<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 17

# Maṇimēkalai's Renunciation 17

Maṇimēkalai urai 17

- **Language:** Tamil

### [17.1](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.1)

ஆதிரை பிச்சையிட்ட காதை  
  
ஈங்கிவள் செய்தி கேளென விஞ்சையர்  
பூங்கொடி மாதர்க்குப் புகுந்ததை உரைப்போள்  
  
1  
  
உரை  
  
2  
  
ஈங்கிவள் செய்திகேள் என விஞ்சையர் பூங்கொடி மாதர்க்குப் புகுந்ததை உரைப்போள்-இப்பொழுது இவ்வாதிரையின் அருஞ் செயலைக் கேட்பாயாக என்று விஞ்சையர் மகளான காயசண்டிகை ஆதிரைக்கு நேர்ந்ததை மணிமேகலைக்கு உரைப்பவள்.  
  
ஈங்கிவள்: ஒரு சொல்லுமாம். மாதர்க்கு உரைப்போளென்க.

### [17.2](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.2)

ஆதிரை பிச்சையிட்ட காதை  
  
5  
  
10 ஆதிரை கணவன் ஆயிழை கேளாய்  
சாதுவன் என்போன் தகவிலன் ஆகி  
அணியிழை தன்னை அகன்றனன் போகிக  
கணிகை யொருத்தி கைத்தூண் நல்க  
வட்டினும் சூதினும் வான்பொருள் வழங்கிக்  
கெட்ட பொருளின் கிளைகே டுறுதலின்  
பேணிய கணிகையும் பிறர்நலங் காட்டிக்  
காணம் இலியெனக் கையுதிர்க் கோடலும்  
  
3  
  
உரை  
  
10  
  
ஆதிரை கணவன் ஆயிழை கேளாய் சாதுவன் என்போன் தகவிலன் ஆகி-நங்காய் கேள் ஆதிரையின் கணவனாகிய சாதுவன் என்பவன் நன்னடக்கையிலனாய், அணியிழைதன்னை அகன்றனன் போகி - அழகிய அணிகலன்களையுடைய ஆதிரையை நீங்கிச் சென்று, கணிகை ஒருத்தி கைத்தூண் நல்க-பொதுமகளொருத்தி தீயொழுக்கத்தால் வந்தவுணவை அளிக்க அதனை உண்டு, வட்டினும் சூதினும் வான்பொருள் வழங்கி - வட்டாடுதலினும் சூதாடுதலினும் மிகுந்த பொருளைக் கொடுத்து, கெட்ட பொருளின் கிளை கேடு உறுதலின் - கெடுக்கப்பட்ட பொருளின் பகுதியெல்லாம் அழிந்தமையின், பேணிய கணிகையும் பிறர் நலங்காட்டி-முன்னர்ப் பேணிய பரத்தையும் பொருளுள்ள பிறருடைய சிறப்பினைக் காட்டி, காணம் இலி எனக் கையுதிர்க்கோடலும்-பொன் இல்லாதவன் என்று கையை யசைத்துப் போக்குதலும்;  
  
கைத்தூண் - தீயொழுக்கத்தால் வந்த உணவு ; கை - ஒழுக்கம் ; ¹"கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை" என்பது காண்க. கையகத்தாகிய உணவென்றுமாம். நல்க உண்டு என ஒரு சொல் வருவித்துரைக்க. வட்டு - உண்டையுருட்டுதல்; ²"அரங்கின்றி வட்டாடியற்றே"  
  
என்புழிப் பரிமேலழகர் உரைத்தமை காண்க. வான் பொருள்-மிக்க பொருள். கெட்ட பொருள் - தீயபொருளென்பாருமுளர். கையுதிர்க் கோடலும் : உம்; உடனிகழ்ச்சி.  
  
¹ சிலப். 15 : 57. ² குறள். 401.

### [17.3](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.3)

ஆதிரை பிச்சையிட்ட காதை  
  
15  
  
வங்கம் போகும் வாணிகர் தம்முடன்  
தங்கா வேட்கையின் தானுஞ் செல்வுழி  
நளியிரு முந்நீர் வளிகலன் வௌவ  
ஒடிமரம் பற்றி ஊர்திரை யுதைப்ப  
நக்க சாரணர் நாகர் வாழ்மலைப்  
பக்கஞ் சார்ந்தவர் பான்மையன் ஆயினன்  
  
11  
  
உரை  
  
16  
  
வங்கம் போகும் வாணிகர் தம்முடன் தங்கா வேட்கையின் தானும் செல்வுழி-கலத்திற் செல்லும் வணிகர்களுடன் பல விடத்தும் செல்ல வேண்டுமென்னும் விருப்பத்தால் சாதுவனும் செல்கின்ற விடத்து, நளி இரு முந்நீர் வளி கலன் வௌவ - அகன்ற பெரிய கடலில் காற்று மரக்கலத்தினைக் கவர, ஒடி மரம் பற்றி ஊர்திரை உதைப்ப - கலத்தினின்றும் ஒடிந்த பாய்மரத் துண்டினைப் பிடித்துக் கொண்டு ஊர்கின்ற அலைகள்செலுத்தச் சென்று, நக்க சாரணர் நாகர் வாழ்மலைப் பக்கஞ் சார்ந்து-நக்க சாரணர்களாகிய நாகர் உறைகின்ற மலைப்பக்கத்தை யடைந்து, அவர் பான்மையன் ஆயினன் - அவர்கள் வயத்தினனாயினன் ;  
  
தங்கா வேட்கை - ஓரிடத்திலே தங்கவிடாத வேட்கை. வளி கலத்தை வௌவுதலாவது-நெறியிற் செல்லவிடாது தடுத்துச் சிதைத்தல். ஒடிமரம் - ஒடியாகிய மரமென்றுமாம். உதைத்தல் - உந்தல் ; ¹"ஓடுந் திரைகளுதைப்ப வுருண்டுருண்டு" என்பது காண்க. நக்கம் - நக்நம் என்ற வடசொற் சிதைவு. சாரணர்-சரிப்பவர். உடையில்லா மற் சஞ்சரிப்பவராகலின் நாகர், 'நக்க சாரணர்' எனப்பட்டார். நாகர்- நாக இலச்சினையுடைமையால் அப் பெயர் பெற்றன ரென்பர். சாரணராகிய நாகரென்க.  
  
