<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.46 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 31.46

# Maṇimēkalai's Renunciation 31.46

Maṇimēkalai urai 31.46

- **Language:** Tamil

### [31.46](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.46)

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை  
  
235  
  
வினாவிடை நான்குள  
துணிந்து சொல்லல் கூறிட்டு மொழிதல்  
வினாவின் விடுத்தல் வாய்வா ளாமையெனத்  
  
235  
  
உரை  
  
237  
  
வினா விடை நான்குள - வினாக்கடகுரிய விடை நான்கு வகையாக உள்ளன ; துணிந்து சொல்லல்-அவை ஒரு தலையாய்த் துணிந்து கூறலும் ; கூறிட்டு மொழிதல் - பல கூறு செய்து ஒவ்வொன்றாய்க் கூறலும் ; வினாவினை விடுத்தல் - வினா வெதிர் வினவுமாற்றால் விடை யிறுத்தலும் ; வாய் வாளாமை யென-வாய் பேசாமையு மென்பனவாகும் எ - று.  
  
வினா விடை யென்று இவ்வாசிரியர் கூறியது தொடுக்கும் வினாவிற்கு விடுக்கும் விடை யென்னும் பொருளதாகக் கொண்டு, "செப்பினும் வினாவினும் வழாஅ லோம்பல்" (தொல். சொல். 13) என்புழிச் செப்பின்கண் அடக்கி, "செப்பு நான்கு வகைப்படும், துணிந்து கூறல், கூறிட்டு மொழிதல், வினாவி விடுத்தல், வாய் வாளாதிருத்தல் என" என்று தெய்வச்சிலையார் கூறுகின்றார். வாளாதிருத்தலை வாளாமையென்றார் ; உண்ணாதிருத்தலை உண்ணாமை யென்றாற் போல "வினாவுஞ் செப்பே வினாவெதிர் வரினே" (தொல். சொல். 14) என்பவாகலின், வினா விடுத்தலினும் வினாவின் விடுத்தலென்பது சீரிதாத லறிக.

- [Previous: 31.45](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.45)
- [Next: 31.47](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.47)
- [Up: 31](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.30.236) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.46](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.46) · Pramāṇa
