<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.36 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 30.36

# Maṇimēkalai's Renunciation 30.36

Maṇimēkalai urai 30.36

- **Language:** Tamil

### [30.36](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.36)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை  
  
195  
எனநான் கசித்த முபயா சித்தஞ  
சாதன வேது விருவர்க்கு மின்றிச்  
சத்த மநித்தங் கட்புலத் தென்றல்  
  
195  
  
உரை  
  
197  
  
உபயா சித்தம் - உபயா சித்தமென்னும் ஏதுப்போலியா வது; சாதனவேது - சாதனமாகிய ஏது; இருவர்க்கும் இன்றி வாதி பிரதிவாதிகளாகிய இருவர்க்கும் சாதனமாதலில்லையாய்; சத்தம் அநித்தம் கட்புலத்து என்றல்-சத்தம் அநித்தம் கண்ணுக்குப் புலனாதலால் என்றாற் போல்வதாம் எ - று.  
  
பக்கவசனத்திருக்கும் சாத்திய தன்மத்தைச் சாதித்திக்கொடுக்கும் சிறப்புப்பற்றி, ஏதுவைச் ''சாதனவேது'' என்று சிறப்பித்தார்; சாதனமாதல் ஏதுவிற்கு இயல்பாயினும் ஈண்டு அது சாதனமாதல் இல்லையென்ற குறிப்பால் இவ்வாறு கூறினார் என்றுமாம். சத்தம் அநித்த மென்னும் பக்கவசனத்தில் அநித்தமென்னும் சாத்தியதன்மத் தைச் சாதித்தற்கு ஏதுவாகிய ''கட்புலனாதலின்'' என்பது வாதி பிரதி வாதிகளாகிய இருவர்க்கும் பொருந்தாமையாற் பயன்படாமை காண்க. இதுபற்றியே இஃது உபயாசித்தவேதுப் போலியாயிற்று. நியாயப் பிரவேசமுடையாரும் இவ்வுபயாசித்தத்துக்கு இவர் காட்டிய உதார ணத்தை மேற்கொண்டு இலக்கணத்தைக் கூறாதொழுந்தார்; பிரசத்த பாதர். ''சத்தம் அநித்தம். அவயவமுடைமையால்'' என்று உதாரணம் கூறுகின்றார். கோதமர் இதனைச் சொரூபாசித்தி யென்பர்.

- [Previous: 30.35](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.35)
- [Next: 30.37](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.37)
- [Up: 30](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.196) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.36](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.36) · Pramāṇa