¹ சீவக. 56.

### [17.4](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.4)

ஆதிரை பிச்சையிட்ட காதை  
  
20  
  
நாவாய் கேடுற நன்மரம் பற்றிப்  
போயினன் தன்னோ டுயிருயப் போந்தோர்  
இடையிருள் யாமத் தெறிதிரைப் பெருங்கடல்  
உடைகலப் பட்டாங் கொழிந்தோர் தம்முடன்  
சாதுவன் தானும் சாவுற் றானென  
  
17  
  
உரை  
  
21  
  
நாவாய் கேடுற நன்மரம் பற்றிப் போயினன் தன்னோடு உயிர் உயப் போந்தோர் - மரக்கலம் அழியப் பாய்மரத்தைப் பிடித்துச் சென்ற சாதுவனுடன் உயிர் பிழைக்கப் போந்தவர்கள், இடையிருள் யாமத்து ஏறிதிரைப் பெருங்கடல் - மிக்க இருளையுடைய நள்ளிரவில் வீசுகின்ற அலைகள் செறிந்த பெருங் கடலில், உடைகலப்பட்டாங்கு ஒழிந்தோர் தம்முடன் - உடைந்த மரக்கலத்திலகப்பட்டு ஆண்டு இறந்தோருடன், சாதுவன் தானும் சாவுற்றான் என - சாதுவனும் இறந்தனன் என்று கூற ;  
  
சாதுவன் மரத்தைப் பற்றிப் போயினாற்போல் இவர்களும் மரங்களைப் பற்றிக்கொண்டு உயிர் உய்யப் போந்தார் என்க. போந்தார் - காவிரிப்பூம் பட்டினத்திற்கு வந்தவர். இருளையுடைய இடையாமம் என்க. யாமம்-இரவு.

### [17.5](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.5)

ஆதிரை பிச்சையிட்ட காதை  
  
25 ஆதிரை நல்லாள ஆங்கது தான்கேட்டு  
ஊரீ ரேயோ ஒள்ளழல் ஈமம்  
தாரீ ரோவெச் சாற்றினள் கழறிச்  
சுடலைக் கானில் தொடுகுழிப் படுத்து  
முடலை விறகின் முளியெரி பொத்தி  
மிக்கஎன் கணவன் வினைப்பயன் உய்ப்பப்  
புக்குழிப் புகுவேன் என்றவன் புகுதலும்  
  
22  
  
உரை  
  
28  
  
ஆதிரை நல்லாள் ஆங்கது தான் கேட்டு-ஆதிரை நல்லாள் அதனைக் கேட்டு, ஊரீரேயோ ஒள்ளழல் ஈமம் தாரீரோ எனச் சாற்றினள் கழறி-ஊரிலுள்ளோர்களே ஒள்ளிய தழல் பொருந்திய ஈமத்தினைத் தருவீர் என்று கூறிப் புலம்பி, சுடலைக் கானில் தொடு குழிப்படுத்து முடலை விறகின் முளி எரி பொத்தி-சுடுகாட்டில் தோண்டப்பட்ட குழியின்கண் முறுக்குடைய காய்ந்த விறகுகளால் அழலை மூட்டி, மிக்க என் கணவன் வினைப்பயன் உய்ப்பப் புக்குழிப் புகுவேன் என்று அவள் புகுதலும் - தீவினையேனது கணவன் வினைப்பயன் செலுத்தச் சென்றவிடத்து யானும் புகுவேன் என்று அத் தீயிடைப் புகுதலும்;  
  
ஈமம் - பிணஞ்சுட அடுக்கிய விறகடுக்கு. தாரீர் - தருவீர் ; ஓ : புலம்பல் ; தரமாட்டீரோ என்றுமாம். சுடலையாகிய கான் என்க. மிக்க-தீவினை மிகுந்த. மேன்மையுடைய வென்றுமாம்.

### [17.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.6)

ஆதிரை பிச்சையிட்ட காதை  
  
30 படுத்துடன் வைத்த பாயற் பள்ளியும்  
உடுத்த கூறையும் ஒள்ளெரி யுறாஅது  
ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலில்  
சூடிய மாலையும் தொன்னிறம் வழாது  
விரைமலர்த் தாமரை ஒருதனி யிருந்த  
திருவின் செய்யோள் போன்றினி திருப்பத்  
  
29  
  
உரை  
  
34  
  
படுத்துடன் வைத்த பாயற் பள்ளியும்-அதனுளகப்படுத்தி ஒருசேர வைத்த படுக்கையிடமும், உடுத்த கூறையும் ஒள் எரி உறா அது -- உடுத்திய ஆடையும் ஒள்ளிய அழல் பற்றாமல், ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலில் சூடிய மாலையும் தொல் நிறம் வழாது - பூசிய சாந்தமும் அசைகின்ற குழலிற் சூடிய மாலையும் பழைய நிறம் வழுவாமல், விரைமலர்த் தாமரை ஒருதனி இருந்த திருவின் செய்யோள் போன்று இனிது இருப்ப - மணம் பொருந்திய தாமரை மலரில் ஒப்பின்றி வீற்றிருக்கும் திருமகள்போல இனிதே இருப்ப ;  
  
