<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.28 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 30.28

# Maṇimēkalai's Renunciation 30.28

Maṇimēkalai urai 30.28

- **Language:** Tamil

### [30.28](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.28)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை  
  
உலக விருத்த முலகின்மா றாமுரை  
இலகுமதி சந்திர னல்ல வென்றல்  
  
162  
  
உரை  
  
163  
  
உலக விருத்தம்-உலக விருத்தமெனப்படும் பக்கப் போலியாவது; உலகின்மாறாம் உரை - உலகவர் கூறும் கூற்றுக்கு மாறு படக் கூறுவதாம்; இலங்கு மதி சந்திரன் அல்ல என்றல்-விளங்குகின்ற திங்களைச் சந்திரனல்ல என்று சொல்வது போல்வது எ-று.  
  
உலகவர், உலகத்தில் வாழும் உயர்ந்தோர். அவர் உரைப்பது மரபு. அதற்கு மாறாகப் பேசுவது மரபு வழு. சந்திரனை மதி யென்பது மரபாதலின், அதனை அன்று என்பது மரபு வழுவாகிய உலக விருத்தமாயிற்று. "எப்பொரு ளெச்சொலி னெவ்வா றுயர்ந்தோர் செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே" (நன் 388) என்றார் பவணந்தியாரும் 'மயங்கல் கூடா தம்மர பினவே" (சொல். 11) என்பது தொல்காப்பியம். மதி யென்றது சந்திரனையே யென்பது தோன்ற, "இலங்குமதி" எனச் சிறப்பித்துக் காட்டுகின்றார். இதற்கு நியாயப் பிரவேசம், உலக விருத்தமென்பது "மனிதர் மண்டையோடு தூய்மையுடையது, உயிருடம்பினுறுப்பாதலால், சங்குச் சிப்பிபோலும்¹ என்று கூறுவது" என்று கூறுகிறது; இதனின் வேறே இலக்கணம் கூறப்படவில்லை. இதற்கு இலக்கணமும் உதாரணமும் கூறும் பதார்த்ததரும சங்கிரகம், "மது பார்ப்பானால் உண்ணப்படுவது" என்று உதாரணம் காட்டுகிறது. பார்ப்பான் மது வுண்ணானென்பது உலகத்து உயர்ந்தோர் உரைக்கும் உரை. உலக விருத்தமுரைப்போன் பேய்எனப்படுவ னென்பாராய்த திருவள்ளுவர், "உலகத்தா ருண்டென்ப தில்லென்பான் வையத், தலகையா வைக்கப்படும்" (குறள். 850) என்பர். இதனைச் சுலோக வார்த்திக முடையார் சருவலோக பிரசித்த விரோத மென்றும், நியாயமுக முடையார் பிரசித்தவிரோதமென்றும் வழங்குப.  
  
¹ வைசேடிக சூத்திரம். iii. 2. 8. 12.

- [Previous: 30.27](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.27)
- [Next: 30.29](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.29)
- [Up: 30](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.161) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.28](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.28) · Pramāṇa
