<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13.7 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 13.7

# Maṇimēkalai's Renunciation 13.7

Maṇimēkalai urai 13.7

- **Language:** Tamil

### [13.7](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13.7)

அறவணர்த் தொழுத காதை  
  
70 சலாகை நுழைந்த மணித்துளை அகவையின்  
உலாநீர்ப் பெருங்கடல் ஓடா தாயினும்  
ஆங்கத் துளைவழி உகுநீர் போல  
ஈங்கு நல்லறம் எய்தலும் உண்டெனச்  
சொல்லலும் உண்டியான் சொல்லுதல் தேற்றார்  
மல்லன்மா ஞாலத்து மக்களே யாதலின்  
  
66  
  
உரை  
  
71  
  
சலாகை நுழைந்த மணித்துளை அகவையின் - சிறிய நாராசம் நுழைந்த மணிகளின் துளையாகிய உள்ளிடத்தே, உலா நீர்ப் பெருங் கடல் ஓடாதாயினும் - பெரிய கடலில் உலாவுகின்ற நீர் முழுவதும் ஓடாதானாலும், ஆங்கத் துளைவழி உகுநீர்போல - அச் சிறிய துளையின் வழியே சிந்துகின்ற நீரைப்போல, ஈங்கு நல்லறம் எய்தலும் உண்டு எனச் சொல்லும் உண்டுயான் - இவ்வுலகில் நல்ல அறங்களை அடைதலும் உண்டு என்று யான் மொழிவதும் உண்டு, சொல்லுதல் தேற்றார் மல்லல் மா ஞாலத்து மக்களே ஆதலின் - அங்ஙன முரைப்பதை வளப்பம் மிக்க பெரிய பூமியின்கணுள்ள மக்கள் தெளியார் ஆகலின் ;  
மக்கள் தேற்றாராதலின் என்க. ஏ : அசை ; தேற்றமுமாம். ஆதலின் - ஆயினும் என்றுமாம்.

- [Previous: 13.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13.6)
- [Next: 13.8](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13.8)
- [Up: 13](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.12.66-71) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13.7](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13.7) · Pramāṇa