படுத்து-அடுக்கியென்றுமாம். பாயல் - படுக்கை. பள்ளி - இடம். திருவின் செய்யோள் - திருவாகிய செய்யோள் ; இன்சாரியை அல்வழிக் கண்வந்தது. உறாது வழாது என்னும் எதிர்மறை யெச்சங்கள் இனிதிருப்ப என்னும் பிறவினை கொண்டு முடிந்தன. போன்று - போலுமாறு எனலுமாம். எரியும் ஈமத்திற்குச் செந்தாமரை மலரும், அதில் ஊறின்றியிருக்கும் ஆதிரைக்குத் திருமகளும் உவமை.

### [17.7](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.7)

ஆதிரை பிச்சையிட்ட காதை  
  
35  
  
40 தீயும் கொல்லாத் தீவினை யாட்டியேன்  
யாது செய்கேன் என்றவள் ஏங்கலும்  
ஆதிரை கேளுன் அரும்பெறற் கணவனை  
ஊர்திரை கொண்டாங் குய்ப்பப் போகி  
நக்க சாரணர் நாகர் வாழ்மலைப்  
பக்கஞ் சேர்ந்தனன் பல்லியாண் டிராஅன்  
சந்திர தத்தன் எனுமோர் வாணிகன்  
வங்கந் தன்னொடும் வந்தனன் தோன்றும்  
நின்பெருந் துன்பம் ஒழிவாய் நீயென  
அந்தரந் தோன்றி அசரீரி அறைதலும்  
  
35  
  
உரை  
  
44  
  
தீயுங் கொல்லாத் தீவினை யாட்டின்யேன் யாது செய்கேன் என்று அவள் ஏங்கலும்-தீயினாலுங் கொல்லப்படாத தீவினையேன் இனி யாது செய்வேன் என்று அம் மெல்லியல் ஏங்குதலும், ஆதிரை கேள்-ஆதிரையே கேட்பாயாக, உன் அரும்பெறல் கணவனை - உனது பெறற்கருங் கொழுநனை, ஊர் திரை கொண்டாங்கு உய்ப்பப் போகி - தவழ்கின்ற அலைகள் அவ்வடத்திற் செலுத்த அவன் சென்று, நக்க சாரணர் நாகர் வாழ் மலைப் பக்கம் சேர்ந்தனன் - நக்க சாரணராகிய நாகர்கள் வாழ்கின்ற மலைப் பக்கத்தை யடைந்தனன், பல்லியாண்டு இரான் - அவன் அங்கே பலவாண்டுகள் தங்கான், சந்திரதத்தன் எனும் ஓர் வாணிகன் - சந்திரதத்தன் என்னும் ஒரு வணிகனது, வங்கம் தன்னொடும் வந்தனன் தோன்றும்-மரக்கலத்துடன் வந்து தோன்றுவன், நின் பெரும் துன்பம் ஒழிவாய் நீஎன-ஆகலின் நீ நினது பெரிய துயரினின்றும்நீங்குவாய் என்று, அந்தரம் தோன்றி அசரீரி அறைதலும்-அசரீரி வானிலே தோன்றி மொழிதலும் ;  
  
அசரீரி - சரீரம் இல்லாதது ; அருவமாய் எங்கும் நிறைந்துள்ள கடவுள். இதனை அசரீரி வாக்கு எனவும் ஆகாயவாணி எனவும் கூறுவர்.

### [17.8](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.8)

ஆதிரை பிச்சையிட்ட காதை  
  
45  
  
50 ஐயரி யுண்கண் அழுதுயர் நீங்கிப்  
பொய்கைபுக்காடிப் போதுவாள் போன்று  
மனங்கவல் வின்றி மனையகம் புகுந்தென்  
கண்மணி யனையான் கடிதீங் குறுகெனப்  
புண்ணிய முட்டாள் பொழிமழை தரூஉம்  
அரும்பெறல் மரபிற் பத்தினிப் பெண்டிரும்  
விரும்பினர் தொழூஉம் வியப்பினள் ஆயினள்  
  
45  
  
உரை  
  
51  
  
ஐ அரி உண்கண் அழுதுயர் நீங்கி - அழகிய செவ்வரி படர்ந்த மையுண்ட கண்களையுடைய ஆதிரைநல்லாள் தான் அழுதுகொண்டிருந்த துன்பத்தினின்றும் நீங்கி, பொய்கை புக்கு ஆடிப் போதுவாள் போன்று-வாவியுட் சென்று நீராடி வருவாள் போல, மனம் கவல்வு இன்றி மனையகம் புகுந்து - மனம் கவலுதலின்றி இல்லுட் சென்று, என் கண்மணி அனையான் கடிது ஈங்கு உறுகென-எனது கண்ணினுள் மணியனைய கணவன் விரைவில் ஈண்டு வருக என்று, புண்ணியம் முட்டாள்-அறம் புரிதல் வழுவா தவளாய், பொழிமழை தரூஉம் அரும்பெறல் மரபின் பத்தினிப் பெண்டிரும்-பொழிகின்ற மழையைத் தரவல்ல பெறற்கரிய ஒழுக்கத்தினையுடைய கற்பிற் சிறந்த மகளிரும், விரும்பினர் தொழூஉம் வியப்பினள் ஆயினள் - வியந்து விரும்பி வணங்குந் தகுதியளாயினள் ;  
  
முட்டுதல் - குன்றுதல், வழுவுதல். பெண்டிரும் என்பதில் உம்மை உயர்வு சிறப்பு. வியந்து விரும்பினர் தொழுமெனப் பிரித்துக்கூட்டுக ; வியப்பு-மேன்மை யெனலுமாம்.

