<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.52 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 31.52

# Maṇimēkalai's Renunciation 31.52

Maṇimēkalai urai 31.52

- **Language:** Tamil

### [31.52](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.52)

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை  
  
255  
அநித்தந் துக்க மநான்மா வசுசியெனத்  
தனித்துப் பார்த்துப் பற்றறுத் திடுதல்  
  
254  
  
உரை  
  
255  
  
அநித்தம் துக்கம் அநான்மா அசுசி யெனத் தனித்துப் பார்த்து - பொருள்கள் நிலையில்லாதன வென்றும் துன்பந் தருவன வென்றும் அநான்மா வென்றும் அருவருப்புடையன வென்றும் தனித்தனியாக ஆராய்ந்து கண்டு; பற்று அறுத்திடுதல் - பற்றினை நீக்குமுகத்தால் காமமாகிய காரணத்தைக் கெடுப்பாயாக  
எ - று.  
  
இவ்வநித்த முதலிய நான்கினையும் விபரியாசங்களென்றும், அநித்தியம் அநான்மா அசுசிதுக்கமென முறை செய்தும் அசுவகோசரும், வாச பந்துவும், சாந்திதேவரும் கூறுவர். நால்வகைமிருதியுபத்தானங்கட்கும் முன்னர் இன்றியமையாது வேண்டப்படுவன இந்நான்கு மென்றும், இதனாற் காமமாகிய பெருங் குற்றங் கெடுமென்றும் ஆசிரியர் பலரும வற்புறுத்துகின்றனர். இதனை அசுப பாவனை யென்றலு முண்டு.

- [Previous: 31.51](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.51)
- [Next: 31.53](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.53)
- [Up: 31](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.30.251) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.52](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.52) · Pramāṇa
