<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.2.12 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 2.12

# Maṇimēkalai's Renunciation 2.12

Maṇimēkalai urai 2.12

- **Language:** Tamil

### [2.12](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.2.12)

விழாவறை காதை  
  
தண்மணற் பந்தருந் தாழ்தரு பொதியிலும்  
புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்துமின்  
  
58  
  
உரை  
  
59  
  
தண்மணற் பந்தரும் தாழ்தரு பொதியிலும் - குளிர்ந்த மணலையுடைய பந்தர்களிலும பலரும் தங்கும் அம்பலங்களிலுப், புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்துமின் - நன்றாகிய அறவுரையை அறிவீர் சேருமீன் ;  
  
மணப்பந்தர் என்னும் பாடத்திற்கு மணத்தையுடைய தண்ணீர்ப்பந்தர் என்க. தாழ்தல் - தங்குதல். புண்ணிய நல்லுரை - தருமபதம். பொருந்துமின் - பொருந்தி உரைமின் என்று  
கொள்க.

- [Previous: 2.11](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.2.11)
- [Next: 2.13](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.2.13)
- [Up: 2](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.2)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.1.56) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.2.12](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.2.12) · Pramāṇa