### [17.9](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.9)

ஆதிரை பிச்சையிட்ட காதை  
  
55  
  
ஆங்கவள் கணவனும் அலைநீர் அடைகரை  
ஓங்குயர் பிறங்கல் ஒருமர நீழல்  
மஞ்சுடை மால்கடல் உழந்தநோய் கூர்ந்து  
துஞ்சுதுயில் கொள்ளஅச் சூர்மலை வாழும்  
நக்க சாரணர் நயமிலர் தோன்றிப்  
பக்கஞ் சேர்ந்து பரிபுலம் பினனிவன்  
தானே தமியன் வந்தனன் அளியன்  
ஊனுடை இவ்வுடம் புணவென் றெழுப்பலும்  
  
52  
  
உரை  
  
59  
  
ஆங்கவள் கணவனும் அலைநீர் அடைகரை ஓங்குயர் பிறங்கல் ஒரு மர நீழல்-அவளின் கணவனாகிய சாதுவன் கடற்கரையில் மிக உயர்ந்த மலையின் கண்ணுள்ள ஒரு மர நிழலில், மஞ்சுடை மால் கடல் உழந்த நோய் கூர்ந்து துஞ்சு துயில்கொள்ள - முகில்களையுடைய பெரிய கடலின்கண் வருந்திய துன்ப மிகுந்து மிக்க உறக்கத்தினையுடைய, அச் சூர்மலை வாழும் நக்க சாரணர் நயமிலர் தோன்றி - அச்சத்தினைத்தரும் அம் மலையிலுறையும் வன்கணாளராகிய  
நக்கசாரணர்கள் ஆண்டுவந்து, பக்கஞ்சேர்ந்து - சாதுவன் மருங்கடைந்து, பரி புலம்பினன் இவன் - இவன் மிகவும் வருந்தியுள்ளான், தானே தமியன் வந்தனன்-தான் ஒருவனேயாய் ஈண்டு வந்தனன், அளியன் - எளிமையுடையன், ஊனுடை இவ்வுடம்பு உணவு என்று எழுப்பலும் - புலால் பொதிந்த இவனுடம்பு நமக்கு உணவாகும் என்று எழுப்புதலும் ;  
  
அலைநீர் - கடல். துஞ்சு துயில்-மிக்க துயில். நக்க சாரணராகிய நாகர் என்க. நயமிலர் - இனிமையில்லாதவர் ; வன்கண்மை யுடையர், பரிபுலம்பு - மிக்க வருத்தம்; ¹'பக்க நீங்குமின் பரிபுலம் பினரென', என்பது காண்க.  
  
¹ சிலப். 10 : 266.

### [17.10](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.10)

ஆதிரை பிச்சையிட்ட காதை  
  
60  
  
65  
  
70 மற்றவர் பாடை மயக்கறு மரபிற்  
கற்றனன் ஆதலின் கடுந்தொழில் மாக்கள்  
சுற்று நீங்கித் தொழுதுரை யாடி  
ஆங்கவர் உரைப்போர் அருந்திறல் கேளாய்  
ஈங்கெங் குருமகன் இருந்தோன் அவன்பால்  
போந்தருள் நீயென அவருடன் போகிக்  
கள்ளடு குழிசியுங் கழிமுடை நாற்றமும்  
வெள்ளென் புணங்கலும் விரவிய இருக்கையில்  
எண்குதன் பிணவோ டிருந்ததுபோலப்  
பெண்டுடன் இருந்த பெற்றி நோக்கிப்  
பாடையிற் பிணித்தவன் பான்மைய னாகிக்  
கோடுயர் மரநிழற் குளிர்ந்த பின்னவன்  
  
60  
  
உரை  
  
71  
  
மற்றவர் பாடை மயக்கறு மரபில் கற்றனன் ஆதலின்-அந்நாகருடைய மொழியைச் சாதுவன் ஐயமறக் கற்றவனாகலின் அவர்களுடன் பேச, கடுந்தொழில் மாக்கள் சுற்று நீங்கித்தொழுது உரையாடி - கொடுந் தொழிலையுடைய அன்னோர் அவனை வருத்தாது மருங்கே விலகிப் பணிமொழி கூறி, ஆங்கவர் உரைப்போர் - அவனுடன் கூறுகின்றவர், அருந்திறல் கேளாய் - அரிய வலியையுடையவனே கேட்பாயாக, ஈங்கு எம் குருமகன் இருந்தோன் - இங்கே எங்களுடைய ஆசிரியன் இருக்கின்றனன், அவன்பால் போந்தருள் நீ என - அவனிடம் நீ வந்தருள் என்ன, அவருடன் போகி - சாதுவன் அவர்களுடன் சென்று, கள் அடு குழிசியும் கழிமுடை நாற்றமும் வெள் என்பு உணங்கலும் விரவிய இருக்கையில் - கள்ளைக் காய்ச்சுகின்ற பானையும் மிகுந்த புலால் நாற்றமுடைய தசையும் வெள்ளிய என்புகளின் வற்றலும் கலந்துள்ள இருக்கையின் கண்ணே, எண்கு தன் பிணவோடு இருந்தது போலப் பெண்டுடன் இருந்த பெற்றி நோக்கி-கரடி தன் பெட்டையோடு இருத்தல் போல மனைவியுடன் அவன் இருந்த தன்மையைக் கண்டு, பாடையிற் பிணித்து அவன் பான்மையன் ஆகி-நாகர் மொழியாற் பேசுந் திறத்தால் அவனை வயமாக்கி அவன் பக்கத்தினனாகி, கோடு உயர் மரநிழல் குளிர்ந்தபின் - கிளைகள் ஓங்கிய மரத்தின் நிழலில் வெப்பந் தணிந்தபின்பு ;  
  
