<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.11 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 11

# Maṇimēkalai's Renunciation 11

Maṇimēkalai urai 11

- **Language:** Tamil

### [11.1](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.11.1)

மந்திரங் கொடுத்த காதை  
  
5 அறவோ னாசனத் தாயிழை யறிந்த  
பிறவிய ளாயினள் பெற்றியு மைதென  
விரைமல ரேந்தி விசும்பூ டிழிந்து  
பொருவறு பூங்கொடி பூமியிற் பொலிந்தென  
வந்து தோன்றிய மணிமே கலாதெய்வம்  
  
1  
  
உரை  
  
5  
  
அறவோன் ஆசனத்து ஆயிழை அறிந்த பிறவியள் ஆயினள் - மணிமேகலை புத்தனது பாத பீடிகையால் அறியப்பட்ட பிறவியை உடையளாயினாள், பெற்றியும் ஐது என - இவள் பெற்ற பேறும் அழகிது என்று, விரைமலர் ஏந்தி விசும்பூடு இழிந்து - மணம் பொருந்திய மலர்களை ஏந்தி விசும்பினின்றும் இறங்கி, பொருவறு பூங்கொடி பூமியில் பொலிந்தென - ஒப்பற்ற பூங்கொடியானது பூமியின்கண் பொலிவு பெற்றாற்போல, வந்து தோன்றிய மணிமேகலா தெய்வம--;  
  
அறிந்த பிறவியள் - முற்பிறப்பை யறிந்தவள் என்க. பெற்றி - பேறு; ¹"பிணிப்பறுத் தோர்தம் பெற்றி யெய்தவும்" என்பதிற்போல. பூங்கொடி ஏந்தி இழிந்து பொலிந்தெனத் தோன்றிய தெய்வ மென்க.  
  
1 சில்ப். 15 :100.

### [11.2](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.11.2)

மந்திரங் கொடுத்த காதை  
  
10 முந்தைப் பிறப்பெய்தி நின்றோள் கேட்ப  
உயிர்க ளெல்லாம் உணர்வுபா ழாகிப்  
பொருள்வழங்கு செவித்துளை தூர்ந்தறி விழந்த  
வறந்தலை யுலகத் தறம்பாடு சிறக்கச்  
சுடர்வழக் கற்றுத் தடுமாறு காலையோர்  
இளவள ஞாயிறு தோன்றிய தென்ன  
நீயோ தோன்றினை நின்னடி பணிந்தேன  
  
6  
  
உரை  
  
12  
  
முந்தைப் பிறப்பு எய்தி நின்றோள் கேட்ப - முற்பிறப்பினையறிந்து நின்ற மணிமேகலை கேட்க, உயிர்கள் எல்லாம் உணர்வு பாழாகி-உயிர்கள் யாவும் உணர்வு பாழடைந்து, பொருள் வழங்கு செவித்துளை தூர்ந்து-அறம் வழங்குதற்குரிய செவிகளின் துளை அதனைக் கேளாது தூர்ந்து, அறிவு இழந்த வறந்தலை உலகத்து - அறிவினை யிழந்த வறுமையைத் தன்னிடத்தே உள்ள உலகின்கண் அறம் பாடு சிறக்க - அறத்தின் கூறுபாடுகள் சிறப்படையுமாறு, சுடர்வழக்கு அற்றுத் தடுமாறு காலை ஓர் இளவள ஞாயிறு தோன்றியது என்ன - ஒளி வழங்குதலின்றித் தடுமாறுகின்ற பொழுதில் ஓர் அழகிய இளம் பரிதி தோன்றியதுபோல, நீயோ தோன்றினை நின் அடிபணிந்தேன்-நீயோ உதித்தருளினை நின் திருவடிகளைப் பணிந்தேன் ;  
  
பொருள் - உறுதிப்பொருள் ; ஈண்டு அறம்; ¹"பொருணீங்கிப் பொச்சாந்தார்" என்புழிப் பரிமேலழகர் உரைத்தமை காண்க அறிவிழந்த வறந்தலை யுலகம் - அறிவின்மையாகிய வறுமையையுடைய உலக என்க. அறம்பாடு என்பதற்கு அறத்தின் தோற்றம் என்றும், சுடர் என்பதற்கு ஞாயிறு என்றும் கூறுதலுமாம்.  
  
1 குறள். 246.

