<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.49 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 30.49

# Maṇimēkalai's Renunciation 30.49

Maṇimēkalai urai 30.49

- **Language:** Tamil

### [30.49](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.49)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை  
  
290  
  
295  
  
300  
தன்ம விசேட விபரீத சாதனஞ்  
சொன்ன வேதுச் சாத்திய தன்மந்  
தன்னிடை விசேடங் கெடச் சாதித்தல்  
கண்முத லோர்க்கு மிந்திரி யங்கள்  
எண்ணிற் பரார்த்தந் தொக்குநிற் றலினாற்  
சயனா சனங்கள் போல வென்றால்  
தொக்கு நிற்றலி னென்கின்ற வேதுச்  
சயனா சனத்தின் பராரத்தம்போற் கண்முதல்  
இந்தியங் களையும் பரார்த்தத்திற் சாதித்துச்  
சயனா சனவா னைப்போ லாகிக்  
கண்முத லிந்தியத் துக்கும் பரனாய்ச்  
சாதிக் கிறநிர் அவயவமா யுள்ள  
ஆன்மா வைச்சா வயவ மாகச்  
சாதித் துச்சாத் தியதன் மத்தின்  
விசேடங் கெடுத்த லின்விப ரீதத்  
  
288  
  
உரை  
  
302  
  
தன்ம விசேட விபரீத சாதனம்-தன்ம விசேட விபரீத சாதன மெனப்படும் ஏதுப்போலியாவது; சொன்ன ஏது - வாதி யாற் கூறப்பட்ட ஏதுவானது; சாத்திய தன்மம் தன்னிடை - துணியப்படும் தன்மத்தின் கண்ணுள்ள; விசேடம் கெடச் சாதித்தல் - விசேடம் இன்றாமாறு சாதிப்பதாம்; ஒர்க்கும் கண் முதல் இந்திரியங்கள் - பொருள்களை யறிதற்குக் கருவியாகிய கண் முதலிய பொறிகள்; எண்ணின் - ஆராயுமிடத்து ; பரார்த்தம் - தம் மின் வேறாயுள்ள ஆன்மாவுக்குப் பயன்படுவனவாம்; தொக்கு நிற்றலினால் - பலவாய்த் தொக்கிருப்பதால் ; சயன ஆசனங்கள் போல - படுக்கையும் இருக்கையும் போல; என்றால்-என்று கூறிய வழி; தொக்கு நிற்றலின் என்கின்ற ஏது-தொக்குநிற்பதால்என்று கூறிய ஏது ; சயனாசனத்தின் பரார்த்தம் போல் - படுக்கையும் இருக்கையுமாகியவைகள் பிறர்க்குப் பயன்படுவனவாதல் போல; கண் முதல் இந்தியங்களையும் பரார்த்தத்திற் சாதித்து - கண் முதவிய பொறிகளையும் பிறர்க்குப் பயன்படுவனவாதலை யெய்துவித்து; சயனாசனவானைப் போலாகி-படுக்கையிருக்கைகளைப் பயன்கொள்ளும் புருடனுளனாதல் போல ; கண் முதலிய இந்தியத்துக்கும் பரனாய்ச் சாதிக்கிற - கண் முதலிய பொறிகட்கு வேறாய் அவற்றைப் பயன் கொள்ளுவோனாய் வேறே சாதிக்கப்படுகிற; நிர் அவய மாயுள்ள ஆன்மாவை - அவயப் பகுப்பில்லாத ஆன்மாவை; சாவய மாகச் சாதித்து - சயனாசனவானைப்போல அவயவப் பகுப்புடையனாகச் சாதிக்கு முகத்தால்; சாத்திய தன்மத்தின்-சாத்திய தன்ம மாகிய பரார்த்தம் என்புழிப் பரனாகிய ஆன்மாவினது; விசேடம் கெடுத்தலின் - சிறப்பியல்பாகிய அவயவப் பகுப்பின்மையைக் கெடுத்து அவயப் பகுப்புடையனாக்குதலால்; விபரீதம் - விருத்த ஏதுவாயிற்று எ - று.  
  