கற்றனனாதலின் அவர்களுடன் பேச என விரித்துரைக்க. மாக்களாகிய, ஆங்கவர் என்க. அருந்திறல்: ஆகுபெயர். குருமகன்-குரு; தலை மகன். இருந்தோன்: முற்று. நாற்றம்: ஆகுபெயர். இருக்கை-இருப்பிடம்; கட்டிலுமாம். ¹"பன்றி புல்வாய்" என்னுஞ் சூத்திரத்து 'ஒன்றிய' என்னும் இலேசால் பிணவு என்பது கரடிக்குங் கொள்ளப்பட்டது. பெண்டு-மனைவி. அவன் பான்மையனாகி-அவன் அன்புக்குரியனாகி என்றுமாம்.  
  
¹ தொல். மரபு. 58.

### [17.11](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.11)

ஆதிரை பிச்சையிட்ட காதை  
  
75  
ஈங்குநீ வந்த காரணம் என்னென  
ஆங்கவற் கலைகடல் உற்றதை உரைத்தலும்  
அருந்துதல் இன்றி அலைகடல் உழந்தோன்  
வருந்தினன் அளியன் வம்மின் மாக்காள்  
நம்பிக் கிளையளோர் நங்கையைக் கொடுத்து  
வெங்களும் ஊனும் வேண்டுவ கொடுமென  
அவ்வுரை கேட்ட சாதுவன் அயர்ந்து  
வெவ்வுரை கேட்டேன் வேண்டேன் என்றலும்  
  
72  
  
உரை  
  
79  
  
அவன் ஈங்கு நீ வந்த காரணம் என் என - நாகர் தலைவன் சாதுவனை நோக்கி ஈண்டு நீ வந்த காரணம் யாது என வினவி, ஆங்கவற்கு அலைகடல் உற்றதை உரைத்தலும்-வணிகன் அவனுக்குத் தான் அலை செறிந்த கடலிற் பட்டதைக் கூறலும், அருந்துதல் இன்றி அலை கடல் உழந்தோன் வருந்தினன் அளியன் - அலைகின்ற கடலின்கண் துன்பமுற்ற இவன் உணவொன்றும் இன்றி வருந்தியுள்ளான் இரங்கத்தக்கான் ஆகலின், வம்மின் மாக்காள் - வாருங்கள் மக்களே, நம்பிக்கு இளையன் ஓர் நங்கையைக் கொடுத்து வெங்களும் ஊனும் வேண்டுவ கொடும் என - இவ்வாண்டகைக்கு இளமை பொருந்திய ஒரு நங்கையை அளித்து விருப்பந்தரும் கள்ளும் புலாலும் வேண்டுமளவும் கொடுங்கள் என மொழிய, அவ்வுரை கேட்ட சாதுவன் அயர்ந்து வெவ்வுரை கேட்டேன் வேண்டேன் என்றலும் - அம்மொழி கேட்ட சாதுவன் சோர்ந்து கொடுஞ் சொற்களை என் காதிற் கேட்டேன் யான் அவற்றை வேண்டேன் என்றுரைத்தலும் ;  
  
வெங்கள் : வெம்மை - விருப்பம்; வெவ்விய கள்ளுமாம். கொடும்: செய்யுமென்னும் வாய்பாட்டு ஏவல். அயர்ந்து-கவலையுற்று என்றுமாம்.

### [17.12](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.12)

ஆதிரை பிச்சையிட்ட காதை  
  
80  
  
பெண்டிரும் உண்டியும் இன்றெனின் மாக்கட்கு  
உண்டோ ஞாலத் துறுபயன் உண்டெனில்  
காண்குவம் யாங்களும் காட்டுவா யாகெனத்  
தூண்டிய சினத்தினன் சொல்லெனச் சொல்லும்  
  
80  
  
உரை  
  
83  
  
பெண்டிரும் உண்டியும் இன்றெனில் மாக்கட்கு உண்டோ ஞாலத்து உறுபயன் - மாதரும் உணவும் இல்லையானால் மக்கட்கு உலகத்தில் அடையக்கூடிய பயன் உண்டோ, உண்டெனில் காண்குவம் யாங்களும் காட்டுவாயாக என - அங்ஙன முண்டென்றால் அதனை யாங்களும் காண்போம் காட்டுவாயாக என்று, தூண்டிய சினத்தினன் சொல் என - மிக்க சீற்றமுடையனாய்க் கூறுக என, சொல்லும் - சாதுவனுரைக்கும் ;  
  
இன்று என்பது பொதுவினையாய் நின்றது. உறுபயன்-இன்பம். தூண்டிய சினத்தினன் காட்டுவாயாக சொல்க என்று சொல்ல வென்க. சொல்லென என்பதிலுள்ள என என்பது சொல்ல என்னுந் துணையாய் நின்றது.

