<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 13

# Maṇimēkalai's Renunciation 13

Maṇimēkalai urai 13

- **Language:** Tamil

### [13.1](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13.1)

அறவணர்த் தொழுத காதை  
  
5 ஆங்கவர் தம்முடன் அறவண அடிகள்  
யாங்குளர் என்றே இளங்கொடி வினாஅய்  
நரைமுதிர் யாக்கை நடுங்கா நாவின்  
உரைமூ தாளன் உறைவிடம் குறுகி  
மைம்மலர்க் குழலி மாதவன் திருந்தடி  
மும்முறை வணங்கி முறையுளி யேத்திப்  
  
1  
  
உரை  
  
6  
  
ஆங்கவர் தம்முடன் அறவணவடிகள் யாங்குளர் என்றே இளங்கொடி வினாஅய் - மணிமேகலை மாதவியுடனும் சுதமதியுடனும் கூடி அறவணவடிகள் எவ்விடத்திலிருக்கின்றார் என்று வினாவிக் கொண்டு, நரைமுதிர் யாக்கை நடுங்கா நாவின் உரை மூதாளன் உறைவிடம் குறுகி-நரைமுதிர்ந்த உடலையும் நா நடுங்காத மொழிகளையுமுடைய முதியோராகிய அறவணவடிகள் உறைவிடத்தை அடைந்து, மைம்மலர்க் குழலி - மலர்களுடன் கூடிய முகில் போலுங் கூந்தலையுடைய மணிமேகலை, மாதவன் திருந்தடி - அறவண முனிவரது திருந்திய திருவடிகளை, மும்முறை வணங்கி முறையுளி ஏத்தி - மூன்று தரம் பணிந்து முறைப்படி துதித்து ;  
  
நா நடுங்கா உரையின் என மாறுக. நடுங்காத நாவினையும் முதிர்ந்த உரையினையும் உடையான் எனலுமாம்; நடுங்கா நா - வழுவற்றசொல்; மூதுரை - அறிவு மேம்பட்ட உரை. முறையுளி - முறையால் ; உளி : மூன்றனுருபின் பொருட்டு.

### [13.2](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13.2)

அறவணர்த் தொழுத காதை  
  
10  
  
15  
  
20 புதுமலர்ச் சோலை பொருந்திய வண்ணமும்  
உதய குமரனாங் குற்றுரை செய்ததும்  
மணிமே கலாதெய்வமும் மணிபல் லவத்திடை  
அணியிழை தன்னை அகற்றிய வண்ணமும்  
ஆங்கத் தீவகத் தறவோன் ஆசனம்  
நீங்கிய பிறப்பு நேரிழைக் களித்ததும்  
அளித்த பிறப்பின் ஆகிய கணவனைக்  
களிக்கயல் நெடுங்கட் கடவுளிற் பெற்றதும்  
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும்  
வெவ்வினை உருப்ப விளிந்துகே டெய்தி  
மாதவி யாகியுஞ் சுதமதி யாகியுங்  
கோதையஞ் சாயல் நின்னொடுங் கூடினர்  
ஆங்கவர் தந்திறம் அறவணன் தன்பால்  
பூங்கொடு நல்லாய் கேளென் றுரைத்ததும்  
  
7  
  
உரை  
  
20  
  
புதுமலர்ச் சோலை பொருந்திய வண்ணமும் - தான் மலர் கொய்யுமாறு உவவனத்தின்கட் சேர்ந்தனையும், உதயகுமரன் ஆங்கு உற்று உரை செய்ததும் - உதயகுமரன் ஆண்டு வந்து மொழிந்தனையும், மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்திடை அணியிழை தன்னை அகற்றிய வண்ணமும் - அப்பொழுது மணிமேகலா தெய்வம் தோன்றித் தன்னை மணிபல்லத்தின்கண் கொண்டு சென்றதனையும், ஆங்கத் தீவகத்து அறவோன் ஆசனம் - அத் தீவின்கணுள்ள புத்தன் பாதபீடம்; நீங்கிய பிறப்பு நேரிழைக் களித்ததும்-சென்ற பிறப்பைத் தனக்கு உணர்த்தி யருளினதையும், அளித்த பிறப்பின் ஆகிய கணவனை - அங்ஙனம் உணர்த்திய பழம் பிறப்பிற் கணவனா யிருந்தோனை, களிக்கயல் நெடுங்கட் கடவுளிற் பெற்றதும் - களிப்பு மிக்க கயல் மீனனைய நீண்ட கண்களையுடைய மணிமேகலா தெய்வத்தான் அறிந்தனையும், தவ்வையராகிய தாரையும் வீரையும் - முன்பிறந்தோராகிய தாரையும் வீரையும், வெவ்வினை உருப்ப விளிந்து கேடு எய்தி - தீவினை உருத்து வந்தூட்டுதலான் இறந்தெழிந்து, மாதவி ஆகியும் சுதமதி ஆகியும் - மாதவியாயும் சுதமதியாயும், கோதை அம்சாயல் நின்னொடுங் கூடினர் - அழகிய கூந்தலையும் மென்மையையுமுடைய நின்னொடும் கூடினர், ஆங்கவர் தம் திறம் அறவணன் தன்பால் - அவர்கள் வரலாற்றினை அறவணவடிகளிடம், பூங்கொடி நல்லாய் கேள் என்று உரைத்ததும் - பூங்கொடி போலும் நங்கையே கேட்பாயாக என்று கூறியதனையும் ;  
  