சாத்திய தன்மத்தோடு பிரிப்பின்றி யொன்றாயிருக்கும் சிறப்பியல்பைச் "சொரூபம்" என்றாராதலின், அவ்வாறின்றி அத்தன்மத்தால் உய்த்துணரப்படும் சிறப்பியைபுகளை ஈண்டு 'விசேடம்' என்றார். "கண்முதல் இந்திரியங்க" ளென்னாது "ஒர்க்கு" மென மிகுத்துச் சொன்னதனால், கண் முதலிய பொறிகளேயன்றி அவற்றோடு கூடிய உடம்பும் கொள்க. தான் வேறு தனுகரணாதிகள் வேறு எனப் பகுத்துணரவார்க்கன்றி, அவை பரார்த்தமென்பது விளங்காமையின், "எண்ணின்" என்றார். வாதியாவான் நிகழ்த்திய கூற்றில், "கண் முதலிய இந்திரியங்கள் பரார்த்த" மென்றது பக்க வசனம்; "தொக்கு நிற்றலினால்" என்றது ஏது; "சயனாசனங்கள் போல" என்றது திட்டாந்தம். தொக்கு நிற்றலினால் என்ற ஏதுவை மறுக்கின்றாராதலின் மீட்டும், "தொக்கு நிற்றலின் என்கின்ற ஏது" என்றார். சயனாசனங்கள் பரார்த்தம் எனவே, அவற்றிற்குப் பரனாய்ப் பயன்கொள்வான் ஒருவன் உண்டெனத் துணியப்படுதலின், "சயனாசனவானைப் போல" என்றார். சயனாசனங்களும் பலவற்றின் தொகுதியாய காரியமாதலின், "சாதித்து" எனச் செய்தெனெச்சத்தாற் கூறினார். ¹பரன், வேறானவன் ; தன்னின் வேறாகக் காணப்படுவனவற்றினும் தான் மேம்பட்ட இயல்புடைமை பற்றி ஆன்மாவைப் பரன் என்றார். சாதிக்கிற என்றது செயப்பாட்டு வினைப் பொருட்டு, சாவயவம் - அவயத்தோடு கூடியது; நிரவயவம்-அவயவமில்லாதது. சாங்கியனொருவன் பௌத்த னொருவனை நோக்கி, ஆன்மாவினுண்மை சாதிப்பானாய் "கண் முதலிய இந்திரியங்கள் பரார்த்தம். தொக்கு நிற்றலினால், சயனாசனங்கள் போல்" என்று மொழிந்து சயனாசனங்கட்குப் பரமாய்ச் சயனாசனவான் ஒருவன் உளனாதல் போல, கண் முதலிய இந்திரியங்கட்கும் பரமாய் ஆன்மா வென்ப தொன்றுண்டென்று சாதித்தானாக, அவன் கூறிய ஏதுவை மறுக்கப்புக்க பௌத்தன், சாங்கியனால் காட்டப்பட்ட சயனாசனவான் அவயவத்தோடு கூடியவ னாதலால், ஆன்மாவும் ஜவயவத்தோடு கூடியவ னாவானென்றும் மற்று ஆன்மா நிர் அவயவி யென்பது சாங்கியன் கொள்கையாதலின், நிர் அவயவியாகியவிசேடவியல்பை இவ்வாதம் கெடுத்தழித்தலின், ² சாங்கியன் கூறிய ஏது தன்ம விசேட விபரீத சாதனமாயிற்று. குமரிலபட்டர் இத் தன்ம விசேட விபரீத சாதனத்தைத் தருமாதருமி விசேட பாதை என்பர்.  
  
¹ஒழிபொருளைப் பரன் என்பது தருக்க நெறி. இது ஞானாமிர்த முதலிய தமிழ் நூல்களிலும் மிருகேந்திர முதலிய வடநூல்களிலும் வழங்குவது சித்தார்த்த சைவர் அறிந்தது. ² இச்சாங்கிய வாதம் சாங்கிய காரிகை (காரிகை 17) யிலும் சுலோக வார்த்திகத்திலும், (அனுமானபரி. 96-107) நியாய ரத்னாகரத்திலும், சாந்த ரஷிதருடைய தத்துவ சங்கிரகத்திலும் (vii 307-10) காணப்படுகிறது

- [Previous: 30.48](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.48)
- [Next: 30.50.1](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.50.1)
- [Up: 30](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.296-301) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.49](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.49) · Pramāṇa