### [11.3](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.11.3)

மந்திரங் கொடுத்த காதை  
  
15 நீயே யாகிநிற் கமைந்த இவ் வாசனம்  
நரமிசை வைத்தேன் தலைமிசைக் கொண்டேன்  
பூமிசை யேற்றினேன் புலம்பறு கென்றே  
வலங்கொண் டாசனம் வணங்குவோள் முன்னர்ப்  
  
12  
  
உரை  
  
16  
  
நீயே ஆகி நிற்கு அமைந்த இவ் வாசனம்-நீயே யாகி நினக்கு அமைந்த இப் பீடிகையை, நாமிசை வைத்தேன் தலைமிசைக் கோண்டேன் - நாவாற்றுதித்தேன் தலையால் வணங்கினேன், பூமிசை ஏற்றினேன் - உள்ளத் தாமரையின்மீது இருத்தினேன். புலம்பு அறுக என்று - என் வருத்தம் நீங்குக என்று கூறி, வலங் கொண்டு ஆசனம் வணங்குவோள் முன்னர் - பீடிகையை வலங் கொண்டு பணிகின்ற மணிமேகலா தெய்வத்தின் முன்னே; நீயே யாகி நிற்கமைந்த இவ் வாசனம் என்றமையால் பீடிகையின் வழிபாடு புத்த தேவன் வழிபாடே யென்பது போதரும். பூ - நெஞ்சத் தாமரை.

### [11.4](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.11.4)

மந்திரங் கொடுத்த காதை  
  
பொலங்கொடி நிலமிசைச் சேர்ந்தெனப் பொருந்தி  
உன்றிரு வருளால் என்பிறப் புணர்ந்தேன்  
என்பெருங் கணவன் யாங்குள னென்றலும்  
  
17  
  
உரை  
  
19  
  
பொலங்கொடி நிலமிசைச் சேர்ந்து எனப் பொருந்தி-மணி மேகலை பொற்கொடியானது நிலத்தின் மீது சேர்ந்தாற்போல விழுந்து வணங்கி, உன் திருவருளால் என் பிறப்பு உணர்ந்தேன்- நின்னுடைய திருவருளினாலே என்னுடைய முற்பிறவியை அறிந்தேன், என் பெருங் கணவன் யாங்குளன் என்றலும்-என் பெருங் கொழுநன் எவ்விடத்துப் பிறந்துளான் என்று கேட்பவும் ; பொலங்கொடி - பொற்கொடி ; காமவல்லி.

### [11.5](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.11.5)

மந்திரங் கொடுத்த காதை  
  
20  
  
25  
இலக்குமி கேளாய் இராகுலன் றன்னொடு  
புலத்தகை யெய்தினை பூம்பொழி லகவயின்  
இடங்கழி கமாமொ டடங்கா னாயவன்  
மடந்தை மெல்லியல் மலரடி வணங்குழிச்  
சாது சக்கரன் மீவிசும்பு திரிவோன்  
தெருமர லொழித்தாங் கிரத்தின தீவத்துத்  
தரும சக்கரம் உருட்டினன் வருவோன்.  
வெங்கதிர் அமயத்து வியன்பொழில் அகவயின்  
வந்து தோன்றலும் மயங்கினை கலங்கி  
  
20  
  
உரை  
  
28  
  
இலக்குமி கேளாய்-இலக்குமியே கேட்பாயாக; இராகுலன் தன்னொடு புலத்தகை எய்தினை பூம்பொழில் அகவையின் - நீ நின் கணவனாகிய இராகுலனோடு பூச்சோலையின் உள்ளிடத்தே ஊடலுற்றனை, இடங்கழி காமமொடு அடங்கானாய் அவன்-அப்பொழுது அவன் வரம்பு கடந்து எழுதற்குக் காரணமாகிய காமத்தொடு அடங்காதவனாய், மடந்தை மெல்லியல் மலரடி வணங்குழி-மெல்லியில் மடந்தையாகிய நின் மலர்போலும் அடிகளை வணங்கும் பொழுது, சாதுசக்கரன் மீவிசும்பு திரிவோன்-உயர்ந்த வானின் கண் திரிவோனாகிய சாதுசக்கரன் என்னும் முனிவன், தெருமரல் ஒழிந்தாங்கு இரத்தின தீவத்து - மனக்கவற்சி நீங்கி இரத்தின தீவத்தின்கணிருந்து, தருமசக்கரம் உருட்டினன் வருவோன் -அறவாழியை உருட்டிக்கொண்டு வருகின்றவன், வெங்கதிர் அமயத்து-நண்பகற்பொழுதிலே, வியன்பொழில் அகவயின் வந்து தோன்றலும்-அப் பரந்த சோலையினுள்ளே வந்து தோன்றுதலும்;  
  
