<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.16 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 17.16

# Maṇimēkalai's Renunciation 17.16

Maṇimēkalai urai 17.16

- **Language:** Tamil

### [17.16](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.16)

ஆதிரை பிச்சையிட்ட காதை  
  
110 என்றவன் உரைத்தலும் எரிவிழி நாகனும்  
நன்றறி செட்டி நல்லடி வீழ்ந்து  
கள்ளும் ஊனும் கைவிடின் இவ்வுடம்பு  
உள்ளுறை வாழுயிர் ஓம்புதல் ஆற்றேன்  
தமக்கொழி மரபின் சாவுறு காறும்  
எமக்கா நல்லறம் எடுத்தரை என்றலும்  
  
106  
  
உரை  
  
111  
  
எரி விழி நாகனும்-தீப்போலுங் கண்களையுடைய நாகனும், நன்று அறி செட்டி நல்அடி விழ்ந்து - அறத்தினையறிந்த வணிகனது நல்ல அடியில் விழுந்து வணங்கி, கள்ளும் ஊனும் கைவிடின் இவ்வுடம்பு உள்ளுறைவாழுயிர் ஓம்புதல் ஆற்றேன் - கள்ளையும் புலாலையும் கைவிட்டால் இவ்வுடம்பின்கண் தங்கி வாழ்கின்ற உயிரைப் பாதுகாத்த லறியேன், தமக்கு ஒழி மரபின் சாவுறு காறும் எமக்கு ஆம் நல்லறம் எடுத்துரை என்றலும்-தமக்கு அறுதியிட்ட முறைமையால் இறப்பினை எய்துமளவும் எமக்குப் பொருந்திய நல்ல அறங்களை எடுத்துக் கூறுக என்றலும் ;  
  
எரி விழி-எஞ்ஞான்றும் சினத்தினாற் சிவந்த கண். நன்று - அறம். செட்டி-செட்டு உடையவன் ; சிரேட்டி என்பதன் சிதைவுமாம். உறை- உறைந்து என வினையெச்சமாக்குக. தமக்கு - உயிர்கட்டு.

- [Previous: 17.15](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.15)
- [Next: 17.17](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.17)
- [Up: 17](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.16.106-111) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.16](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.16) · Pramāṇa
