<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.53 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 30.53

# Maṇimēkalai's Renunciation 30.53

Maṇimēkalai urai 30.53

- **Language:** Tamil

### [30.53](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.53)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை  
  
330  
  
335  
கூறப் பட்டன விங்க ணவற்றுட  
சாதன் மியதிட் டாந்தவா பாசம்  
ஓதி லைந்து வகையுள தாகுஞ்  
சாதன தன்ம விகலமுஞ் சாத்திய  
தன்ம விகலமு முபய தன்ம  
விகலமு மநன்னு வயம்விப ரீதான்  
னுவய மென்ன வைதன் மியதிட்  
டாந்த வாபா சமுமை வகைய  
சாத்தி யாவி யாவி ருத்தி  
சாத னாவி யாவி ருத்தி  
யுபயாவி யாவி ருத்தியவ் வெதிரேகம்  
விபரீத வெதிரேக மென்ன விவற்றுட்  
  
328  
  
உரை  
  
339  
  
இங்கண் - இவ்விடத்தே; அவற்றுள்-திட்டாந்தப்போலி வகை இரண்டனுள்; சாதன்மிய திட்டாந்த ஆபாசம் ஒதில்-சாதன் மிய திட்டாந்தப் போலிவகையைக் கூறுமிடத்து; சாதன தன்மவிகலம் ...என்ன-சாதன தன்ம விகலம் சாத்திய தன்ம விகலம் உபய தன்ம விகலம் அநந்நுவயம், விபரீதாந்துவயம் என்று; ஐந்து வகையுளாகும் -ஐந்து வகைப்படும்; வைதன்மிய திட்டாந்த ஆபாசம் - வைதன்மின் திட்டாந்தப் போலியும்; சாத்தியாவியாவிருத்தி... என்ன - சாத்தியாவியா விருத்தி யென்றும், சாதனா வியாவிருத்தி யென்றும்,உபயாவியாவிருத்தியென்றும் அவ்வெதிரேகமென்றும், விபரீத வெதிரேக மென்றும்; ஐவகைய-ஐந்துவகைப்படும் எ - று.  
  
நியாயப் பிரவேசமுடையாரும் இவ்வாறே சாதன்மியம் வைதன்மியம் என்ற இரண்டையும் தனித்தனியாக நிறுத்தி அவ்வைந்துவகையான வகுத்துரைப்பர். ஆயினும் அவர் வகுத்துரைக்கும் பெயர்வகை சிறிது வேறுபடுகிறது. சாதன்மிய திட்டாந்தப் போலியைச் சாதன தன்மா சித்தம், சாத்திய தன்மா சித்தம், உபய தன்மா சித்தம், அநந்நுவயம், விபரீதாந்நுவயம் என்றும், வைதன்மிய திட்டாந்தப் போலிவகையைச் சாத்தியவியா விருத்தம், சாதனவியா விருத்தம், உபயாலியா விருத்தம், அவ் வெதிரேகம், விபரீத வியதிரேகம் என்றும் கூறுகின்றார். பிரசத்தபாதந் ¹ சாதன்மிய திட்டாந்தப்போலியைச் சாதன்மியநிதரினாபாச மென்று கொண்டு, இலிங்கா சித்தம் அனுமேயா சித்தம், உபயா சித்தம், ஆசிரயா சித்தம், அனனுகதம், விபரீதானுதகம் என அறுவகையாகவும், வைதன்மிய நிதரிசனாபாசத்தை, இலிங்கா வியா விருத்தம், அனுமேயா வியா விருத்தம், உபயா வியா விருத்தம், ஆசிரயா சித்தம் அவியா விருத்தம், விபரீத வியா விருத்தம் என அறுவகையாகவும் கூறுவர். தரும கீர்த்தி ² யென்பார் இம்மணிமேகலை யாசிரியர் கொண்டதனைப்பெருக்கி இனத்துக்கு ஒன்பதாக வகுத்துரைக்கின்றார். பிற்காலத்து நையாயிகரான நியாயசார முடையார் ஒவ்வொன்றையும் பப்பத்தாகவகுத்துரைப்பர். இத் திட்டாந்தப்போலி, நையாயிகருட் சிலரால் உதாகரணாபாசம் என்று வழங்கப்படுகிறது. சைவாகமங்கள், சாதன்மிய திட்டாந்தப் போலியைச் சாதன வைகலியம் சாத்திய வைகலியம், உபய வைகலியம், சொருப வைகலியம் என நான்காகவும், வைதன்மிய திட்டாந்தப் போலியைச் சாத்தியாபாவ விகலம், சாதனாபாவ விகலம், உபயா பாவ விகலம், ஆசிரியாபாவ விகலம் என நான்காகவும் வகுத்துக் கூறும். இவற்றைப் பௌட்கர முதலிய ஆகமங்களுட் காண்க.  
  
¹ வைசே. பாடி. பக். 247. ² நியாயபிந்து. பக், 166-7.

- [Previous: 30.52](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.52)
- [Next: 30.54](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.54)
- [Up: 30](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.331-336) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.53](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.53) · Pramāṇa