பழம்பிறப பெய்தி நின்றாளாகலின் அத்தெய்வம் மணிமேகலையை இலக்குமியென் றழைத்தது. புலத்தை - ஊடற்றன்மை; ஊடற் கூறுமாம். இடங்கழி காமம் - வரம்பு கடந்த காமமுமாம்; இடங்கழி என்பதே காமத்தை யுணரத்தலுமுண்டு. மெல்லியல் மலர் எனக் கொண்டு, மென்மைத் தன்மையுடைய மலர்போலும் அடி யென்னலுமாம். சாதுசக்கரன் - சாதுக்களின் மண்டலத்திலுள்ளவன் எனப் பொருள்படும் காரணப்பெயர்; ஓம் மணிபத்மேஹும் என்னும் மந்திரம் சுற்றிலும் எழுதப்பட்ட உலோகத்தாலாகிய சக்கரத்தை வலக்கையில் வைத்துச் சுழற்றிகொண்டிருத்தல் பௌத்தர்களிற் சிலருடைய வழக்கமென்றும், இவனும் அங்ஙனம் செய்பவனாதல் வேண்டுமென்றும் கூறுவர். இரத்தின தீவம்-இது மணிபல்லவத்திற்கு அயலிலுள்ளதோர் சிறு தீவு ; இத் தீவும், இதிலுள்ள சமந்தமென்னும் மலை முதலியவும் வரும் காதையானறியப்படும். தருமத்தைத் தடையின்றிச் செலுத்தினானென்பார், அதனைச் சக்கரமாக உருவகப்படுத்தி, உருட்டினான் என்றார். முன்பு "அறக்கதி ராழி திறப்பட வுருட்டி" (5.76) என்றமையுங் காண்க. சாதுசக்கரன் திரிவோன் வருவோன் வந்து தோன்றுதலுமென்க.

### [11.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.11.6)

மந்திரங் கொடுத்த காதை  
  
30  
வந்து தோன்றலும் மயங்கினை கலங்கி  
மெல்இயல் கண்டனை மெய்ந்நடுக் குற்றனை  
நல்கூர் நுசுப்பினை நாணினை இறைஞ்ச  
இராகுலன் வந்தோன் யார்என வெகுளலும  
  
28  
  
உரை  
  
31  
  
மயங்கினை கலங்கி மெல்லியல் கண்டனை மெய் நடுங் குற்றனை - மெல்லியலே நீ அவனைக் கண்டு மயங்கிக் கலக்கமுற்று உடல் நடுக்கமடைந்த, நல்கூர் நுசுப்பினை நாணினை இறைஞ்ச- வறுமை யெய்திய இடையினை யுடையையாய் நாணமுற்று வணங்க, இராகுலன் வந்தோன் யார் என வெகுளலும் - ஈண்டு வந்தவன் யாவன் என இராகுலன் சினங்கொள்ளலும்;  
  
மெலிந்து ஒசிவதனை நல்கூரந்ததென்று உபசரித்தார். கணவன் தன் அடியில் வணங்குழி வந்தனனாகலின் நாணுதலுற்றாளென்க. மயங்குதல் முதலியன இறைபொருளாகப் பிறந்த அச்சமென்னும் மெய்ப்பாடு. இராகுலன் வெகுண்டமை குடிகோள் பற்றி வந்த வெகுளி யென்னும் மெய்ப்பாடு.

### [11.7](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.11.7)

மந்திரங் கொடுத்த காதை  
  
35  
விராமலர்க் கூந்தங் அவன்வாய் புதையா  
வானூ டிழிந்தோன் மலரடி வணங்காது  
நாநல் கூர்ந்தனை என்றவன் றன்னொடு  
பகையறு பாத்தியன் பாதம் பணிந்தாங்  
கமர கெள்நின் தமரல மாயினும்  
அந்தீந் தண்ணீர் அமுதொடு கொணர்கேம்  
உண்டி யாமுன் குறிப்பின மென்றலும்  
  