தன்னை படர்க்கையில் வைத்து, அணியிழை தன்னை என்பும், நேரிழைக்கு என்றும் கூறினாள். 'நெடுங்கண்' திரியா திருப்பின், மணி மேகலையெனப் பொருள்படும். ' தவ்வையராகிய' என்பது முதல் 'கேள்' என்பது காறும் மணிமேகலா தெய்வத்தின் கூற்றினை மணிமேகலை கொண்டு மொழிந்தது..

### [13.3](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13.3)

அறவணர்த் தொழுத காதை  
  
25  
  
30 உரைந்த பூங்கொடு ஒருமூன்று மந்திரம்  
தனக்குரை செய்துதான் ஏகிய வண்ணமும்  
தெய்வம் போயபின் தீவ திலகையும்  
ஐயெனத் தோன்றி யருளொடும் அடைந்ததும  
அடைந்த தெய்வம் ஆபுத் திரன்கை  
வணங்குறு பாத்திரம் வாய்மையின் அளித்ததும்  
ஆபுத் திரன்திறம் அறவணன் தன்பால்  
கேளென் றுரைத்தக் கிளரொளி மாதெய்வம்  
போகென மடந்தை போந்த வண்ணமும்  
மாதவன் தன்னை வணங்கினள் உரைத்தலும்  
  
21  
  
உரை  
  
30  
  
உரைத்த பூங்கொடி-அங்ஙனங் கூறிய பூங்கொடி போலும் மணிமேகலா தெய்வம், ஒரு மூன்று மந்திரம் - மூன்று மந்திரங்களை, தனக்கு உரை செய்து தான் ஏகிய வண்ணமும் - தனக்கு அருளிச் செய்து அத் தெய்வம் சென்ற திறத்தையும், தெய்வம் போயபின் - மணிமேகலா தெய்வஞ் சென்ற பின்னர், தீவதிலகையும் ஐயெனத் தோன்றி அருளொடும் அடைந்ததும் - தீவதிலகை விரைவாகத் தோன்றி அருளொடும் எய்தியதனையும், அடைந்த தெய்வம்-அடைந்த தெய்வமாகிய தீவதிலகை, ஆபுத்திரன் கை வணங்குறு பாத்திரம் வாய்மையின் அளித்ததும் - ஆபுத்திரன் கையிலிருந்த வணங்குதற்குரிய சிறந்த பாத்திரத்தை நால்வகை வாய்மையுடன் அளித்ததனையும், ஆபுத்திரன் திறம் அறவணன் தன்பால் கேள் என்று உரைத்து - ஆபுத்திரனது வரலாற்றை அறவணவடிகளிடம் கேட்பாயாக என்று கூறி, கிளர்ஒளி மாதெய்வம் -விளங்குகின்ற பேரொளியினையுடைய பெருமை பொருந்திய அத்தெய்வம், போகென மடந்தை போந்த வண்ணமும் - நின் பதியிடைப் போவாய் என உரைப்பத் தான் மீண்டுவந்த தன்மையையும், மாதவன் தன்னை வணங்கினள் உரைத்தலும் - அறவணவடிகளை வணங்கி மொழிதலும்  
  
மூன்று மந்திரம் - வேற்த்றுரு வெய்தவும், அந்தரய் திரியவும், பசி யொழியவும் செய்யும் மந்திரங்கள் (10 : 80--91:) ஐயென - வியக்குமாறு எனவுமாம். தோன்றி-புலப்பட்டு. வாய்மையின் - வாய்மையோடு.

### [13.4](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13.4)

அறவணர்த் தொழுத காதை  
  
35  
  
40 மணமே கலையுரை மாதவன் கேட்டுத்  
தணியா இன்பம் தலைத்தலை மேல்வரப்  
பொற்றொடி மாதர் நற்றிறஞ் சிறக்க  
உற்றுணர் வாய்நீ யிவர்திறம் உரைக்கேன்  
நின்னெடுந் தெய்வம் நினக்கெடுத் துரைத்த  
அந்நா ளன்றியும் அருவினை கழூஉம்  
ஆதி முதல்வன் அடியிணை யாகிய  
பாதபங் கயமலை பரவிச் செல்வேன்  
கச்சய மாளுங் கழற்கால் வேந்தன்  
துச்சயன் தன்னயோர் சூழ்பொழிற் கண்டேன்  
மாபெருந் தானை மன்ன நின்னொடும்  
தேவியர் தமக்கும் தீதின் றோவென  
அழிதக வுள்ளமோ டரற்றின னாகி  
ஒளியிழை மாதர்க் குற்றதை யுரைப்போன்  
  
