<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.3 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 17.3

# Maṇimēkalai's Renunciation 17.3

Maṇimēkalai urai 17.3

- **Language:** Tamil

### [17.3](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.3)

ஆதிரை பிச்சையிட்ட காதை  
  
15  
  
வங்கம் போகும் வாணிகர் தம்முடன்  
தங்கா வேட்கையின் தானுஞ் செல்வுழி  
நளியிரு முந்நீர் வளிகலன் வௌவ  
ஒடிமரம் பற்றி ஊர்திரை யுதைப்ப  
நக்க சாரணர் நாகர் வாழ்மலைப்  
பக்கஞ் சார்ந்தவர் பான்மையன் ஆயினன்  
  
11  
  
உரை  
  
16  
  
வங்கம் போகும் வாணிகர் தம்முடன் தங்கா வேட்கையின் தானும் செல்வுழி-கலத்திற் செல்லும் வணிகர்களுடன் பல விடத்தும் செல்ல வேண்டுமென்னும் விருப்பத்தால் சாதுவனும் செல்கின்ற விடத்து, நளி இரு முந்நீர் வளி கலன் வௌவ - அகன்ற பெரிய கடலில் காற்று மரக்கலத்தினைக் கவர, ஒடி மரம் பற்றி ஊர்திரை உதைப்ப - கலத்தினின்றும் ஒடிந்த பாய்மரத் துண்டினைப் பிடித்துக் கொண்டு ஊர்கின்ற அலைகள்செலுத்தச் சென்று, நக்க சாரணர் நாகர் வாழ்மலைப் பக்கஞ் சார்ந்து-நக்க சாரணர்களாகிய நாகர் உறைகின்ற மலைப்பக்கத்தை யடைந்து, அவர் பான்மையன் ஆயினன் - அவர்கள் வயத்தினனாயினன் ;  
  
தங்கா வேட்கை - ஓரிடத்திலே தங்கவிடாத வேட்கை. வளி கலத்தை வௌவுதலாவது-நெறியிற் செல்லவிடாது தடுத்துச் சிதைத்தல். ஒடிமரம் - ஒடியாகிய மரமென்றுமாம். உதைத்தல் - உந்தல் ; ¹"ஓடுந் திரைகளுதைப்ப வுருண்டுருண்டு" என்பது காண்க. நக்கம் - நக்நம் என்ற வடசொற் சிதைவு. சாரணர்-சரிப்பவர். உடையில்லா மற் சஞ்சரிப்பவராகலின் நாகர், 'நக்க சாரணர்' எனப்பட்டார். நாகர்- நாக இலச்சினையுடைமையால் அப் பெயர் பெற்றன ரென்பர். சாரணராகிய நாகரென்க.  
  
¹ சீவக. 56.

- [Previous: 17.2](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.2)
- [Next: 17.4](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.4)
- [Up: 17](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.16.11) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.3](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.3) · Pramāṇa