32  
  
உரை  
  
38  
  
விரா மலர்க் கூந்தல் அவன் வாய் புதையா - மணம் பொருந்திய மலர்களை யணிந்த கூந்தலையுடைய நீ அவன் வாயைப் புதைத்து, வானூடு இழிந்தோன் மலர் அடிவணங்காது நா நல் கூர்ந்தனை என்று - விசும்பினின்றும் இறங்கிய பெரியோனின் திருவடி மலர்களை வணங்காமல் நா வறுமையுற்றனை என்று கூறி, அவனொடும் பகையறு பாத்தியன் பாதம் பணிந்தாங்கு-பகைகளையறுத்த புத்ததேவன் திருவடிக்கு அன்பனாகிய அம்முனிவனுடைய அடிகளை அவனோடும் வணக்கஞ்செய்து, அமர கேள் நின் தமரலம் ஆயினும்-தேவனே கேட்பாயாக யாம் நினக்குச் சிறந்த அன்பரல்லே மாயினும், அம் தீந்தண்ணீர் அமுதொடு கொணர்கேம் - இனிய குளிர்ந்த நீரும் உணவும் கொண்டு வருமேம், உண்டி - அவற்றை உண்பாய், யாம் உன் குறிப்பினம் என்றலும்-அடியேங்கள் நின் குறிப்பின்வழி ஒழுகுவேம் என்று நீ உரைத்தலும்.  
  
வானூடிழிந்தமையே அவனது பெருமையை விளக்குமென்று குறிப்பித்தவாறாயிற்று. நாவானது சாரணனைத் துதித்தலாகிய பயன் கொள்ளாமையின் நா வறுமையுற்றாய் என்றாள். பகை - காம வெகுளி முதலிய உட்பகை. பாத்தியன் - அடியான் என்னும் பொருட்டு ; நம்பியாண்டார் நம்பிகள் மாணிக்கவாசகரைத் 'திருவாதவூர்ச் சிவ பாத்தியன்,' என்று கூறினமையுங் காண்க. உண்டி - உண்ணுதி: வேண்டிக்கோடலில் வந்தது.

### [11.8](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.11.8)

Try error :java.lang.NullPointerException

### [11.9](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.11.9)

மந்திரங் கொடுத்த காதை  
  
45  
உவவன மருங்கில் உன்பாற் றோன்றிய  
உதய குமரன் அவனுன் னிராகுலன்  
ஆங்கவ னன்றியும் அவன்பா லுள்ளம்  
நீங்காத் தன்மை நினக்குமுண் டாகலின்  
கந்த சாலியின் கழிபெரு வித்தோர்  
வெந்துகு வெங்களர் வீழ்வது போன்மென  
அறத்தின் வித்தாங் காகிய வுன்னையோர்  
திறப்படற் கேதுவாய்ச் சேயிழை செய்தேன  
  
42  
  
உரை  
  
49  
  
உவவன மருங்கில் உன்பால் தோன்றிய உதயகுமரன் அவன் உன் இராகுலன் - உவவனத்தில் நின்னிடம் வந்த உதயகுமரனாகிய அவனே நின் கணவன் இராகுலன், ஆங்கவன் அன்றியும் அவன்பால் உள்ளம் நீங்காத் தன்மை நினக்கும் உண்டாகலின் - அவ் வுதயகுமரன் நின்பால் நீங்காத விருப்பதைச் செலுத்துவதன்றியும் அவனிடஞ் சென்ற உள்ளம் நீங்காததன்மை நினக்கும் உள்ளமையால், கந்தசாலியின் கழிபெருவித்து-கந்தசாலி என்னும் நெல்லின் மிகச் சிறந்த விதை, வெந்து உகு வெண்களர் வீழ்வது போன்ம் என - வெந்து உருகுகின்ற வெள்ளிய உப்பு நிலத்தில் வீழ்கின்றதுபோலும் என்று, அறத்தின் வித்தாங்கு ஆகிய உன்னை ஓர் திறப்படற்கு ஏதுவாச் சேயிழை செய்தேன் - சேயிழாய் அறத்தின் விதையாகிய நின்னை மனம் ஒரு வழிப்படுதற்குக் காரணமாகச் செய்தேன் ;  
  
