<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.15 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 17.15

# Maṇimēkalai's Renunciation 17.15

Maṇimēkalai urai 17.15

- **Language:** Tamil

### [17.15](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.15)

ஆதிரை பிச்சையிட்ட காதை  
  
95  
  
100  
  
105 செவ்வனம் உரையெனச் சினவா திதுகேள்  
உற்றதை உணரும் உடலுயிர் வாழ்வுழி  
மற்றைய உடம்பே மன்னுயிர் நீங்கிடில்  
தடிந்தெரி ஊட்டினுந் தானுண ராதெனின்  
உடம்பிடைப் போனதொன் றுண்டென உணர்நீ  
போனார் தமக்கோர் புக்கிலுண் டென்பது  
யானோ வல்லேன் யாவரும் உணர்குவர்  
உடம்பீண் டொழிய உயிர்பல காவதம்  
கடந்துசேண் சேறல் கனவினுங் காண்குவை  
ஆங்கனம் போகி அவ்வுயிர் செய்வினை  
பூண்ட யாக்கையின் புகுவது தெளிநீ  
  
95  
  
உரை  
  
105  
  
(அதனைக் கேட்ட சாதுவன்,) சினவாது இது கேள்-சீற்றங் கொள்ளாது இதனைக் கேட்பாயாக, உற்றதை உணரும் உடல் உயிர் வாழ்வுழி - உயிரானது தன்னிடம் உறைகின்றபொழுது உடல் தன்பால் உறுகின்றதனை உணரும், மற்றைய உடம்பே மன்னுயிர் போனால்-அங்ஙனமாகிய உடலே தன்னிடம் நிலைபெற்ற உயிர் பிரிந்தால், தடிந்து எரி ஊட்டினும் தான் உணராது எனின் - வெட்டித் தீயின்கண் இட்டாலும் தான் அறியாது என்றால், உடம்பிடைப் போனது ஒன்று உண்டென உணர் நீ - அவ்வுடம்பிலிருந்து பிரிந்து சென்றது ஒன்று உண்டு என்பதை நீ அறிவாய், போனார் தமக்கு ஓர் புக்கில் உண்டு என்பது-அங்ஙனம் சென்றோர்க்கு ஒரு புகுமிடம் உண்டு என்பதை, யானோ அல்லேன் யாவரும் உணர்குவர்-யான் மட்டு மன்று எல்லோரும் அறிகுவர். உடம்பு ஈண்டு ஒழிய உயிர் பல காவதம் கடந்து சேண் சேறல் - யாக்கை இவ்விடத்தில் நீங்க உயிர் பல காவதங்கள் கடந்து நெடுந்தூரத்திற் செல்லுதல், கனவினும் காண்குவை-கனவின் கண்ணும் காண்பாய், ஆங்ஙனம் போகி அவ்வுயிர் செய்வினை பூண்ட யாக்கையில் புகுவது தெளி நீ - அங்ஙனம் சென்று அவ்வுயிர் தம் வினைப் பயனை நுகர்தற்குரிய உடலின்கண் புகுவதைத் தெளிவாய் நீ, என்று அவன் உரைத்தலும் - என்று சாதுவன் மொழிதலும் ;  
  
உற்றதை யுணர்தல்-தட்பம் வெப்பம் முதலிய ஊற்றினை யுணர்தல். மற்றைய-முற்கூறிய என்றபடி; மற்றை என்பதனை அசையாக்கி, அவ்வுடம்பு என்னலுமாம். எனின் - ஆதலால் ஓரிடத்தைவிட்டுப் போனவர்க்குப் பிறிதோரிடம் உண்டென உலகியலாற் கூறினான், பூண்ட-ஏற்றுக்கொண்ட; ஏற்று நுகர்தற்குரிய என்றபடி.

- [Previous: 17.14](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.14)
- [Next: 17.16](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.16)
- [Up: 17](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.16.101) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.15](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.15) · Pramāṇa
