<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.63 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 30.63

# Maṇimēkalai's Renunciation 30.63

Maṇimēkalai urai 30.63

- **Language:** Tamil

### [30.63](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.63)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை  
  
425  
  
துபயாவி யாவிருத்தி காட்டப் பட்ட  
வைதன் மியதிட் டாந்தத்தி னின்று  
சாதன சாத்தியங்கள் மீளாமை யன்றியும்  
உண்மையி னுபயா வியாவி ருத்தி  
இன்மையி னுபயா வியாவி ருத்தி  
எனவிரு வகை யுண்மையின்  
  
424  
  
உரை  
  
429  
  
உபயா வியா விருத்தி - உபயாவியா விருத்தியாவது; காட்டப்பட்ட வைதன்மிய திட்டாந்தத்தினின்று - மேற்கோளை எதிர்மறை நெறியாற் சாதிப்பான் தொடங்கி வாதி காட்டும் வைதன்மிய திட்டாந்தத்திலிருந்து; சாதன சாத்தியங்கள் மீளாமை - சாதன சாத்தியங்களின் தன்ம மிரண்டின் மறுதலைத் தன்மங்கள் பொருந்தாதொழிவது; அன்றியும்-மேலும்; உண்மையின் உபயா வியா விருத்தி - உள்பொருளாகிய திட்டாந்தத்தின்கண் இரு தன்மங்களின் மீட்சி பொருந்தாமையும்; இன்மையின் உபயாவியா விருத்தி என - இல்பொருளாகிய திட்டாந்தத்தின்கண் இரு தன் மங்களின் மீட்சி பொருந்தாமையும் என; இருவகை - இருவகைப் படும் எ - று.  
  
முன்னர், உபய தன்ம விகலமென்ற சாதன்மிய திட்டாந்தப் போலியை இருவகைப்படுத்துக் கூறினாராகலின், அதன் மீட்சியாகிய வைதன்மியப் பகுதிக்கண் வரும்உபயாவியாவிருத்தியையும் அவ்வாறே இரு வகைப்படுத்தி, "உண்மையின் உபயாவியா விருத்தி இன்மையின் உபவாவியா விருத்தியென விருவகை"யென்றார். இவர் உபய தன்ம விகலமாகிய சாதன்மிய திட்டாந்தப் போலியை யிருவகைப்படுத்தோதியதை மேற்கொண்டு தாமும் இருவகைப்படுத்தாதுரைத்த நியாயப் பிரவேசமுடையார், இவ்வுபயாவியா விருத்தியை அவ்வாறு இருவகைப்படுத்தாதொழிகின்றார்; "காட்டப்பட்ட வைதன்மிய திட்டாந்தத்தினின்று சாதன சாத்தியங்கள் மீளாமை" யென்பது உபயாவியா விருத்தியின் இலக்கணம். மீளுதல், மறுதலைத் தன்மம் பொருந்த நிற்றல்.

- [Previous: 30.62](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.62)
- [Next: 30.64](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.64)
- [Up: 30](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.426) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.63](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.63) · Pramāṇa