குமரனாகிய அவனென்க. அவன் அன்றியும் - அவன் உன்பால் உள்ளம் நீங்காதிருப்பதன்றியும் என விரித்துரைக்க. மணிமேகலை உதயகுமரனை இடைவிடாது நினைத்திருந்தாள் என்பது, அவன் வெட்டுண்டிறந்தபொழுது, ¹"உவவன மருங்கி னின்பா லுள்ளம் தவிர்விலேனாதலின்" என்று அவள் அவனைக் குறித்துக் கூறுவதனால் அறியப்படும். சாலி - சிறந்த நெல், கந்தசாலி - மணமுள்ள ஒருவகைச் சிறந்த நெல், அறத்திற்கு மூலமாகிய நீ உதயகுமரனை விரும்பின் நின்னியல்பு கந்தசாலியின் வித்துக் களர் நிலத்து விழ்ந்ததுபோன்று பயன்றறுப்போம் என்றபடி. மணிமேகலையின் உயர்வுபற்றிக் கந்தசாலியை உவமை கூறினார். போன்ம்: ஈற்றுமிசை யுகரங்கெட்டு மயக்க விதியின்மையின் லகரம் திரிந்து வந்தது.  
  
¹ மணி. 21: 13-4.

### [11.10](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.11.10)

மந்திரங் கொடுத்த காதை  
  
50  
  
55 இன்னுங் கேளாய் இலக்குமி நீநின்  
தவ்வைய ராவோர் தாரையும் வீரையும்  
ஆங்கவர் தம்மை யங்கநாட் டகவயின்  
கச்சய மாளுங் கழற்கால் வேந்தன்  
துச்சய னென்போன் ஒருவன் கொண்டனன்  
அவருட னாங்கவன் அகன்மலை யாடிக்  
கங்கைப் பேரியாற் றடைகரை யிருந்துழி  
  
50  
  
உரை  
  
56  
  
இன்னும் கேளாய் இலக்குமி நீ-இலக்குமி நீ இன்னும் கேட்பாயாக, நின் தவ்வையர் ஆவோர் தாரையும் வீரையும் - நின் முற் பிறந்தோர் தாரையும் வீரையும் ஆவர், ஆங்கவர் தம்மை - அவர்களை, அங்கநாட்டு அகவயின் - அங்கநாட்டினுள்ளதாகிய, கச்சயம் ஆளும் கழற்கால் வேந்தன் - கச்சய நகரத்தை ஆண்ட வீரக் கழலணிந்த காலையுடைய வேந்தனாகிய, துச்சயன் என்போன் ஒருவன் கொண்டனன்-துச்சயன் என்னும் பெயருடைய ஒருவன் மணந்தனன், அவருடன் ஆங்கவன் அகன்மலை ஆடி - அம் மன்னவன் அம் மகளிருடன் அகன்ற மலைப்பக்கங்களில் விளையாடி, கங்கைப்பேரியாற்று அடைகரை இருந்துழி - கங்கையாற்றின் அடைகரையில் இருந்தபொழுது ;  
  
குதவ்வை - தமக்கை ; ¹"செய்யவள், தவ்வையைக் காட்டிவிடும்" என்பது காண்க.  
  
¹ குறள். 197

### [11.11](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.11.11)

மந்திரங் கொடுத்த காதை  
  
60 மறவண நீத்த மாசறு கேள்வி  
அறவண னாங்கவன் பாற்சென் றோனை  
ஈங்கு வந்தீர் யாரென் றெழுந்தவன  
பாங்குளி மாதவன் பாதம் பணிதலும  
  
57  
  
உரை  
  
60  
  
மறவணம் நீத்த மாசறு கேள்வி அறவணன் ஆங்கவன்பால் சென்றோனை - பாவத்தன்மைகளைத் துறந்த குற்றமற்ற கேள்வியினையுடைய அறவணன் என்னும் மாதவன் துச்சயனிடம் வந்தோனை, ஈங்கு வந்தீர் யார் என்று எழுந்து அவன்பாங்கு உளி மாதவன் பாதம் பணிதலும்-துச்சயன் ஈண்டு வந்தீராகிய நீவிர் யார் என எழுந்து அம் முனிவனுடைய இயல்பினை நினைந்து அவன் திருவடிகளை வணங்குதலும்.  
  
சென்ற அறவணனையென மாறுதலுமாம். "மறவண நீத்த மாசறு கேள்வி, அறவண வடிகள்" (2: 60-1.) என முன்பு வந்தமையுங் காண்க. எழுந்தவன்-எழுந்தோன் என்றுமாம், பாங்கு-இயல்பு, சிறப்பு, உளி-உள்ளி.

