<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.69 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 30.69

# Maṇimēkalai's Renunciation 30.69

Maṇimēkalai urai 30.69

- **Language:** Tamil

### [30.69](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.69)

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை  
  
440  
  
445  
  
அமூர்த்தமு மிரண்டு மீண்டில வின்மையின  
உபயாவி யாவிருத்தி யாவது  
சத்த மநித்த மூர்த்த மாதலான்  
என்றவிடத் தியாதொன் றியாதொன் றநித்த  
மூர்த்தமு மன்றா காசம் போலென  
வைதன் மியதிட் டாந்தங் காட்டில்  
ஆகா சம்பொரு ளல்லவென் பானுக்கு  
ஆகாசந் தானே யுண்மையின் மையினாற்  
சாத்திய வநித்தமுஞ் சாதன மூர்த்தமும்  
மீட்சியு மீளா மையுமிலை யாகும்  
  
440  
  
உரை  
  
449  
  
இன்மையின் உபயாவியா விருத்தியாவது - இன்மையின் உபயாவியா விருத்தியென்னும் வைதன்மிய திட்டாந்தப் போலியாவது; சத்தம் அநித்தம்மூர்த்தமாதலால்-சத்தம் அநித்தமாம் மூர்த்த மாதலினால் ; என்றவிடத்து - என்று பக்க வசனம் கூறிய வழி, யாதொன்று யாதொன்று அநித்தம் அன்று மூர்த்தமு மன்று - யாதொரு பொருள் அநித்தமல்லது அது மூர்த்தமல்லாதது என விபக்கத் தொடர்ச்சி மீட்சி கூறி; ஆகாசம்போல் என வைதன்மிய திட்டாந்தம் காட்டில் - ஆகாசம் போலவென்று வைதன்மிய நெறி பற்றிய திட்டாந்தம் காட்டப்படுமானால்; ஆகாசம் பொருளல்ல வென்பானுக்கு-ஆகாசத்தைப் பொருளாகக் கொள்ளாத வாதிக்கு; ஆகாசம் உண்மையின்மையினால் - ஆகாசம் உள் பொருளன்றாதலால்; சாத்திய வநித்தமும்-சாத்திய தன்மமான அநித்தத்துவமும்; சாதன மூர்த்தமும்-சாதன தன்மமான மூர்த்தத்துவமும்; மீட்சியும் மீளாமையும் இலையாகும் - மீண்டு நிற்றலும் மீளாதே நின்றியைதலும் இல்லையாய்க் குற்றமாம் எ - று.  
  
காட்டப்படும் திட்டாந்தம் பொருளாகக் கொள்ளப்படாவிடத்து அதன்பால் உளவென்றும் இலவென்றும் கூறற்குரிய தன்மங்களே யில்லையாய் ஒழிதலின், அத்தகைய பொருளைத் திட்டாந்தமாகக் காட்டுதல் குற்றமாம் ; ஆதலால் இஃது இன்மையின் உபயாவியா விருத்தியென்னும் வைதன்மிய திட்டாந்தக் போலியெனப் படுவதாயிற்று. உம்மை : இசைநிறை. அன்றென்பதை அநித்தத்துக்கும் கூட்டுக.  
  
இனி, நியாயப் பிரவேசமுடையாரைப் போலவே பிரசத்தபாதரும் இவ் வுபயாவியா விருத்தியை ஒன்றாகவே கொண்டு ஆகாசத்தையே திட்டாந்தமாகக் ¹ காட்டுகின்றார்.  
  
¹ பிரசத்த பாடி. பக். 247.

- [Previous: 30.68](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.68)
- [Next: 31.1](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.1)
- [Up: 30](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.471) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.69](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.69) · Pramāṇa
