<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.55 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 30.55

# Maṇimēkalai's Renunciation 30.55

Maṇimēkalai urai 30.55

- **Language:** Tamil

### [30.55](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.55)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை  
  
350  
  
355  
  
சாத்திய தன்ம விகல மாவது  
காட்டப் பட்ட திட்டாந் தத்திற்  
சாத்திய தன்மங் குறைவு படுதல்  
சத்த நித்த மமூர்த்த மாதலால்  
யாதொன் றியாதொன் றமூர்த்தமது நித்தம்  
புத்தி போஒ லென்றால்  
திட்டாந்த மாகக் காட்டப் பட்ட  
புத்தி யமூர்த்த மாகி நின்றே  
யநித்த மாதலாற் சாதன வமூர்த்தத்துவ  
நிரம்பிச் சாத்திய நித்தத்துவங் குறையும்  
  
349  
  
உரை  
  
358  
  
சாத்திய தன்ம விகலமாவது-சாத்திய தன்ம விகலமென்னுந் திட்டாந்தப் போலியாவது; காட்டப்பட்ட திட்டாந்தத்தில்- வாதியாவான் தான் கூறிய ஏதுவோடு கூடியபக்க வசனத்தைநாட்டுவதற்குக் காட்டிய திட்டாந்தத்தின்கண்; சாத்தியதன்மம் குறைவு. படுதல்-சாத்தியமாகிய தன்மியின் தன்மம் இல்லையாய் விடுதல சத்தம் நித்தம் அமூர்த்தமாதலால்-சத்தம் நித்தமாம் அமூர்த்தமாத வினாலே என்று பக்கவசனமும் ஏதுவும்; யாதொன்றும் யாதொன்று அமூர்த்தம் அதுநித்தம்-யாதுயாது அமுர்த்தம் அதிநித்தம் என்று வியாத்தி வசனமும் கூறி, புத்திபோல் என்றால்-புத்திபோல எனத் திட்டாந்தம் காட்டினால்; திட்டாந்தமாககக் காட்டப்பட்ட புத்தி - வாதியால் திட்டாந்தமாக எடுத்துக்காட்டப்பட்ட புத்தியானது ; அமூர்த்தமாகி நின்றே-அமூர்த்தத்துவ முடையதாயினும்; சாதன அமூர்த்தத்துவம் நிரம்பி - ஏதுவின் கண்ணுள்ள அமூர்த்தத்துவமாகிய தன்மம் பொருந்த ; சாத்திய நித்தத்துவம் குறையும்-பக்க தன்மியின் தன்மமாகிய நித்தத்துவம் பொருந்தா தொழிகிறது ; ஆதலால் இது சாத்திய தன்ம விகலமாயிற்று எ - று.  
  
பக்க வசனத்துக் காட்டப்படும் தன்மியின் தன்மமுடைமையைச் சாதித்தற்குத் திட்டாந்தம் காட்டுமிடத்து, அது சபக்கமாதலின் அதன் பால் சாதித்தற்குரிய தன்மத்துக்கு வியாத்தியிலே யாயின் குற்றமா மென்று கூறலின், "சாத்திய தன்மம் குறைவுபடுதல்" என்று குறித்தார். யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் என எதுவுக்கு வியாத்தி வசனம் கூறினும், அதனுட் டுணிபொருளாகக் கூறப்படும் நித்திய தன்மம் திட்டாந்தமாகிய புத்தயின்கண் இனமையின் இது திட்டாந்தப் போலியாயிற்றென வறிக. இனி உமாபதி சிவாச்சாரியார், இதற்கு, "ஆத்மா நித்தியம், விபு வாகையால், ஆகாசம்போல" என்று கூறி, ஆகாசம் சத்த தன்மாத்திரையின் காரியமாகையால் நித்தியத்துவமுடைய தன்மையின் சாத்திய விகலமாயிற்று ¹ எனபர். இதற்குச் ²சிவநெறிப் பிரகாசவுரைகாரர். "காரியம் காரியமல்லவென்று சந்தேகப்பட்டிருக்கிற வத்தவானது காரியமாகவேண்டும். பிரத்தியட்சமாகையால், ஆன் மாவைப்போ வென்னுமிடத்துச் சாத்தியமாயிருக்கிற காரியத்துவம் ஆன்மாவினிடத்தில் இல்லாதிருக்கையால் சாத்தியமான இதனிலும் திட்டாந்தாபாசம்" என்று கூறுவர்.  
  
¹ பௌட்க, பாடி. (897-898. உரை.) ² 28 உரை.

- [Previous: 30.54](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.54)
- [Next: 30.56](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.56)
- [Up: 30](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.351-356) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.55](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.55) · Pramāṇa