### [11.12](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.11.12)

மந்திரங் கொடுத்த காதை  
  
65  
  
70  
ஆதி முதல்வன் அறவாயி யாள்வோன்  
மாதுய ரெவ்வ மக்களை நீக்கி  
விலங்குந் தம்முள் வெரூஉம்பகை நீக்கி  
உடங்குயிர் வாழ்கவென் றுள்ளங் கசிந்துகத்  
தொன்றுகா லத்து நின்றற முரைத்த  
குன்ற மருங்கிற் குற்றங் கெடுங்கும்  
பாத பங்கயங் கிடத்தலின் ஈங்கிது  
பாதபங் கயமலை எனும்பெயரத் தாயது்  
தொழுது வலங்கொள்ள வந்தேன் ஈங்கிப்  
பழுதில் காட்சியீர் நீயிருந் தொழுமென  
  
61  
  
உரை  
  
70  
  
ஆதிமுதல்வன் அறவாழி ஆள்வோன்-ஆதிமுதல்வனும் அறமாகிய திகிரியை உருட்டுவோனுமாகிய புத்தன், மாதுயர் எவ்வம் மக்களை நீக்கி-மக்கள் பிறப்பு இறப்புகளாகிய மிக்க துன்பத்தினின்றும் நீக்கி, விலங்கும் தம்முள் வெரூஉம் பகை நீக்கி- விலங்குகளையும் தம்முள்ளே அஞ்சுதற்குக் காரணமாகிய பகைமையை நீங்கச் செய்து, உடங்கு உயிர்வாழ்க என்று உள்ளம் கசிந்து உக - எவ்வுயிரும் தம்முள் ஒற்றுமையுடையனவாக வாழ்க என்று அருளினாலே உள்ளம் இரங்கி உருக, தொன்று காலத்து நின்று அறம் உரைத்த-முற்காலத்தில் எல்லா உயிர்களும் காணுமாறு நின்று அறங்கூறிய, குன்ற மருங்கில் குற்றம் கெடுக்கும்பாத பங்கயம் கிடத்தலின் - குன்றத்தின்கண் காமமாதி குற்றங்களை அழிக்கும் திருவடித் தாமரைகள் விளங்கிக் கிடத்தலினால், ஈங்கிது பாதபங்கயமலை எனும் பெயர்த்தாயது - இது பாதபங்கயமலை எனும் பெயரினையுடைத்தாயிற்று,  
தொழுது வலங்கொள்ள வந்தேன் ஈங்கு - யான் இம்மலையை வலங்கொண்டு வணங்குமாறு ஈண்டு வந்தேன், பழுதில் காட்சியீர் நீயிரும் தொழுமென - குற்றமற்ற அறிவினையுடைய நீவிரும் வணங்குவீராக என்று கூற;  
  
துயர் எவ்வம்: ஒரு பொருட் பன்மொழி. கேட்டோர் உள்ளம் கசிந்து உக என்றுமாம். உரைத்த குன்றமாவது மகததேயத்தின் இராசதானியாகிய இராசக்கிருக நகரின் அருகிலுள்ள கிருத்திரகூடம் என்னும் மலையென்பர். பாதபங்கயம் - புத்தனுடைய பாததாமரை.

### [11.13](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.11.13)

மந்திரங் கொடுத்த காதை  
  
அன்றவ னுரைத்த அவ்வுரை பிழையாது  
சென்றுகை தொழுது சிறப்புச் செய்தலின்  
மாதவி யாகியுஞ் சுதமதி யாகியும்  
கோதையஞ் சாயல் நின்னொடு கூடினர  
  
71  
  
உரை  
  
74  
  
அன்று அவன் உரைத்த அவ்வுரை பிழையாது - அந்நாளில் அறவணவடிகள் கூறிய அம்மொழி தவறாமல், சென்று கை தொழுது சிறப்புச் செய்தலின் - சென்று கைகூப்பித் தொழுது விழாச் செய்தமையால், மாதவியாகியும் சுதமதியாகியும் கோதையஞ் சாயல் நின்னொடு கூடினர் - மலர் மாலையையுடைய மெல்லியலே அவ்விருவரும் மாதவியும் சுதமதியும் ஆகி நின்னொடுகூடினர்; சிறப்புச் செய்தல் - பூசித்தலுமாம்.