31  
  
உரை  
  
44  
  
மணிமேகலை உரை மாதவன் கேட்டு - அறவணவடிகள் மணிமேகலையின் மொழியைக் கேட்டு, தணியா இன்பம் தலைத்தலை மேல்வர-குறையாத பேரின்பம் மேன்மேல் மிகா நிற்க, பொற்றொடி மாதர் நற்றிடம் சிறக்க-பொன் வளையல்களையணிந்த மாதே நினக்கு நல்ல கூறுபாடுகள் சிறப்பனவாக, உற்றுணர்வாய் நீ இவர் திறம் உரைக்கேன்-இவர்கள் வரலாற்றைக் கூறுவேன் நீ அதனைக் கேட்டு அறிவாயாக, நின்நெடுந் தெய்வம் நினக்கு எடுத்து உரைத்த - நின் பெருந் தெய்வம் நினக்கு எடுத்து கூறிய அந்நாள் அன்றியும் - அந் நாளிற் சென்றதல்லாமலும், அருவினை கழூஉம் ஆதி முதல்வன் அடியிணையாகிய - அரிய வினைகளைப் போக்கும் புத்தன் திருவடியிணைகள் பொருந்திய, பாதபங்கயமலை பரவிச் செல்வேன்-பாதபங்கயமலையைப் பணிந்து செல்லுவேன், கச்சயம் ஆளும் கழற்கால் வேந்தன் துச்சயன் தன்னை ஓர் சூழ் பொழிற் கண்டேன் - கச்சய நகரத்தை ஆண்டுவந்த வீரக் கழலணிந்த கால்களையுடைய துச்சயன் என்ற மன்னனை ஒருபொழிலினிடத்துக் கண்டேன், மாபெருந் தானை மன்ன நின்னொடும் தேவியர் தமக்கும் தீதின்றோ என - மிகப் பெரிய சேனைகளையுடைய அரசே நீயும்நின் தேவியரும் தீதின்றி இருக்கின்றீரோ என வினவ, அழிதகவு உள்ளமொடு அரற்றின்ன் ஆகி - அழிந்த உள்ளத்தோடு புலம்பியவனாய், ஒளியிழை மாதர்க்கு உற்றதை உரைப்போன் - ஒள்ளிய அணிகலனையுடைய மனைவியர்க்கு நேர்ந்ததை உரைக்கின்றவன் ;  
  
மாதர் : விளி. செல்வேன் பெயர். கண்டேன் - கண்டு : முற்றெச்சம்.

### [13.5](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13.5)

அறவணர்த் தொழுத காதை  
  
45  
  
50 புதுக்கோள் யானைமுன் போற்றாது சென்று  
மதுக்களி மயக்கத்து வீரை மாய்ந்ததூஉம்  
ஆங்கது கேட்டோ ரரமிய மேறித்  
தாங்காது வீழுந்து தாரைசா வுற்றதூஉம்  
கழிபெருந் துன்பங் காவலன் உரைப்ப  
பழவினைப் பயன்நீ பரியலென் றெழுந்தேன்  
ஆடுங் கூத்தியர் அணியே போல  
வேற்றோர் அணியொடு வந்தீ ரோவென  
மணிமே கலைமுன் மடக்கொடு யார்திறம்  
துணிபொருள் மாதவன் சொல்லியும் அமையான்  
  
45  
  
உரை  
  
54  
  
புதுக்கோள் யானைமுன் போற்றாது சென்று மதுக்களி மயக்கத்து வீரை மாய்ந்ததூஉம்- புதிதாகப் பிடித்துக்கொண்டு வரப்பட்ட யானையின் முன்னே மதுவுண்ட களிப்பினாலாகிய மயக்கத்தால் தன்னைப் பாதுகாவாது சென்ற வீரை இறந்ததுவும், ஆங்கது கேட்டு ஓர் அரமியம் ஏறி தாங்காது வீழ்ந்து தாரை சாவுற்றதூஉம் - அவள் இறந்த செய்தி கேட்டு அத் துன்பத்தைத் தாங்காமல் தாரை ஒரு நிலா முற்றத்தில் ஏறி வீழ்ந்து இறப்பினை யடைந்ததுவும் ஆகிய, கழிபெருந் துன்பம் காவலன் உரைப்ப - மிகப் பெருந் துயரத்தை அம் மன்னவன் மொழிய, பழவினைப் பயன் நீ பரியல் என்று எழுந்தேன் - இது முற்செய்த வினையின் பயனாம் நீ வருந்தாதே என வுரைத்து அங்கு நின்றும் எழுந்தேன், ஆடும்கூத்தியர் அணியேபோல வேற்றோர் அணியொடு வந்தீரோ என - அங்ஙனமாகிய நீவிர் நாடக வரங்கில் நடிக்கும் கூத்தியர் கொள்ளுங்கோலம் போல ஈண்டு வேறு வகையான கோலத்துடன் வந்தீரோ என்று, மணிமேகலைமுன் மடக்கொடியார் திறம் துணிபொருள் மாதவன் சொல்லியும் அமையான் - துணியப்பட்ட பொருளினையுடைய பெருந்தவன் மணிமேகலையின் முன்னர் மாதவி சுதமதிகளின் வரலாற்றினைக் கூறியும் அமையாதவனாய் ;  
  