### [17.13](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.13)

ஆதிரை பிச்சையிட்ட காதை  
  
85  
  
90 மயக்குங் கள்ளும் மன்னுயிர் கோறலும்  
கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய்  
பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்  
உறங்கலும் விழித்தலும் போன்ற துண்மையின்  
நல்லறஞ் செய்வோர் நல்லுல கடைதலும்  
அல்லறஞ் செய்வோர் அருநர கடைதலும்  
உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர்  
  
84  
  
உரை  
  
90  
  
மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும்-அறிவை மயக்கும் கள்ளுண்டலையும் நிலைபெற்ற உயிர்களைக் கொல்லுதலையும், கயக்கு அறு மாக்கள் கடிந்தனர்-கலக்கமற்ற அறிவினையுடையோர் விலக்கினர், கேளாய்-கேட்பாயாக, பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்- உலகில் பிறந்தோர்கள் இறத்தலும் இறந்தோர்கள் பிறத்தலும், உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்-உறங்குவதும் உறங்கி விழிப்பதும் போல்வதாக உள்ளமையான், நல்லறஞ் செய்வோர் நல்லுலகு அடைதலும்-நல்ல அறங்களைச் செய்கின்றவர்கள் இன்ப மெய்தற்குரிய மேலுலகங்களை யெய்துதலும், அல்லறம் செய்வோர் அருநரகு அடைதலும் - தீவினைகளை இயற்றுகின்றவர் பொறுத்தற்குரிய துன்பத்தைச் செய்யும் நிரயத்தை அடைதலும், உண்டு என உணர்தலின் உரவோர் களைந்தனர் - உண்மை என்று உணர்தலினால் அறிஞர்கள் அவற்றை நீக்கினர், கண்டனை யாகென - நீ அறிவாயாக என்றுரைக்க ;  
  
கோறல் - கொன்றுண்டல் என்றுமாம். கயக்கு-கலங்குதல்; ஈண்டுக் கலக்கமாவது அறிவின் திரிபு. சாதலும் பிறத்தலும், உறங்கலும் விழித்தலும் போலுதல் ¹"உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி, விழிப்பது போலும் பிறப்பு" என்னும் வாயுறை வாழ்த்தானும் அறியப்படும். சாதல் உறங்கலும் பிறத்தல் விழித்தலுமென நிரனிறை.அல்லறம்-அறமல்லது; பாவம்.  
  
¹ குறள். 339.

### [17.14](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.14)

ஆதிரை பிச்சையிட்ட காதை  
  
கண்டனை யாகெனக் கடுநகை எய்தி  
உடம்புவிட் டோடும் உயிருருக் கொண்டோர்  
இடம்புகும் என்றே எமக்கீங் குரைத்தாய்  
அவ்வுயிர் எவ்வணம் போய்ப்புகும் அவ்வகை  
  
91  
  
உரை  
  
94  
  
கடு நகை எய்தி - நாகா குரவன் பெருஞ் சிரிப்புடையனாய், உடம்புவிட்டு ஓடும் உயிர் உருக்கொண்டு ஓர் இடம் புகும் என்றே எமக்கு ஈங்கு உரைத்தாய்-உடலை விட்டுப் பிரிகின்ற உயிரானது வேறு வடிவு கொண்டு ஓர் இடத்திற் புகும் என்று எமக்கு இப்பொழுது கூறினாய், அவ்வுயிர் எவ்வணம் போய்ப் புகும் அவ்வகை செவ்வனம் உரை என - அவ் வுயிர் எவ்வாறு சென்று புகும் அத்திறத்தினை நன்கு கூறுவாயாக என மொழிய ;  
  
எள்ளல் பற்றி நகை பிறந்தது. செவ்வனம் - நேரே.

### [17.15](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.15)

ஆதிரை பிச்சையிட்ட காதை  
  
95  
  
100  
  
105 செவ்வனம் உரையெனச் சினவா திதுகேள்  
உற்றதை உணரும் உடலுயிர் வாழ்வுழி  
மற்றைய உடம்பே மன்னுயிர் நீங்கிடில்  
தடிந்தெரி ஊட்டினுந் தானுண ராதெனின்  
உடம்பிடைப் போனதொன் றுண்டென உணர்நீ  
போனார் தமக்கோர் புக்கிலுண் டென்பது  
யானோ வல்லேன் யாவரும் உணர்குவர்  
உடம்பீண் டொழிய உயிர்பல காவதம்  
கடந்துசேண் சேறல் கனவினுங் காண்குவை  
ஆங்கனம் போகி அவ்வுயிர் செய்வினை  
பூண்ட யாக்கையின் புகுவது தெளிநீ  
  
95  
  
உரை  
  
105  
  
(அதனைக் கேட்ட சாதுவன்,) சினவாது இது கேள்-சீற்றங் கொள்ளாது இதனைக் கேட்பாயாக, உற்றதை உணரும் உடல் உயிர் வாழ்வுழி - உயிரானது தன்னிடம் உறைகின்றபொழுது உடல் தன்பால் உறுகின்றதனை உணரும், மற்றைய உடம்பே மன்னுயிர் போனால்-அங்ஙனமாகிய உடலே தன்னிடம் நிலைபெற்ற உயிர் பிரிந்தால், தடிந்து எரி ஊட்டினும் தான் உணராது எனின் - வெட்டித் தீயின்கண் இட்டாலும் தான் அறியாது என்றால், உடம்பிடைப் போனது ஒன்று உண்டென உணர் நீ - அவ்வுடம்பிலிருந்து பிரிந்து சென்றது ஒன்று உண்டு என்பதை நீ அறிவாய், போனார் தமக்கு ஓர் புக்கில் உண்டு என்பது-அங்ஙனம் சென்றோர்க்கு ஒரு புகுமிடம் உண்டு என்பதை, யானோ அல்லேன் யாவரும் உணர்குவர்-யான் மட்டு மன்று எல்லோரும் அறிகுவர். உடம்பு ஈண்டு ஒழிய உயிர் பல காவதம் கடந்து சேண் சேறல் - யாக்கை இவ்விடத்தில் நீங்க உயிர் பல காவதங்கள் கடந்து நெடுந்தூரத்திற் செல்லுதல், கனவினும் காண்குவை-கனவின் கண்ணும் காண்பாய், ஆங்ஙனம் போகி அவ்வுயிர் செய்வினை பூண்ட யாக்கையில் புகுவது தெளி நீ - அங்ஙனம் சென்று அவ்வுயிர் தம் வினைப் பயனை நுகர்தற்குரிய உடலின்கண் புகுவதைத் தெளிவாய் நீ, என்று அவன் உரைத்தலும் - என்று சாதுவன் மொழிதலும் ;  
  