### [11.14](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.11.14)

மந்திரங் கொடுத்த காதை  
  
75  
  
80 அறிபிறப் புற்றனை அறம்பா டறிந்தனை  
பிறவற முரைப்போர் பெற்றியுங் கேட்குவை  
பல்வேறு சமயப் படிற்றுரை யெல்லாம்  
அல்லியங் கோதை கேட்குறு மந்நாள்  
இளையள் வளையோ யென்றுனக் கியாவரும்  
விளைபொரு ளுரையார் வேற்றுரு வெய்தவும்  
அந்தரந் திரியவும் ஆக்குமிவ் வருந்திறன்  
மந்திரங் கொள்கென வாய்மையி னோதி  
  
75  
  
உரை  
  
82  
  
அறிபிறப்புற்றனை அறம்பாடு அறிந்தனை - முற்பிறவியை அறிந்தாய் அறத்தின் தோற்றத்தை உணர்ந்தாய், பிற அறம் உரைப்போர் பெற்றியும் கேட்குவை - பிறசமய உண்மைகளைக் கூறுவோர் பேற்றையும் கேட்பாய், பல்வேறு சமயப் படிற்றுரை எல்லாம் அல்லியங்கோதை கேட்குறும் அந்நாள்-பலவேறு சமயங்களின் பொய்யுரைகளை யெல்லாம் நீ கேட்கப் புகும் அந்நாளில், இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும் விளைபொருள் உரையார் - இளமைத் தன்மையையுடையாள் வளையணிந்த நங்கை என்று நினக்கு எவரும் தம் சமயங்களின் விளைபொருளைக் கூறார் ஆகலின், வேற்றுரு எய்தவும் அந்தரம் திரியவும் ஆக்கும் இவ் வருந்திறல் மந்திரம் கொள்க என - வேற்று வடிவங்கொள்ளவும் விசும்பின் வழியாகச் செல்லவும் செய்யும் அரிய ஆற்றலையுடைய இம் மந்திரத்தைக் கொள்வாயாக என்று, வாய்மையின ஓதி-நால் வகை வாய்மையுடன் கூறியருளி.  
  
அறம்பாடு - அறத்தின் கூறென்றும், அறத்தின் இயல்பென்றும் உரைத்தலுமாம். பிற அறம் என்றது பிற சமயக் கொள்கைகளை. பெற்றி - பேறு ; இயல்பென்றுமாம். அல்லியங்கோதை அகவிதழ்களாலாகிய மாலையை யுடையாள் ; ஈண்டு முன்னிலை. வாய்மையின் - உண்மையுடன் என்றுமாம்.

### [11.15](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.11.15)

மந்திரங் கொடுத்த காதை  
  
85  
  
90 மதிநாண் முற்றிய மங்களத் திருநாள்  
பொதுவறி விகழ்ந்து புலமுறு மாதவன்  
திருவற மெய்துதல் சித்தமென் றுணர்நீ  
மன்பெரும் பீடிகை வணங்கினை யேத்தி  
நின்பதிப் புகுவாய் என்றெழுந் தோங்கி  
மறந்தது முண்டென மறிந்தாங் கிழிந்து  
சிறந்த கொள்கைச் சோயிழை கேளாய்  
மக்கள் யாக்கை உணவின் பிண்டம்  
இப்பெரு மந்திரம் இரும்பசி யறுக்குமென்  
றாங்கது கொடுத்தாங் கந்தர மெழுந்து  
நீங்கிய தாங்கு நெடுந்தெய்வந் தானென்  
  
83  
  
உரை  
  
93  
  
மதிநாள் முற்றிய மங்கலத் திருநாள் - நாள்தோறும் ஒவ்வொரு கலையாக வளர்ந்து முற்றுப்பெற்ற அழகிய நிறையுவா நாளில், பொது அறிவு இகழ்ந்து புலம் உறு மாதவன் - பொதுவாகிய அறிவினை வெறுத்துச் சிறப்பாகிய மெய்யுணர்வினைப் பெற்ற புத்தனுடைய, திருஅறம் எய்துதல் சித்தம் என்று உணர் நீ - உயர்வாகிய அறத்தை யடைதல் உண்மை என்பதை நீ அறிவாயாக, மன்பெரும் பீடிகை வணங்கினை ஏத்தி - மிக்க பெருமையுடைய பீடிகையை வணங்கித் துதித்து, நின்பதிப் புகுவாய் என்று எழுந்து, ஓங்கி-நினது பதியின்கட் செல்வாய் என்று கூறி உயர எழுந்து, மறந்ததும் உண்டென மறித்து ஆங்கு இழிந்து - மீட்டும் அவ்விடத்தே இறங்கி யான் மறந்தது ஒன்று உண்டென்று கூறி, சிறந்த கொள்கைச் சேயிழை கேளாய் - சிறந்த விரதத்தையுடைய சேயிழையே அதனைக் கேட்பாயாக, மக்கள் யாக்கை உணவின் பிண்டம்-மக்களின் உடல் உணவாலாகிய தொகுதி, இப்பெரு மந்திரம் இரும் பசி அறுக்கும் என்று - இப் பெரிய மந்திரமானது பெரும் பசியை நீக்கவல்லது என்று கூறி, ஆங்கது கொடுத்தாங்கு அந்தரம் எழுந்து நீங்கியது ஆங்கு நெடுந் தெய்வம் தான் என் - அம் மந்திரத்தை அளித்துப் பெருமையுடைய மணி மேகலா தெய்வம் வானிலே எழுந்து நீங்கியது என்க.  
  
