<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4.10 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 4.10

# Maṇimēkalai's Renunciation 4.10

Maṇimēkalai urai 4.10

- **Language:** Tamil

### [4.10](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4.10)

மலர்வனம் புக்க காதை  
  
50  
விண்ணவர் கோமான் விழாக்கொள் நன்னாள்  
மண்ணவர் விழையார் வானவ ரல்லது  
பாடுவண் டிமிரா பன்மரம் யாவையும்  
வாடா மாமலர் மாலைகள் தூக்கலின்  
கைபெய் பாசத்துப் பூதங் காக்குமென்று  
உய்யா னத்திடை உணர்ந்தோர் செல்லார்  
  
47  
  
உரை  
  
52  
  
விண்ணவர் கோமான் விழாக்கொள் நல்நாள் - இந்திரனுக்கு விழாச்செய்யும் நல்ல நாட்களில், மண்ணவர் விழையார் வானவர் அல்லது - தேவரையன்றி மக்கள் விரும்பார் ஆதலின், பாடு வண்டு இமிரா-பாடுகின்ற வண்டுகள் ஒலிக்காதனவாய், பன்மரம் யாவையும் -ஆண்டுள்ள பல மரங்களும், வாடா மாமலர் மாலைகள் தூக்கலின் -பெருமை பொருந்திய வாடாத பூமாலைகளைத் தொங்க விடுதலினால், கைபெய் பாசத்துப் பூதம் காக்கும் என்று - கையினிடத்துக் கொண்ட பாசத்தினையுடைய பூதம் காக்குமென்று, உய்யானத்திடை உணர்ந்தோர் செல்லார் - உய்யானத்தின்கண்  
அறிந்தோர் செல்லமாட்டார்கள்;  
  
வானவர் விழைதலன்றி மண்ணவர் விழையார் என்க. வானவர் விரும்புதலால் வண்டு இமிராவாயின ; ¹"சுரம்பு மூசாச் சுடர்ப்பூங்காந்தள்" என்பது காண்க. வாடாத மலர் மாலைகள் தேவர்களால் நிருமிக்கப்பட்டன. மாலைகள் தூக்கலின் பூதங் காக்குமென்று கருது வாராவர். உய்யானம்-உத்தியானம் ; அரசர் விளையாடுஞ்சோலை.  
  
¹ முருகு. 43.

- [Previous: 4.9](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4.9)
- [Next: 4.11](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4.11)
- [Up: 4](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.3.46-51) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4.10](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4.10) · Pramāṇa
