<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.43 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 31.43

# Maṇimēkalai's Renunciation 31.43

Maṇimēkalai urai 31.43

- **Language:** Tamil

### [31.43](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.43)

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை  
  
210  
  
215  
  
உள்வழக் குணர்வில் வழக்கு முயற்கோடு  
உள்ளது சார்ந்த வுள்வழக் காகுஞ்  
சித்தத் துடனே யொத்த நுகர்ச்சி  
உள்ளது சார்ந்த வில்வழக் காகுஞ்  
சித்தமுற் பவித்தது மின்போ லென்கை  
இல்லது சார்ந்த வுண்மைவழக் காகுங்  
காரண மின்றிக் காரிய நேர்தல்  
இல்லது சார்ந்த வில்வழக் காகும்  
முயற்கோ டின்மையிற் றோற்றமு மில்லெனல்  
  
208  
  
உரை  
  
216  
  
உள்வழக்கு உணர்வு-உள்வழக் கென்பது உள்ளதாகிய உணர்ச்சியை யுளதென்றல்; இல்வழக்கு முயற்கோடு - இல்வழக்காவது இல்லாததாகிய முயற்கோட்டினை இல்லை யென்றல்; உள்ளது சார்ந்த வுள் வழக்கு - உள்ளது சார்ந்துவரும் உள் வழக்காவது; சித்தத்துடனே ஒத்த நுகர்ச்சியாகும் - உள்ளதாகிய உணர்வோடு அதற்கியைந்த நுகர்ச்சியு முண்டென்பதாம்; மின்போல் - மின்னுப்போல; சித்தம் உற்பவிதத்து என்கை - உணர்வாகிய உள்பொருள் தோன்றிற்றென இல்வழக்குக் கூறுதல்; உள்ளது சார்ந்த இல்வழக்காகும் - உள்ளதைச் சார்ந்து வரும் இல்வழக்கெனப்படும்; காரணம் இன்றிக் காரியம் நேர்தல்-காரணமில்லையாகக் காரியத்தைத் கொண்டுரைத்தல்; இல்லதுசார்ந்த உள்வழக்காகும் - இல்லாததைச் சார்ந்து வரும் உள்வழக்காகும்; முயற்கோடு இன்மையின் தோற்றமும் இல்லெனல் - முயற்கோடு இல் பொருளாதலின் அதற்குத் தோற்றமில்லை யென்று கூறுதல்; இல்லது சார்ந்த இல்வழக்காகும்-இல்லாததைச் சார்ந்து வரும் இல்வழக் கெனப்படும் எ - று.  
  
சித்தமாகிய உணர்வு உள்பொருள் அதனால் உணர்ந்து கொள்ளப் படும் நுகர்ச்சி உள்வழக்காதலின் "சித்தத் துடனேயொத்த நுகர்ச்சி" உள்ளது சார்ந்த வுள் வழக்காயிற்று. உள்பொருட்குத் தோற்றங் கூறல் இல்வழக்காதலால் "சித்தமுற் பவித்தது" என்றும், "மின்போல்" என்றும் அதனை யெடுத்துக் காட்டினார். காரணம் காணப்படாததாகக் காணப்படும் காரியத்தைக் கொண்டு கூறுவது இல்லது சார்ந்த உள்வழக்காகும். முன்பு இல்லாதது பின்பு தோன்றியது கூறல் இவ்வில்லது சார்ந்த வுள்வழக்கின் பாற்படும் என்ப. இனி, அருணந்திசிவனார் இவ்வறுவகை வழக்குகளையும், "உள்வழக் குளதுண்டென்கை முயற்கோடின் றில்வ ழக்கே:" என்றும் "உணர்வுசார்ந்துணர்வு திக்கை யுள்ளது சார்ந்த வுண்மை, உணர்வுபி னின்றா மென்கை யுள்ளது சார்ந்த வின்மை, உணர்வுமுன் பின்றித் தோன்றலில்லது சார்ந்த வுண்மை, உணரினில் லதுசா ரின்மை யுள்ளங்கை யுரோம நாணே" (சிவ. சித்தி. பரபக். 74) என்றும் கூறுவர்.

- [Previous: 31.42](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.42)
- [Next: 31.44](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.44)
- [Up: 31](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.30.211-216) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.43](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.43) · Pramāṇa
