<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4.15 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 4.15

# Maṇimēkalai's Renunciation 4.15

Maṇimēkalai urai 4.15

- **Language:** Tamil

### [4.15](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4.15)

மலர்வனம் புக்க காதை  
  
75  
  
ஈங்கிதன் காரணம் என்னை யென்றியேல்  
சிந்தை யின்றியுஞ் செய்வினை யுறுமெனும்  
வெந்திறல் நோன்பிகள் விழுமங் கொள்ளவும்  
செய்வினை சிந்தை யின்றெனின் யாவதும்  
எய்தா தென்போர்க் கேது வாகவும்  
பயங்கெழு மாமல ரிட்டுக் காட்ட  
மயன்பண் டிழைத்த மரபின ததுதான்  
  
73  
  
உரை  
  
79  
  
ஈங்கு இதன் காரணம் என்னை என்றியேல்-இதற்குரிய காரணம் யாதென வினவுதியாயின், சிந்தை இன்றியும் செய்வினை உறும் எனும்-மனத்தொடு கூடாத வழியும் செய்தவினை பின்வந்து பயன்றரும் என்கின்ற, வெந்திறல் நோன்பிகள் விழுமம் கொள்ளவும்-வலியினையுடைய நோன்பிகள் வருத்தங் கொள்ளவும், செய்வினை சிந்தை இன்றெனில் யாவதும் எய்தாது எனபோர்க்கு ஏதுவாகவும்-மனத்தொடு கூடாவிடின் செய்த வினை சிறிதும் வந்து பயனளியாது என்போர்க்குக் கருவியாகவும், பயம்கெழு மா மலர் இட்டுக் காட்ட மயன் பண்டு இழைத்த மரபினது அதுதான் - மலர்களை இட்டுக் காட்டுமாறு மயன் என்போனால் முன்னர்ச் செய்யப்பட்ட பயன் சிறந்த முறைமையை யுடையதாகும் அத்தாமரைப் பீடம் ;  
  
'பயங்கெழு மரபினது எனக் கூட்டுக. மனத்தொடு கூடாவழி வினை பயன்றரா தென்பதனை, ¹"இன்னா வெனத்தா ணுணரந்தவை துன்னாமை வேண்டும்" ²"மனத்தானாம் மாணா செய்யாமை தலை" என்னுந் திருக்குறள்களானும், அவற்றிற்கு முறையே, "அறமும் பாவமும் உளவாவது மனமுளனாய வழியாகலான் "உணர்ந்தவை என்றார்" எனவும், "ஈண்டு மனத்தா னாகாத வழிப் பாவமில்லை யென்பது பெற்றாம்" எனவும் பரிமேலழகர் கூறிய உரையானும் அறிக.  
  
¹ ² திருக்குறள் 3167.

- [Previous: 4.14](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4.14)
- [Next: 4.16](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4.16)
- [Up: 4](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.3.76) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4.15](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4.15) · Pramāṇa
