களை யணிந்த கூந்தலையுடைய நீ அவன் வாயைப் புதைத்து, வானூடு இழிந்தோன் மலர் அடிவணங்காது நா நல் கூர்ந்தனை என்று - விசும்பினின்றும் இறங்கிய பெரியோனின் திருவடி மலர்களை வணங்காமல் நா வறுமையுற்றனை என்று கூறி, அவனொடும் பகையறு பாத்தியன் பாதம் பணிந்தாங்கு-பகைகளையறுத்த புத்ததேவன் திருவடிக்கு அன்பனாகிய அம்முனிவனுடைய அடிகளை அவனோடும் வணக்கஞ்செய்து, அமர கேள் நின் தமரலம் ஆயினும்-தேவனே கேட்பாயாக யாம் நினக்குச் சிறந்த அன்பரல்லே மாயினும், அம் தீந்தண்ணீர் அமுதொடு கொணர்கேம் - இனிய குளிர்ந்த நீரும் உணவும் கொண்டு வருமேம், உண்டி - அவற்றை உண்பாய், யாம் உன் குறிப்பினம் என்றலும்-அடியேங்கள் நின் குறிப்பின்வழி ஒழுகுவேம் என்று நீ உரைத்தலும்.  
  
வானூடிழிந்தமையே அவனது பெருமையை விளக்குமென்று குறிப்பித்தவாறாயிற்று. நாவானது சாரணனைத் துதித்தலாகிய பயன் கொள்ளாமையின் நா வறுமையுற்றாய் என்றாள். பகை - காம வெகுளி முதலிய உட்பகை. பாத்தியன் - அடியான் என்னும் பொருட்டு ; நம்பியாண்டார் நம்பிகள் மாணிக்கவாசகரைத் 'திருவாதவூர்ச் சிவ பாத்தியன்,' என்று கூறினமையுங் காண்க. உண்டி - உண்ணுதி: வேண்டிக்கோடலில் வந்தது.

- [Previous: 11.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.11.6)
- [Next: 11.8](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.11.8)
- [Up: 11](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.11)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.10.36) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.11.7](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.11.7) · Pramāṇa
