<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.34 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 30.34

# Maṇimēkalai's Renunciation 30.34

Maṇimēkalai urai 30.34

- **Language:** Tamil

### [30.34](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.34)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை  
  
ஏதுப் போலி யோதின்மூன் றாகும்  
அசித்த மநைகாந் திகம்விருத் தம்மென  
  
191  
  
உரை  
  
192  
  
ஏதுப்போலி ஓதின் -ஏதுப்போலி யெனப்படும் தீய வேதுவை வகுத்துக் கூறுமிடத்து; அசித்தம் அநைகாந்திகம் விருத்தம் என - அசித்தமென்றும் அநைகாந்திகமென்றும் விருத்த மென்றும்; மூன்றாகும் - மூவகைப்படும் எ - று.  
  
ஏதுப் போலியை அசித்தம் முதலிய மூன்றாக வகுத்துப் பின்னொவ் வொன்றையும் முறையே நான்கும் ஆறும் நான்குமாக விரித்துக் கூறுப வாதலின், அந் நெறிமை தோன்ற, ''ஓதின்'' என்றார். அசித்தமாவது ஏது பொருந்தாமையாற் கருதிய பயன் சித்தியாதொழிதல்; அநை காந்திகமாவது ஒரு முடிபுமின்றி யொழிவது; விருத்தமாவது ஏதுவானது வேண்டும் பயனைச் சாதியாது முரண்விளைத் தொழிவது. இனி ¹நியாயப் பிரவேசமுடையாரும் ஏது வாபாசம் அசித்த முதலியமூன்று வகைப்படுமென்றேகூறுகின்றார்; மற்று, கோதமர், சவ்வியபிசாரி, விருத்தம் பிரகரண சமம், சாத்திய சமம். காலாதீதம் என ஐவகையாகவும் பிரசத்தபாதர், அசித்தம், விருத்தம், சந்திக்தம், அனத்தியாவசிதம் என நான்கு வகையாகவும் வேறு சிலர் ஆறுவகையாகவும் கூறுப, ஆராய்ச்சியாளர், அசித்தமென்னும் ஏதுப்போலிவகை வடநாட்டு அளவை நூலார்க்குப்² பிற்காலத்தே தெரியவந்ததென்பர். ஏனை அநைகாந்திக மும் விருத்தமும் அளவை நூலார் பலர்க்கும் பண்டே தெரிந்தனவாம்.  
  
1 நியா. பிர. பக். 3-8 ² Ind. Logic. P. 190.

- [Previous: 30.33](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.33)
- [Next: 30.35](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.35)
- [Up: 30](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.191) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.34](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.34) · Pramāṇa
