<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.44 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 30.44

# Maṇimēkalai's Renunciation 30.44

Maṇimēkalai urai 30.44

- **Language:** Tamil

### [30.44](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.44)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை  
  
245  
  
250  
விபக்கைக தேச விருத்த சபக்க  
வியாபி யாவ தேது விபக்கத்  
தோரிடத் துற்றுச் சபக்கத்தொத் தியறல்  
சத்தஞ் செயலிடைத் தோன்று மநித்தமா தலினெனின்  
அநித்த வேதுச் செயலிடைத் தோன்றற்கு  
அநித்த மாதலனின் எனின்  
விபக்க வாகா யத்தினு மின்னினு  
மின்னி னிகழ்ந்தா காசத்துக் காணாது  
சபக்கக் கடாதிக டம்மில்  
எங்குமா யேகாந்த மல்ல மின்போல்  
அநித்தமாய்ச் செயலிடைத் தோன்றாதோ கடம்போல  
அநித்தமாய்ச் செயலிடைத் தோன்று மோவெனல்  
  
243  
  
உரை  
  
253  
  
¹விபக்கைகதேச விருத்தி சபக்க வியாபி - விபக்கத்து ஏகதேச விருத்தியாய்ச் சபக்கத்து முழுதும் வியாபித்திருக்கும் அநைகாந்திக வேதுப் போலியாவது; ஏது - கூறப்படும் ஏதுவானது; விபக்கத்து ஓரிடத்து உற்று - விபக்கத்துள்ள பொருள்களில் ஒன்றிற் பொருந்தி; சபக்கத்து ஒத்து இயறல் - சபக்கத்துள்ள பொருள்களெல்லாவற்றிலும் நன்கு பொருந்தி யிருப்பதாம்; சத்தம் செயலிடைத் தோன்றும் - சத்தம் செய்யப்பட்டுத் தோன்றும் என்று பக்க வசனம் கூறி; அநித்த மாதலின் எனின்- அநித்த மாதலால் எனப் பக்கதன்ம வசனமாகிய ஏதுவைக் கூறினால்; அநித்த வேது - அநித்தமாகிய அந்த ஏது; செயலிடைத் தோன்றற்கு விபக்கு ஆகாயத்தினும் மின்னினும்-செய்யப்பட்டுத் தோன்றுவதாகிய தன்மத்துக்கு விபக்கமாகிய ஆகாயம் மின்னென்ற இவற்றுள்; மின்னின் நிகழ்ந்து-மின்னிடத்தே பொருந்தியும்; ஆகாசத்துக் காணாது - ஆகாசத்தின்கண் பொருந்தாமலும்; சபக்கக் கடாதிகள் தம்மில் - அநித்தமாகிய தன்மத்துக்குச் சபக்கப பொருள்களான கடம் முதலியவற்றில்; எங்குமாய்-எல்லாவற்றிலும் முழுதும் பொருந்துவதாய்; ஏகாந்தம் அல்ல-அநைகாந்திக மென்னும் குற்றமாய்; மின்போல் அநித்தயமாய்ச் செயலிடைத் தோன்றாதோ - மின்போல் அநித்தத் தன்மை யுடைத்தாய்ச் செய்யப்பட்டுத் தோன்றுவதன்றோ எனவும்; கடம்போல் அநித்தமாய்ச் செயலிடைத் தோன்றுமா-கடம்போல் அநித்தத் தன்மையுடையதாய்ச் செயப்படு பொருளாய்த் தோன்றுவதோ எனவும்; எனல் - ஐயத்துக் கிடமாய் ஒரு முடிவெய்தா வகையிற் கூறுவது எ - று.  
  
இது முன்னர்க்கூறிய சபக்கைகதேச விருத்தி விபக்க வியாபியைப்போல்வதாயினும், ஆண்டுச் சபக்கத்துக் காணப்பட்ட ஏகதேச விருத்தி, ஈண்டு விபக்கத்தும், ஆண்டு விபக்கத்துப் பொருந்தி நின்ற வியாத்தி ஈண்டுச் சபக்கத்தும் நிற்பதே வேறுபாடென்க. ஈண்டும் இதன் இலக்கணத்தை "ஏது விபக்கத்தோரிடத் துற்றுச் சபக்கத்து ஒத்தியறல்" என்றார். வியாபித் திருப்பதை "ஒத்தியறல்" என்றார். ஓரிடம் ஏகதேசம்- இதனை விளக்கற்கு மேற்கொண்ட உதாரண வியல்பை, "சத்தஞ் செயலிடைத் தோன்றும் அநித்த மாதலின் எனில் அநித்த வேது செயலிடைத் தோன்றற்கு விபக்க வாகாயத்தினு மின்னினும் மின்னினிகழ்ந் தாகாசத்துக் காணாது சபக்கக் கடாதிகள் தம்மில் எங்குமாய்" என்றார். சொன்முடிபு நோக்கி, எங்குமாயென எச்ச வாய்ப்பாட்டாற் கூறினார். செயலிடைத் தோன்றலைத் தன்மமாக வுடைய சபக்கத்துக்கு மீட்சியாகிய விபக்கத்தில் செயலிடைத் தோன்றாமை தன்மமாதலின் அதனையுடைய ஆகாய மின்னுக்களை, "செயலிடைத் தோன்றற்கு விபக்க வாகாயத்தினு மின்னினு" மென்றும், அநித்தத்துவமாகிய தன்மம் மின்னிடத்து உளதாயும் ஆகாயத்தின் கண் இலதாயும் இருத்தல்பற்றி, "மின்னின் நிகழ்ந்து ஆகாசத்துக் காணாது" என்றும் கூறுமாற்றால் விபக்கைகதேச விருத்திகூறியவா றாயிற்று. அநித்தத்துவமும் செயலிடைத் தோன்றலுமாகிய தன்மத்தை யுடைய கட முதலியன சபக்கமாதலினாலும், அவற்றின்கண் அது முழுதும் பொருந்தி யிருத்தலினாலும், "சபக்கக் கடாதிகள் தம்மில் எங்குமாய்" என்னுமாற்றால் சபக்கத்து வியாபியாதல் விளக்கியவாறாயிற்று. இனி, இவ்வேது அநைகாந்திகமாதலை விளக்கற்கு "மின்போல்அநித்த" மாய்ச் செயலிடைத் தோன்றாதோ கடல்போல் அநித்தமாய்ச் செயலிடைத் தோன்றுமோ" என்றார்.  
  
¹ நியா. பிர. பக். 4, 10-16.

- [Previous: 30.43](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.43)
- [Next: 30.45](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.45)
- [Up: 30](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.246-251) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.44](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.44) · Pramāṇa