மங்கலம் - நன்மை. புத்தன் ஞானம்பெற்ற நாள் வைகாசித் தூய நிறைமதி நாள் ஆகலின் அதனை 'மங்கலத் திருநாள்' என்றார். புத்தன் பிறந்த நாளும் அதுவேயாகும். பொது வறிவு - சிறப்பில்லா அறிவு ; சாமானிய ஞானம் என்பர் வடநூலார். புலம் - மெய்யுணர்வு. நால்வகை வாய்மையும் அறிதற்குரிய சிறப்பறிவு. சித்தம்-உறுதி. கொள்கை- கோட்பாடுமாம். உணவின் பிண்டம் - உணவாலாகிய தொகுதி ; ¹"உண்டி முதற்றே யுணவின் பிண்டம்" என்றார் பிறரும்.  
  
ஆயிழை ஆசனத்தால் அறிந்த பிறவியளாயினள் ; இவள் பெற்றியும் ஐதென வந்து தோன்றிய தெய்வம், நின்றோள் கேட்ப, 'நீயோ தோன்றினை ; பணிந்தேன் ; வைத்தேன் ; கொண்டேன் ; ஏற்றினேன்; புலம்பு அறுக' என்று வலங்கொண்டு வணங்குவோள் முன்னர்ப் பொருந்தி, என் பிறப்புணர்ந்தேன் ; என் கணவன் யாங்குளன் ?' என்று மணிமேகலை கேட்டலும், அத்தெய்வம், "இலக்குமி ! கேள். பொழிலில் இராகுலனோடு நீ புலந்தாய் ; அப் புலவியை மாற்றவேண்டி அவன் உன்னடியை வணங்கும்பொழுது, சாதுசக்கரன் வந்து தோன்றலும், நீ கண்டு நடுக்குற்று நாணி இறைஞ்ச, இராகுலன் வெகுளலும்; நீ அவன் வாயைப் புதைத்து, ' நீ வானூடிழிந்தோன் அடியை வணங்காது நாநல் கூந்தனை' என்று சொல்லி, அவனோடு பணிந்து, 'அமர ; கொணர்கேம் ' உண்டி' என்றலும், அவன் 'கொணர்க' என்று உண்டருளிய அவ்வறம் பிறப்பை யறுத்திடும்; உதயகுமரன்றான் இராகுலன்; அவன்பால் உள்ளம் நீங்காத் தன்மை நினக்கு முண்டாதலின், எண்ணி ஏதுவாச் செய்தேன் ; இன்னுங் கேள்; தாரையும் வீரையும் நின் தவ்வையராவோர்; அவர் தம்மைத் துச்சயன் கொண்டனன் அவன் அவருடன் இருந்துழிச,் சென்ற அறவணனை அவன், 'வந்தீர் யார்?' என்று எழுந்து பாதத்தைப் பணிதலும், அவன், 'பாத பங்கயதைத்தொழுது வலங்கொள்ள வந்தேன்; நீரும் தொழும்' என்ற உரை பிழையாது சென்று தொழுது சிறப்புச் செய்தலின், நின்னொடு கூடினர் : உற்றனை ; அறிந்தனை ; கேட்குவை ; உரையார் ; ஆதலால் இம் மந்திரங் கொள்க" என ஓதி, உணர்நீ; புகுவாய்," என்று எழுந்தோங்கி, மறந்ததும் உண்டென இழிந்து, "யாக்கை உணவின் பிண்டம் ; இப்பெரு மந்திரம் இரும் பசி யறுக்கும்" என்று அதனைக் கொடுத்து எழுந்து நீங்கியது என வினைமுடிவு செய்க.  
  
¹ புறம். 18.

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.10.1) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.11](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.11) · Pramāṇa