உற்றதை யுணர்தல்-தட்பம் வெப்பம் முதலிய ஊற்றினை யுணர்தல். மற்றைய-முற்கூறிய என்றபடி; மற்றை என்பதனை அசையாக்கி, அவ்வுடம்பு என்னலுமாம். எனின் - ஆதலால் ஓரிடத்தைவிட்டுப் போனவர்க்குப் பிறிதோரிடம் உண்டென உலகியலாற் கூறினான், பூண்ட-ஏற்றுக்கொண்ட; ஏற்று நுகர்தற்குரிய என்றபடி.

### [17.16](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.16)

ஆதிரை பிச்சையிட்ட காதை  
  
110 என்றவன் உரைத்தலும் எரிவிழி நாகனும்  
நன்றறி செட்டி நல்லடி வீழ்ந்து  
கள்ளும் ஊனும் கைவிடின் இவ்வுடம்பு  
உள்ளுறை வாழுயிர் ஓம்புதல் ஆற்றேன்  
தமக்கொழி மரபின் சாவுறு காறும்  
எமக்கா நல்லறம் எடுத்தரை என்றலும்  
  
106  
  
உரை  
  
111  
  
எரி விழி நாகனும்-தீப்போலுங் கண்களையுடைய நாகனும், நன்று அறி செட்டி நல்அடி விழ்ந்து - அறத்தினையறிந்த வணிகனது நல்ல அடியில் விழுந்து வணங்கி, கள்ளும் ஊனும் கைவிடின் இவ்வுடம்பு உள்ளுறைவாழுயிர் ஓம்புதல் ஆற்றேன் - கள்ளையும் புலாலையும் கைவிட்டால் இவ்வுடம்பின்கண் தங்கி வாழ்கின்ற உயிரைப் பாதுகாத்த லறியேன், தமக்கு ஒழி மரபின் சாவுறு காறும் எமக்கு ஆம் நல்லறம் எடுத்துரை என்றலும்-தமக்கு அறுதியிட்ட முறைமையால் இறப்பினை எய்துமளவும் எமக்குப் பொருந்திய நல்ல அறங்களை எடுத்துக் கூறுக என்றலும் ;  
  
எரி விழி-எஞ்ஞான்றும் சினத்தினாற் சிவந்த கண். நன்று - அறம். செட்டி-செட்டு உடையவன் ; சிரேட்டி என்பதன் சிதைவுமாம். உறை- உறைந்து என வினையெச்சமாக்குக. தமக்கு - உயிர்கட்டு.

### [17.17](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.17)

ஆதிரை பிச்சையிட்ட காதை  
  
115 நன்று சொன்னாய் நன்னெறிப் படர்குவை  
உன்றனக் கொல்லும் நெறியறம் உரைக்கேன்  
உடைகல மாக்கள் உயிருய்ந் தீங்குறின்  
அடுதொழில் ஒழிந்தவர் ஆருயிர் ஓம்பி  
மூத்துவிளி மாவொழித் தெவ்வுயிர் மாட்டும்  
  
112  
  
உரை  
  
116  
  
நன்று சொன்னாய்-நன்குரைத்தாய், நல் நெறிப்படர்குவை. நல்வழியிலே செல்வாய், உன்றனக்கு ஒல்லும் நெறி அறம் உரைக்கேன்-உனக்கு இயலும் வழியால் அறத்தினைக் கூறுவேன், உடை கல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்குறின்-கடலிற் கலமுடையப்பட்ட மக்கள் உயிர் தப்பி ஈண்டுச் சேர்ந்தால், அடுதொழில் ஒழிந்து அவர் ஆருயிர் ஓம்பி-கொல்லுந் தொழிலைவிட்டு அவர்களுடைய அரிய உயிரைக் காத்து, மூத்துவிளி மா ஒழித்து எவ்வுயிர் மாட்டும் தீத்திறம் ஒழிகென - முதுமையுற்று இறக்கும் விலங்குகளைத் தவிர வேறு எந்த உயிரினிடத்தும் கொலைத் தொழிலை நீங்குவாயாக என்று சாதுவனுரைப்ப;  
  
முதுமையுற்று இறக்கும் விலங்குகளை மட்டும் உண்ணுக என்றான். தீத்திறம் - கொலை. ஓம்பி ஒழிகவென் றியையும்.