வீரை மயக்கத்தால் போற்றாது சென்று மாய்ந்ததும், தாரை ஏறி வீழ்ந்து சாவுற்றதும் என்க. ஆகிய துன்பம் என ஒரு சொல் விரித்துரைக்க. கூத்த ரென்பதும் பாடம் ; ¹''ஆடுங் கூத்தர்போ லாருயி ரொருவழிக், கூடிய கோலத் தொருங்குநின் றியலாது'' என்பது ஈண்டு அறியற்பாலது. வந்தீரோ என்றது மாதவியையும் சுதமதியையும் நோக்கி. துணிபொருள் மாதவன் - மெய்ப் பொருளைத் துணிந்தவன் என்னும் கருத்தினது.  
  
¹ சிலப். 28 : 165-6.

### [13.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13.6)

அறவணர்த் தொழுத காதை  
  
55  
  
60  
  
65 பிறவியும் அறவியும் பெற்றிஇன் உணர்ந்த  
நறுமலர்க் கோதாய் நல்கினை கேளாய்  
தரும தலைவன் தலைமையில் உரைத்த  
பெருமைசால் நல்லறம் பெருகா தாகி  
இறுதியில் நற்கதி செல்லும் பெருவழி  
அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்துகண்  
ணடைத்தாங்குச்  
செயிர்வழங்கு தீக்கதி திறந்து கல்லென்று  
உயிர்வழங்கு பெருநெறி ஒருதிறம் பட்டது  
தண்பனி விழுங்கிய செங்கதிர் மண்டிலம்  
உண்டென உணர்தல் அல்லதி யாவதும்  
கண்டினிது விளங்காக் காட்சி போன்றது  
  
55  
  
உரை  
  
65  
  
பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த-பழம் பிறப்பையும் அறநெறியையும் முன்னை நல்வினையால் அறிந்த, நறுமலர்க் கோதாய் நல்கினை கேளாய் - நறிய மலர்மாலையணிந்த நங்கையே உவந்து கேட்பாயாக, தரும தலைவன் தலைமையின் உரைத்த - தரும முதல்வனாகிய புத்தன் முதன்மையாகக் கூறிய, பெருமை சால் நல்லறம் பெருகாதாகி - பெருமையமைந்த நல்லறம் வளர்தலின்றி, இறுதிஇல் நற்கதி செல்லும் பெருவழி - அழிவில்லாத நற்கதியாகிய நிருவாணத்திற்குச் செல்லும் பெருநெறி, அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்துகண் அடைத்தாங்கு - அறுகம்புல்லும் நெருஞ்சியுஞ் செறிந்து இடத்தை யடைத்தாற்போல, செயிர் வழங்கு தீக்கதி திறந்து - துன்பத்தையுடைய தீக்கதிக்கண் செல்லும் வழி திறக்கப்பட்டு நெருக்குதலின், கல்லென்று உயிர்வழங்கு பெருநெறி ஒருதிறம் பட்டது-ஆரவாரத்துடன் உயிர்கள் செல்லும் பொதுநெறியாகிய ஒரு கூற்றிலே பட்டது (ஆகலின் அப்பெரு வழி), தண்பனி விழுங்கிய செங்கதிர் மண்டிலம் - குளிர்ந்த பனியால் மூடப்பட்ட சிவந்த ஞாயிற்று மண்டலம், உண்டுஎன உணர்தல் அல்லது-உண்டு என்று அறிகின்ற அளவினை அன்றி, யாவதும் கண்டு இனிது விளங்காக் காட்சி போன்றது-சிறிதும் தெளிவாகக் கண்டறியப்படாத காட்சியைப் போன்றது ;  
  
நிலமிசை நடந்து செல்லும் வழியை அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்து அடைந்தாற்போல் நற்கதி செல்லும் பெருவழியைத் தீக்கதியிற் செல்லும் நெறிகள் திறந்து அடைத்தலால் என்க. பெருவழி ஒரு திறம் பட்டதென்க. உயிர் வழங்கு பெருநெறி என்றது பிறந்திறக்கும் உயிர்கள் செல்லும் பொதுவழி ; ¹''பெரும்பே ரியாக்கை பெற்ற நல்லுயிர், மலர் தலை யுலகத்துயிர்போகு பொதுநெறி......போகுதல் பொறேஎன்'' எனச் செங்குட்டுவனை நோக்கி மாடலன் கூறிற்றாக வுள்ளது காண்க. ஆகலின் அப் பெருவழியென விரித்துரைக்க. இனி, தீக்கதி திறக்கப் பெருநெறி ஒருதிறம் பட்டமையின் பெருவழி காட்சி போன்றது என முடித்தலுமாம். அறுகை - அறுகு. செயிர் - குற்றமுமாம். காட்சி - தன்மை.  
  
