<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.47 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 30.47

# Maṇimēkalai's Renunciation 30.47

Maṇimēkalai urai 30.47

- **Language:** Tamil

### [30.47](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.47)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை  
  
275  
  
280 விருத்தந் தன்னைத் திருத்தக விளம்பில்  
தன்மச் சொரூப விபரீத சாதனந்  
தன்ம விசேட விபரீத சாதனந்  
தன்மிச் சொரூப விபரீத சாதனந்  
தன்மி விசேட விபரீத சாதனம்  
என்ன நான்கு வகைய தாகும் அத்  
  
275  
  
உரை  
  
280  
  
விருத்தம் தன்னை திருத்தக விளம்பில்-விருத்த வேதுப் போலியைச் செம்மையாகக் கூறுவதாயின் ; தன்மச்சொரூப விபரீத சாதனம்......என்ன - தனமச் சொரூப விபரீத சாதனமென்றும், தன்ம விசேட விபரீத சாதனமென்றும், தன்மிச் சொரூப விபரீத சாதனமென்றும், தன்மி விசேட விபரீத சாதன மென்றும்; நான்கு வகையதாகும் - நான்கு வகையினையுடைய தாம் எ - று.  
  
இக்கூறிய நான்கும் நியாயப் பிரவேசத்தும் உள்ளன. விருத்தமாவது: ஏது, பக்கம் சபக்கம் விபக்கமென்ற மூன்றனுள் சபக்கத் தின்றிப் பக்கத்தும் விபக்கத்தும் பொருந்தி யிருப்பது என்று சத்தபதார்த்தி யென்னும் நூல் (சு. 159) கூறுகிறது; அஃதாவது பக்க வசனத்துக் கூறப்படும் துணிபொருளைச்சாதியாது மாறுகொளநிற்பது என்பதாம். நியாய நூல்களுள் விருத்தம் ஒன்றாகக் கொள்ளப்பட்டிருப்பினும் இந்நூலில் நான்காக வகுக்கப்பட்டுள்ளது; சுலோக வார்த்திகமுடையார்,¹ விருத்த வேதுப் போலியைச் சிலர் அறுவகை யாகவும் சிலர் நால்வகையாகவும் சிலர் ஒன்றாகவும் கொண்டனரென்று கூறி, அறுவகையாவன, தருமச்சொரூப விருத்தம், தருமவிசேட விருத்தம், தருமிச்சொரூப விருத்தம், தருமி விசேட விருத்தம் தருமா தருமச் சொரூப விருத்தம், தருமாதரும விசேட விருத்தம் என்பன வாம் என்பர். அநைகாந்திக் வகையைத் தொகுத்து இரண்டாகக் கொண்டதுபோல, இவ்விருத்த வேதுப்போலியையும் தரும கீர்த்தி யென்பார² இரண்டாகவே தொகுத்துக்கொள்ளுகின்றார்.  
  
¹ சுலோக வார்த்திகம், அனுமான. 96. ² நியாயபிந்து. பக். 115

- [Previous: 30.46.9](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.46.9)
- [Next: 30.48](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.48)
- [Up: 30](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.276) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.47](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.47) · Pramāṇa
