<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.25 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 26.25

# Maṇimēkalai's Renunciation 26.25

Maṇimēkalai urai 26.25

- **Language:** Tamil

### [26.25](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.25)

ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை  
  
175  
  
பலர்தொழு பாத்திரங் கையி னேந்திய  
மடவரல் நல்லாய் நின்றன மாநகர்  
கடல்வயிறு புக்கது காரணங் கேளாய்  
  
175  
  
உரை  
  
177  
  
பலர் தொழு பாத்திரம் கையின் ஏந்திய-பலரும் வணங்குந் தகுதியுடைய அமுதசுரபியைக் கையில் ஏந்தியுள்ள, மடவால் நல்லாய் - மடப்பம் பொருந்திய மெல்லியலே, நின்றன் மாநகர் - நின்னுடைய பெரிய நகரம், கடல் வயிறு புக்கது - கடலின் வயிற்றிற் புகுந்தது, காரணம் கேளாய்-அதன் காரணத்தைக் கேட்பாயாக; மாநகர் - காவிரிப்பூம் பட்டினம்.

- [Previous: 26.24](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.24)
- [Next: 26.26](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.26)
- [Up: 26](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.25.176) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.25](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.25) · Pramāṇa