¹ சிலப். 28 ; 172-4.

### [13.7](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13.7)

அறவணர்த் தொழுத காதை  
  
70 சலாகை நுழைந்த மணித்துளை அகவையின்  
உலாநீர்ப் பெருங்கடல் ஓடா தாயினும்  
ஆங்கத் துளைவழி உகுநீர் போல  
ஈங்கு நல்லறம் எய்தலும் உண்டெனச்  
சொல்லலும் உண்டியான் சொல்லுதல் தேற்றார்  
மல்லன்மா ஞாலத்து மக்களே யாதலின்  
  
66  
  
உரை  
  
71  
  
சலாகை நுழைந்த மணித்துளை அகவையின் - சிறிய நாராசம் நுழைந்த மணிகளின் துளையாகிய உள்ளிடத்தே, உலா நீர்ப் பெருங் கடல் ஓடாதாயினும் - பெரிய கடலில் உலாவுகின்ற நீர் முழுவதும் ஓடாதானாலும், ஆங்கத் துளைவழி உகுநீர்போல - அச் சிறிய துளையின் வழியே சிந்துகின்ற நீரைப்போல, ஈங்கு நல்லறம் எய்தலும் உண்டு எனச் சொல்லும் உண்டுயான் - இவ்வுலகில் நல்ல அறங்களை அடைதலும் உண்டு என்று யான் மொழிவதும் உண்டு, சொல்லுதல் தேற்றார் மல்லல் மா ஞாலத்து மக்களே ஆதலின் - அங்ஙன முரைப்பதை வளப்பம் மிக்க பெரிய பூமியின்கணுள்ள மக்கள் தெளியார் ஆகலின் ;  
மக்கள் தேற்றாராதலின் என்க. ஏ : அசை ; தேற்றமுமாம். ஆதலின் - ஆயினும் என்றுமாம்.

### [13.8](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13.8)

அறவணர்த் தொழுத காதை  
  
75  
  
80 சக்கர வாளத்துத் தேவ ரெல்லாம்  
தொக்கொருங் கீண்டித் துடிதலோ கத்து  
மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப  
இருள்பரந்து கிடந்த மலர்தலை யுலகத்து  
விரிகதிர்ச் செல்வன் தோன்றின னென்ன  
ஈரெண் ணூற்றோ டீரெட் டாண்டில்  
பேரறி வாளன் தோன்றுமதற் பிற்பாடு  
பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி  
இரும்பெரு நீத்தம் புகுவது போல  
அளவாச் சிறுசெவி யளப்பரு நல்லறம்  
உளமலி யுவகையொ டுயிர்கொளப் புகூஉம்  
  
72  
  
உரை  
  
82  
  
சக்கரவாளத்துத் தேவர் எல்லாம்-சக்கரவாளத்திலுள்ள தேவரனைவரும், தொக்கு ஒருங்கு ஈண்டித் துடிதலோகத்து மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப - சேர்ந்து ஒன்றாகக்கூடித் துடிதலோகத்துள்ள சிறந்த தேவன் திருவடிகளில் விழுந்து இரக்க, இருள் பரந்து கிடந்த மலர்தலை உலகத்து - இருளாற் பரவப்பட்டுக் கிடந்த அகன்ற இடத்தையுடைய பூமியின்கண், விரிகதிர்ச் செல்வன் தோன்றினன் என்ன - வரிந்த கிரணங்களையுடைய பரிதிவானவன் தோன்றினாற்போல, ஈரெண்ணூற்றொடு ஈரெட்டாண்டில் பேரறிவாளன் தோன்றும் - ஆயிரத்தறுநூற்றுப் பதினாறாம் ஆண்டில் புத்தன் தோன்றுவான், அதன் பிற்பாடு - அதன் பின்பு, பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி - பெரிய குளத்திலுள்ள மதகாகிய சிறிய வழியில், இரும் பெரு நீத்தம் புகுவது போல - மிகப் பெரிய வெள்ளம் புகுவதைப்போல, அளவாச் சிறுசெவி - பேரளவில்லாத சிறிய செவிகளின் வழியே, அளப்பரு நல்லறம் உளம் மலி உவகையொடு உயிர் கொளப் புகூஉம் - அளத்தற்கரிய நல்லறங்கள் உள்ளத்தில் நிறைந்த மகிழ்ச்சியோடு உயிர்கள் ஏற்றுக்கொள்ளும்படி புகாநிற்கும்;  
  
