<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4.17.9 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 4.17.9

# Maṇimēkalai's Renunciation 4.17.9

Maṇimēkalai urai 4.17.9

- **Language:** Tamil

### [4.17.9](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4.17.9)

சிமிலி-உறி. கரண்டை - கரண்டகம்; குண்டிகை; ¹"கல்பொளிந்தன்ன விட்டுவாய்க் கரண்டைப் பல்புரிச் சிமிலி நாற்றி"  
என்பது காண்க. அராந்தாணம் - அருகத்தானம். வந்தீரடிகள், எந்தமடிகள், மெய்த்தவத்தீர் எனக் களிமகன் பலகாற் கூறுவது இகழ்ச்சி. மண்ணா மேனியன் ஆகலின் அழுக்குடை யாக்கை என்றான். தலைமகன்-ஆசான். கொலையுமுண்டோ என்றது கொலையொன்றுமே கடியற்பாலதென்பதனை உடன்பட்டபடி. தெங்கின் விளைபூந் தேறல் என்றது தேறலின் தூய்மை கூறியபடியாம். இவ் யோகத்து - நும்முடைய தவத்தில். இதனினும் உறுபயன் என விரிக்க. இனி, யோகம் - தேறலின் சேர்க்கை யென்றுமாPம் : இதற்கு, கண்டால் அகற்றும் என்றது கண்டபின் அகற்றகில்லீர் என்னும் குறிப்பிற்று. கையுதிர் கொள்ளுதல்-கையை அசைத்து விலக்குதல்; சீல்மில்லாரைக் காணின் அவருடன் பேசாது அவரைப் போம்படி கையசைத்துக் குறிப்பித்தல் சைன முனிவர்க்கு இயல்பு. உண்ணா நோன்பி - இரண்டுவாவும் அட்டமியும் பட்டினி விட்டுண்ணும் விரதி; ²'பட்டினி நோன்பிகள்' என்பதனுரையும், ³"ஓவா திரண்டுவவு மட்டமியும் பட்டினிவிட்டொழுக்கங் காத்தல், தாவாத்தவமென்றார்" என்பதும் காண்க. கரண்டையனும் பிரம்பின்னும் ஆகிய ஆராந்தாணத்துள்ளோன் நோன்போடு மேனியனாய் நீத்து ஏங்கி வருபவனை என்றியைத்துலுமாம். தருவதும் உரைத்ததுமாகிய தேறலில் கொலையுமுண்டோ எனக் கூட்டுக. தரூஉம் தலைமகன் எனலுமாம். கொள்ளும், உண்ணும் என்னும் ஏவல் முற்றுக்களில் ஈற்றுமிசை யுகரம் மெய்யொடுங் கெட்டது. பெருங் கதையிற் களிமகன் இயல்பாகக் கூறப்பட்டுள்ள, ⁴"துறக்கம் கூடினுந் துறந்திவ ணீங்கும், பிறப்போ வேண்டேன் யானெனக் கூறி, ஆர்த்த யாய னூர்க்களி மூர்க்கன், செவ்வழிக் கீதஞ் சிதையப் பாடி, அவ்வழி வருமோ ரந்த ணாளனைச், செல்ல லாணை நில்லிவ ணீயென, எய்தச் சென்று வைதவண் விலக்கி, வழுத்தினே முண்ணுமிவ் வடிநறுந் தேறலைப், பழித்துக் கூறு நின் பார்ப்பனக் கணமது, சொல்லா யாயிற் புல்லுவென் யானெனக், கையலைத் தோடுமோர் களிமகற் காண்மின்" எனபது ஈண்டு அறியற்பாலது.

- [Previous: 4.17.8](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4.17.8)
- [Next: 4.17.10](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4.17.10)
- [Up: 4.17](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4.17)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.3.96) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4.17.9](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4.17.9) · Pramāṇa
