<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13.9 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 13.9

# Maṇimēkalai's Renunciation 13.9

Maṇimēkalai urai 13.9

- **Language:** Tamil

### [13.9](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13.9)

அறவணர்த் தொழுத காதை  
  
85  
  
90  
  
95 கதிரோன் தோன்றுங் காலை ஆங்கவன்  
அவிரொளி காட்டும் மணியே போன்று  
மைத்திருள் கூர்ந்த மனமாசு தீரப்  
புத்த ஞாயிறு தோன்றுங் காலைத்  
திங்களும் ஞாயிறும் தீங்குறா விளங்கத்  
தங்கா நாண்மீன் தகைமையின் நடக்கும்  
வானம் பொய்யாது மாநிலம் வளம்படும்  
ஊனுடை உயிர்கள் உறுதுயர் காணா  
வளிவலக் கொட்கும் மாதிரம் வளம்படும்  
நளியிரு முந்நீர் நலம்பல தரூஉம்  
கறவைகன் றார்த்திக் கலநிறை பொழியும்  
பறவை பயன்றுய்த் துறைபதி நீங்கா  
விலங்கு மக்களும் வரூஉப்பகை நீங்கும்  
கலங்கஞர் நரகரும் பேயும் செவிடும்  
கூனுங் குறளும் ஊமுஞ் செவிடும்  
மாவும் மருளும் மன்னுயிர் பெறாஅ  
  
83  
  
உரை  
  
98  
  
கதிரோன் தோன்றும் காலை ஆங்கவன் அவிர் ஒளி காட்டும் மணியே போன்று - ஞாயிறு தோன்றும் பொழுதில் அஞ் ஞாயிற்றினது விளங்குகின்ற ஒளியினைக் காட்டும் சூரிய காந்தம்போல, மைத்து இருள் கூர்ந்த மனமாசு தீர - கறுத்து இருண்மிக்க மனத்தின்கண் உள்ள குற்றம் நீங்க, புத்தஞாயிறு தோன்றும் காலை - புத்தனாகிய ஞாயிறு தோன்றும்பொழுது, திங்களும் ஞாயிறும் தீங்குறா விளங்க - மதியும் பரிதியும் தீமையுறாமல் விளங்க, தங்கா நாண்மீன் தகைமையின் நடக்கும் - ஓரிடத்தில் நிலையுதலில்லாத நாண்மீன்கள் தக்கவாறு நடக்கும், வானம் பொய்யாது - முகில் மழை பெய்வதிற் பொய்படாது, மாநிலம் வளம்படும் - பெரிய பூமி வளஞ்சிறக்கும், ஊன் உடை உயிர்கள் உறுதுயர் காணா - ஊனினையுடைய உயிர்கள் துயரமடைதலைக் காணா, வளிவலம் கொட்கும் - காற்று வலமாகச் சுழலும், மாதிரம் வளம்படும் - திசைகள் செழுமையுறும், நளியிரு முந்நீர் நலம்பல தரூஉம் - செறிந்த நீரினையுடைய பெரிய கடல் முத்து முதலிய பல வளங்களைக் கொடுக்கும், கறவை கன்று ஆர்த்திக் கலநிறைபொழியும் - பசுக்கள் கன்றுகளை உண்ணச் செய்து கறவைக்கலம் நிறைந்து வழியுமாறு பால் பொழியும், பறவை பயன் துய்த்து உறைபதி நீங்க - பறவைகள் பயனை நுகர்ந்து தாம் வாழ்விடங்களிலிருந்து நீங்கா, விலங்கும் மக்களும் வெரூஉப்பகை நீங்கும் - விலங்கினமும் மக்களினமும் தம்முள் அஞ்சுதற்குக் காரணமாகிய பகைமையில் நீங்கும், கலங்கு அஞர் நரகரும் பேயும் கைவிடும் - கலங்குதற்குக் காரணமாகிய துன்பத்தை நரகரினமும் பேயும் விட்டொழியும், கூனும் குறளும் ஊமும் செவிடும் மாவும் மருளும் மன்னுயிர் பெறா அ-கூன் வடிவும் குறள் வடிவும் ஊமையும் செவிடும் விலங்குருவமும் அறிவின்றி மயங்கி யிருத்தலுமாதிய பிறப்புக்களை மக்களுயிர் பெறமாட்டா சூரிய காந்தம் கதிரவன் ஒளியைக் காட்டுதல்போலத் திங்கள் முதலியன புத்தனது தோற்றத்தினைப் புலப்படுத்துமென்க. பொருளுக்கேற்ற உவமையில் புறவிருள் நீங்கக் கதிரோன் தோன்றுங்காலை என் விரித்துரைக்க. உறா: ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம். தங்கா என்றும் நடக்கும் என்றும் கூறுதலின் நாண்மீன் என்பதற்கு ஈண்டு ஞாயிறு திங்க ளொழிந்த கோட்கள் என்று பொருள் கொள்ளுதல் பொருந்தும் ; நட்சத்திரங்களையே தோற்றம்பற்றி அங்ஙனம் கூறினாரெனலுமாம். ஊனுடையுயிர்கள்-தேவரல்லாத மக்கள் முதலிய உயிர்கள் : ¹"ஊனடைந்த வுடம்பின் பிறவியே" என்பது காண்க. ஊன் உடை-உடம்பு மெலிந்த என்பாருமுளர். மாதிரம் - மலையுமாம். ³"வலமா திரத்தான் வளிகொட்ப," "மாதிரங் கொழுக்க என்றார் பிறரும். நிறை - நிறைய : விகாரம் ; சால் என்பாருமுளர். விலங்கு முதலியவற்றை அவ்வவ் வினமெனக் கொள்க ; அன்றித் திணை விரவி அஃறிணை முடிபுற்றன என்னலுமாம். அஞர் - துன்புறுதலை; துன் புறத்தலை என்றலுமாம். கூன் முதலிய ஆறனோடு, குருடு, உறுப்பில் பிண்டம் ஆகிய இரண்டுங்கூட்டி எண்வகை எச்சமென்பர்; ⁴"சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும், கூனுங் குறளு மூமுஞ் செவிடும், மாவு மருளுமுளப்பட வாழ்நர்க், கெண்பே ரெச்ச மென்றிவை யெல்லாம்" என்பது காண்க.  
  
துடிதலோகம் - உலகம் முப்பத்தொன்றனுள் ஒன்பதாவது ; தெய்வலோகம் ஆறனுள் நான்

- [Previous: 13.8](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13.8)
- [Next: 13.10](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13.10)
- [Up: 13](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.12.86-96) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13.9](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13.9) · Pramāṇa