துடிதலோகம் - உலகம் முப்பத்தொன்றனுள் ஒன்பதாவது ; தெய்வலோகம் ஆறனுள் நான்காவது. மிக்கோன்-சிறந்தவன்; இவன் பெயர் பிரபாபாலன் என்பர். ஈண்டுக் குறிக்கப்பட்ட ஆண்டு இன்ன அப்தத்தைச் சேர்ந்ததென்று தெரியவில்லை. வளவா எனப் பிரித்து வளமில்லாத என்றுரைத்தலுமாம். சிறு செவிப் புகூஉம் என்க.

### [13.9](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13.9)

அறவணர்த் தொழுத காதை  
  
85  
  
90  
  
95 கதிரோன் தோன்றுங் காலை ஆங்கவன்  
அவிரொளி காட்டும் மணியே போன்று  
மைத்திருள் கூர்ந்த மனமாசு தீரப்  
புத்த ஞாயிறு தோன்றுங் காலைத்  
திங்களும் ஞாயிறும் தீங்குறா விளங்கத்  
தங்கா நாண்மீன் தகைமையின் நடக்கும்  
வானம் பொய்யாது மாநிலம் வளம்படும்  
ஊனுடை உயிர்கள் உறுதுயர் காணா  
வளிவலக் கொட்கும் மாதிரம் வளம்படும்  
நளியிரு முந்நீர் நலம்பல தரூஉம்  
கறவைகன் றார்த்திக் கலநிறை பொழியும்  
பறவை பயன்றுய்த் துறைபதி நீங்கா  
விலங்கு மக்களும் வரூஉப்பகை நீங்கும்  
கலங்கஞர் நரகரும் பேயும் செவிடும்  
கூனுங் குறளும் ஊமுஞ் செவிடும்  
மாவும் மருளும் மன்னுயிர் பெறாஅ  
  
83  
  
உரை  
  
98  
  
கதிரோன் தோன்றும் காலை ஆங்கவன் அவிர் ஒளி காட்டும் மணியே போன்று - ஞாயிறு தோன்றும் பொழுதில் அஞ் ஞாயிற்றினது விளங்குகின்ற ஒளியினைக் காட்டும் சூரிய காந்தம்போல, மைத்து இருள் கூர்ந்த மனமாசு தீர - கறுத்து இருண்மிக்க மனத்தின்கண் உள்ள குற்றம் நீங்க, புத்தஞாயிறு தோன்றும் காலை - புத்தனாகிய ஞாயிறு தோன்றும்பொழுது, திங்களும் ஞாயிறும் தீங்குறா விளங்க - மதியும் பரிதியும் தீமையுறாமல் விளங்க, தங்கா நாண்மீன் தகைமையின் நடக்கும் - ஓரிடத்தில் நிலையுதலில்லாத நாண்மீன்கள் தக்கவாறு நடக்கும், வானம் பொய்யாது - முகில் மழை பெய்வதிற் பொய்படாது, மாநிலம் வளம்படும் - பெரிய பூமி வளஞ்சிறக்கும், ஊன் உடை உயிர்கள் உறுதுயர் காணா - ஊனினையுடைய உயிர்கள் துயரமடைதலைக் காணா, வளிவலம் கொட்கும் - காற்று வலமாகச் சுழலும், மாதிரம் வளம்படும் - திசைகள் செழுமையுறும், நளியிரு முந்நீர் நலம்பல தரூஉம் - செறிந்த நீரினையுடைய பெரிய கடல் முத்து முதலிய பல வளங்களைக் கொடுக்கும், கறவை கன்று ஆர்த்திக் கலநிறைபொழியும் - பசுக்கள் கன்றுகளை உண்ணச் செய்து கறவைக்கலம் நிறைந்து வழியுமாறு பால் பொழியும், பறவை பயன் துய்த்து உறைபதி நீங்க - பறவைகள் பயனை நுகர்ந்து தாம் வாழ்விடங்களிலிருந்து நீங்கா, விலங்கும் மக்களும் வெரூஉப்பகை நீங்கும் - விலங்கினமும் மக்களினமும் தம்முள் அஞ்சுதற்குக் காரணமாகிய பகைமையில் நீங்கும், கலங்கு அஞர் நரகரும் பேயும் கைவிடும் - கலங்குதற்குக் காரணமாகிய துன்பத்தை நரகரினமும் பேயும் விட்டொழியும், கூனும் குறளும் ஊமும் செவிடும் மாவும் மருளும் மன்னுயிர் பெறா அ-கூன் வடிவும் குறள் வடிவும் ஊமையும் செவிடும் விலங்குருவமும் அறிவின்றி மயங்கி யிருத்தலுமாதிய பிறப்புக்களை மக்களுயிர் பெறமாட்டா சூரிய காந்தம் கதிரவன் ஒளியைக் காட்டுதல்போலத் திங்கள் முதலியன புத்தனது தோற்றத்தினைப் புலப்படுத்துமென்க. பொருளுக்கேற்ற உவமையில் புறவிருள் நீங்கக் கதிரோன் தோன்றுங்காலை என் விரித்துரைக்க. உறா: ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம். தங்கா என்றும் நடக்கும் என்றும் கூறுதலின் நாண்மீன் என்பதற்கு ஈண்டு ஞாயிறு திங்க ளொழிந்த கோட்கள் என்று பொருள் கொள்ளுதல் பொருந்தும் ; நட்சத்திரங்களையே தோற்றம்பற்றி அங்ஙனம் கூறினாரெனலுமாம். ஊனுடையுயிர்கள்-தேவரல்லாத மக்கள் முதலிய உயிர்கள் : ¹"ஊனடைந்த வுடம்பின் பிறவியே" என்பது காண்க. ஊன் உடை-உடம்பு மெலிந்த என்பாருமுளர். மாதிரம் - மலையுமாம். ³"வலமா திரத்தான் வளிகொட்ப," "மாதிரங் கொழுக்க என்றார் பிறரும். நிறை - நிறைய : விகாரம் ; சால் என்பாருமுளர். விலங்கு முதலியவற்றை அவ்வவ் வினமெனக் கொள்க ; அன்றித் திணை விரவி அஃறிணை முடிபுற்றன என்னலுமாம். அஞர் - துன்புறுதலை; துன் புறத்தலை என்றலுமாம். கூன் முதலிய ஆறனோடு, குருடு, உறுப்பில் பிண்டம் ஆகிய இரண்டுங்கூட்டி எண்வகை எச்சமென்பர்; ⁴"சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும், கூனுங் குறளு மூமுஞ் செவிடும், மாவு மருளுமுளப்பட வாழ்நர்க், கெண்பே ரெச்ச மென்றிவை யெல்லாம்" என்பது காண்க.  
  
