<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.45 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 28.45

# Maṇimēkalai's Renunciation 28.45

Maṇimēkalai urai 28.45

- **Language:** Tamil

### [28.45](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.45)

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை  
  
190  
  
பொருள்களை நடத்தும் பொருந்த நித்தியமா  
அப்படித் தாகிய தன்மாத்தி காயமும்  
எப்பொருள் களையு நிறுத்த லியற்றும்  
  
188  
  
உரை  
  
190  
  
அதன்மாத்தி காயம் - அதன் மாத்திகாயமாவது, நித்தியமா அப்படித்தாகி - அழியாத அவ் வியல்பினையுடையதாய், எப்பொருள்களையும் நிறுத்தல் இயற்றும் - எல்லாப் பொருள்களையும் நிற்கப் பண்ணும் எ - று.  
  
இதனால், பொருள்களின் இயக்கத்துக்குத் தன்மாத்திகாயம் ஏதுவாதல் போல, அதன்மாத்திகாயம் அவை நிற்றற்குக் காரணமாம் என்பது பெற்றாம். உலகில் உயிர்கள் கட்டுநீங்கி வீடுபெறுதற்கு அதன் மாத்தியும் ஏதுவாகுமென்றற்கு "நித்தியமா அப்படித் தாகி" என்றார். நீலகேசி யுரைகாரும் "தருமாஸ்தியும் அதர்மாஸ்தியும் பக்ஷிக்குச் சிறகுங் காலும்போல ஜீவபுத்கலங்களுடைய கமனத்திற்கும் ஸ்திதிக்கும் அப்ரோக சாதனமென்றவா றாயிற்று" (நீல. 294. உரை) என்பர்.

- [Previous: 28.44](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.44)
- [Next: 28.46](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.46)
- [Up: 28](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.27.186) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.45](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.45) · Pramāṇa