### [17.18](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.18)

ஆதிரை பிச்சையிட்ட காதை  
  
120  
  
125 தீத்திறம் ஒழிகெனச் சிறுமகன் உரைப்போன்  
ஈங்கெமக் காகும் இவ்வறம் செய்கேம்  
ஆங்குனக் காகும் அரும்பொருள் கொள்கெனப்  
பண்டும் பண்டும் கலங்கவிழ் மாக்களை  
உண்டோம் அவர்தம் உறுபொருள் ஈங்கிவை  
விரைமரம் மென்றுகில் விழுநிதிக் குப்பையோ  
டிவையிவை கொள்கென எடுத்தனன் கொணர்ந்து  
சந்திர தத்தன் என்னும் வாணிகன்  
வங்கஞ் சேர்ந்ததில் வந்துடன் ஏறி  
இந்நகர் புகுந்தீங் கிவளொடு வாழ்ந்து  
தன்மனை நன்பல தானமும் செய்தனன்  
  
117  
  
உரை  
  
127  
  
சிறுமகன் உரைப்போன் - கீழோனாகிய நாகன் உரைப்பவன், ஈங்கு எமக்காகும் இவ்வறம் செய்கேம் - ஈண்டு எமக்குப் பொருந்திய இவ்வறத்தினைச் செய்யாநிற்பேம், ஆங்கு உனக்கு ஆகும் அரும் பொருள் கொள்கென - நினக்கேற்ற அரிய பொருள்களைக் கொண்டு செல்க வென்று, பண்டும் பண்டும் கலங்கவிழ்மாக்களை உண்டேம் - முன்பெல்லாம் மரக்கலங் கவிழ்ந்து வந்த மக்களைக் கொன்று உண்டோம், அவர் தம் உறுபொருள் ஈங்கிவை- அவர்களுடைய மிக்க பொருள்களாகும் இங்குள்ள இவைகள், விரைமரம் மென்துகில் விழுநிதிக் குப்பையோடு இவை இவை கொள்கென - சந்தன மரங்களும் மெல்லிய ஆடைகளும் சிறந்த பொருட்குவைகளுமாகிய இவற்றையெல்லாம் கொள்க என்று கூற, எடுத்தனன் கொணர்ந்து - சாதுவன் அவைகளை எடுத்து கொணர்ந்து, சந்திரதத்தன் என்னும் வாணிகன் வங்கஞ் சேர்ந்ததில் - சந்திரதத்தன் என்னும் வணிகனது மரக்கலம் வந்ததில், வந்து உடன்ஏறி - உடன் ஏறிவந்து, இந்நகர் புகுந்து ஈங்கு இவளொடு வாழ்ந்து - இந் நகரத்தை யடைந்து இவ்வாதிரையுடன் வாழ்ந்து, தன் மனை நன் பல தானமும் செய்தனன் - தனது மனையின் கண் பல நல்லறங்களையுஞ் செய்தனன்.  
  
உரைப்பவன் அரும்பொருள் கொள்கெனப் பொதுவிற் கூறிப் பின்பு அவற்றை விதந்து, இவை யிவை கொள்க வென்றுரைக்க வென்க. விரைமரம் - மணமுடைய சந்தனம் அகில் முதிலிய மரங்கள். சேர்ந்ததாகிய வங்கத்திலென்க.

### [17.19](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17.19)

ஆதிரை பிச்சையிட்ட காதை  
  
130  
  
135 ஆங்ஙனம் ஆகிய ஆதிரை கையால்  
பூங்கொடி நல்லாய் பிச்சை பெறுகென  
மனையகம் புகுந்து மணிமே கலைதான்  
புனையா ஓவியம் போல நிற்றலும்  
தொழுது வலங்கொண்டு துயாறு கிளவியோடு  
அமுத சுரபியின் அகன்சுரை நிறைதரப்  
பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுகென  
ஆதிரை யிட்டனள் ஆருயிர் மருந்தென்.  
  
128  
  
உரை  
  
135  
  
ஆங்ஙனமாகிய ஆதிரை கையால் - அத் தன்மையளாகிய ஆதிரையின் கையால், பூங்கொடி நல்லாய் பிச்சை பெறுகென - பூங்கொடியனைய மெல்லியலே நீ பிச்சை பெறுவாயாக வென்று உரைக்க, மனையகம் புகுந்து மணிமேகலைதான் - மணிமேகலை ஆதிரையின் இல்லத்திற் சென்று, புனையா ஓவியம்போல நிற்றலும் - அணி செய்யப்படாத ஓவியப்பாவை போல நிற்றலும், தொழுது வலங்கொண்டு - வலம்வந்து வணங்கி, துயரறு கிளவியோடு - இன்சொற்களோடு, அமுதசுரபியின் அகன்சுரை நிறை தர - மணிமேகலை கையிற் கொண்ட அமுதசுரபியினது அகன்ற உள்ளிடம் நிறையுமாறு, பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக என ஆதிரை இட்டனள் ஆருயிர் மருந்தென் - ஆதிரை நல்லாள் ஆருயிர் மருந்தாகிய அன்னத்தை நிலவுலக முழுவதும் பசி நோய் அறுக என்று கூறி இட்டனள் என்க.  
  
பெறுகென - பெறுகவென்று காய சண்டிகை உரைக்க. புனையா ஓவியம் - வண்ணங்களைக் கொண்டெழுதாத வடிவைக் கோட்டின ஓவியம் எனலுமாம்: ¹''புனையா வோவியங் கடுப்ப'' என்புழி நச்சினார்க்கினியர் உரைத்தமை காண்க. பிச்சை யேற்கும்பொழுது துறவறத்தினர் மோனமாக நிற்றல்வேண்டு மென்பவாகலின், 'புனையா வோவியம் போல நிற்றலும்' என்றார். துயரறுகிளவி - இன்சொல்.  
  
ஆதிரை தொழுது கிளவியோடு பசிப்பிணியறுகெனக் கூறி நிறை தர இட்டனளென்க.  
  
விஞ்சையர் பூங்கொடி மாதர்க்கு உரைப்போள், 'ஆங்ஙனமாகிய ஆதிரை கையாற் பிச்சை பெறுக' என்று சொல்ல, மணிமேகலை மனையகம் புகுந்து நிற்றலும், ஆதிரை வலங்கொண்டு ஆருயிர் மருந்து இட்டனள் என முடிக்க.  
  
¹நெடுகல் .147

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.16.1) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.17) · Pramāṇa