துடிதலோகம் - உலகம் முப்பத்தொன்றனுள் ஒன்பதாவது ; தெய்வலோகம் ஆறனுள் நான்

### [13.10](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13.10)

அறவணர்த் தொழுத காதை  
  
100  
  
105 அந்நாள் பிறந்தவன் அருளறங் கேட்டோர்  
இன்னாப் பிறவி யிகந்தோர் ஆகலின்  
போதி மூலம் பொருந்திய சிறப்பின்  
நாதன் பாதம் நவைகெட ஏத்துதல்  
பிறவி தோறும் மறவேன் மடக்கொடி  
மாதர் நின்னால் வருவன இவ்வூர்  
ஏது நிகழ்ச்சி யாவும் பலவுள  
ஆங்கவை நிகழ்ந்த பின்னர் அல்லது  
பூங்கொடி மாதர் பொருளுரை பொருந்தாய்  
  
99  
  
உரை  
  
107  
  
அந்நாட் பிறந்தவன் அருளறம் கேட்டோர் - அந்நாளில் பிறந்த புத்தனது அருளறத்தைக் கேட்டோர்கள், இன்னாப் பிறவி இகந்தோர் ஆதலின் - துன்பந்தரும் பிறவியைக் கடந்தவர்கள் ஆகலினால்; போதி மூலம்பொருந்திய சிறப்பின்-அரசமரத்தடியிலமர்ந்த சிறப்பினையுடைய, நாதன் பாதம் நவைகெட ஏத்துதல் - தலைவன் திருவடிகளைக் குற்றம் நீங்குமாறு துதித்தலை, பிறவி தோறும் மறவேன் மடக்கொடி - மடக்கொடியே யான் பிறவி தோறும் மறவேன், மாதர் நின்னால் வருவன இவ்வூர் ஏதுநிகழ்ச்சி யாவும் பலவுள-நங்காய் நின்னால் இவ்வூரில் உண்டாவனவாகிஏது நிகழ்ச்சிகள் பல உள்ளன, ஆங்கவை நிகழ்ந்த பின்னர் அல்லது - அவை நிகழ்ந்த பின்பன்றி, பூங்கொடி மாதர் பொருளுரை பொருந்தாய்-பூங்கொடிபோலும் மாதே அறவுரை கேளாய்;  
  
அருளறம் - தயாதன்மம்; அருளிய அறம் என்றுமாம். மறவேல் எனப் பிரித்துரைத்தலுமாம். ஏது நிகழ்ச்சி என்பதுபற்றி முன்னர் (3 : 4) உரைத்தமை காண்க. மாதர் என்பன விளி. பொருளுரை - மெய்யுரை : ஈண்டு அறவுரை; பொருள்-மெய்மையாதலை ¹"பொய்யில் புலவன் பொருளுரை" $"பொய்யில் காட்சியோர் பொருளுரை யாதலின்" என்பவற்றானும், ²"பொருள் சேர் புகழ்" என்பதற்குப் பரிமேலழகர் உரைத்த உரையாணும் அறிக.  
  
