<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.48 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 31.48

# Maṇimēkalai's Renunciation 31.48

Maṇimēkalai urai 31.48

- **Language:** Tamil

### [31.48](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.48)

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை  
  
240  
  
செத்தான் பிறப்பா னோபிற வானோ  
என்று செப்பிற்  
பற்றிறந் தானோ வன்மக னோவெனல்  
மிகக்கூ றிட்டு மொழிதலென விளம்புவர்  
  
240  
  
உரை  
  
243  
  
செத்தான் பிறப்பானோ பிறவானோ என்று-செத்தவனைக் குறித்து ஒருவன் இவன் மீட்டும் பிறப்பானோ பிறக்கமாட்டானோ என்று கேட்ட வழி ; செப்பின் - அவற்கிறுக்கும் விடையில் ; பற்றிறந்தானோ அன்மகனோ எனல் - அவன் பற்றறத் துறந்தவனோ அல்லனோ எனப் பகுத்துத் துறந்தவனாயின் பிறவானென்றும், அல்லனாயின் பிறப்பானென்றும் கூறல் ; கூறிட்டு மொழிதல் - கூறு செய்து விடுத்தலென ; மிக விளம்புவர்-விளங்கச் சான்றோர் சொல்லுவார்கள் எ - று.  
  
பிறப்புப் பிறவாமைகட்கு வேண்டும் காரணம் விளங்காமையின் கூறிடல் வேண்டிற்று. "பற்றிறந்தானோ அன்மகனோ எனல்" கூறிட்டு வினாவிக் காரணம் பெற்று, செவ்விய விடையிறுப்பான் பற்றிறந்தானாயின் பிறவானென்றும், அன்மகனாயின் பிறப்பானென்றும் மொழிவான். கூறிட்டு வினாவி மொழிதலென்னாது, "மொழிதல்" என்றதனால் ஏற்புடைய மொழிகள் வருவிக்கப்பட்டன. இனித் தெய்வச்சிலை யார், "கூறிட்டு மொழிதலாவது செத்தவன் பிறப்பானோ என்ற வழி, பற்றறத் துறந்தானோ பிறனோ என்றல்," என்று வினா வாய்பாட்டாற் கூறிட்டு மொழிதல் கூறுவர்.

- [Previous: 31.47](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.47)
- [Next: 31.49](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.49)
- [Up: 31](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.30.241) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.48](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.48) · Pramāṇa