¹ மணி. 22: 61. $சிலப். 28: 168. ² குறள். 2: 5.

### [13.11](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13.11)

அறவணர்த் தொழுத காதை  
  
110 ஆதி முதல்வன் அருந்துயர் கெடுக்கும்  
பாதபங் கயமலை பரசினர் ஆதலின்  
ஈங்கிவ ரிருவரும் இளங்கொடி நின்னோ  
டோங்குயர் போதி உரவோன் திருந்தடி  
தொழுதுவலங் கொண்டு தொடர்வினை நீங்கிப்  
பழுதில் நன்னெறிப் படர்குவர் காணாய்  
  
108  
  
உரை  
  
113  
  
ஆதிமுதல்வன் அருந்துயர் கெடுக்கும் பாதபங்கயமலை பரசினர் ஆதலின்-தீர்த்தற்கரிய துயரத்தை நீக்கும் புத்தனுடைய பாதபங்கய மலையை வணங்கினர் ஆதலின், ஈங்கிவர் இருவரும் இளங்கொடி நின்னோடு-இளங்கொடி போல்வாய இவர் இருவரும் நின்னுடன், ஓங்குயர்போதி உரவோன் திருந்தடி - மிக உயர்ந்த போதியின்கீழ் அமர்ந்த மெய்யறிவுடையோனது திருந்திய அடிகளை, தொழுது வலங்கொண்டு தொடர்வினை நீங்கி - வலங் கொண்டுதொழுது வினைப்பற்றுக்களினின்றும் நீங்கி, பழுதில் நன்னெறிப் படர்குவர் காணாய் - குற்றமற்ற நல்ல வழியிலே செல்வர் காண்பாய்; உரவோன் - புத்தன் ; உரம் - திண்ணிய அறிவு. பழுதில் நன்னெறி - தூநெறி.

### [13.12](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13.12)

அறவணர்த் தொழுத காதை  
  
115  
  
120 ஆருயிர் மருந்தாம் அமுத சுரபியெனும்  
மாபெரும் பாத்திரம் மடக்கொடி பெற்றனை  
மக்கள் தேவர் எனஇரு சார்க்கும்  
ஒத்த முடிவின் ஓரறம் உரைக்கேன்  
பசிப்பிணி தீர்த்தல் என்றே அவரும்  
தவப்பெரு நல்லறம் சாற்றினர் ஆதலின்  
மடுத்ததீக் கொளிய மன்னுயிர்ப் பசிகெட  
எடுத்தனள் பாத்திரம் இளங்கொடி தானென்.  
  
114  
  
உரை  
  
121  
  
ஆருயிர் மருந்தாம்-உயிர்களைக் காக்கின்ற அருமருந்தாகிய, அமுதசுரபி எனும் மாபெரும் பாத்திரம் மடக்கொடி பெற்றனை - அமுதசுரபி யென்னும் பெருமை பொருந்திய பாத்திரத்தை நீ பெற்றிருக்கின்றாய் ஆகலின், மக்கள் தேவர் என இருசார்க்கும் - மக்கள் தேவர் என்னும் இரு பகுதிகட்கும், ஒத்த முடிவின் ஓர் அறம் உரைக்கேன் - ஒத்த முடிவினையுடைய ஓர் அறத்தைக் கூறுகின்றேன், பசிப்பிணி தீர்த்தல் என்றே - அது பசிப்பிணி தீர்த்தலாம் என்று, அவரும் தவப்பெரு நல்லறம் சாற்றினர் ஆகலின்-அறவணவடிகள் மிகப் பெரிய நல்லறத்தைக் கூறினர் ஆதலால், மடுத்த தீக் கொளிய மன்னுயிர்ப் பசிகெட - மிகுந்த தீயினாற் கொளுத்தப்பட்டாற் போன்ற உயிர்களின் பசியானது அழியுமாறு, எடுத்தனள் பாத்திரம் இளங்கொடி தானென் - மணிமேகலை தெய்வக் கடிஞையைக் கையில் எடுத்தனள்  
என்க.  
  
அவியுணவுடையராகலின் இவ் அறம் தேவர்க்கும் ஒத்ததாயிற்று. அது தீர்த்தலாகும் என விரித்துரைக்க.  
  
இளங்கொடி அவர் தம்முடன் அடிகள் யாங்குளரென்று வினாய்க் குறுகி மாதவனடியை வணங்கி ஏத்தி உரைத்தலும் கேட்டு, அவரும் தவப்பெரு நல்லறம் சாற்றினராதலின், இளங்கொடி பாத்திரம் எடுத்தனள் என வினை முடிவு செய்க.

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.12.1-6) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.13) · Pramāṇa
