<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4.1 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 4.1

# Maṇimēkalai's Renunciation 4.1

Maṇimēkalai urai 4.1

- **Language:** Tamil

### [4.1](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4.1)

மலர்வனம் புக்க காதை  
  
வயந்த மாலைக்கு மாதவி யுரைத்த  
உயங்குநோய் வருத்தத் துரைமுன் றோன்றி  
மாமலர் நாற்றம் போன்மணி மேகலைக்கு  
ஏது நிகழ்ச்சி எதிர்ந்துள தாதலின்  
  
1  
  
உரை  
  
4  
  
வயந்த மாலைக்கு மாதவி உரைத்த - வயந்த மாலையினிடம் மாதவி கூறிய, உயங்கு நோய் வருத்தத்து உரைமுன் தோன்றி - பிறரும் வருந்துதற்குக் காரணமாகிய மிக்க துன்பந்தரும் மொழியினிடமாக உதித்து, மாமலர் நாற்றம்போல்-சிறந்த மலரிடத்து நாற்றம்போல், மணிமேகலைக்கு ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளது ஆதலின்-மணிமேகலைக்கு ஏது நிகழ்ச்சி எதிர்ப்பட்டதாதலால் ;  
  
உரைத்த உரை யென்க. ஏது நிகழ்ச்சி-பயனுக்கு ஏதுவாகிய வினையின் நிகழ்ச்சி ; வினை பயன்கொடுத்தற்குத் தோன்றுவது என்ற படி ; ¹"ஏது நிகழ்ச்சி யீங்கின் றாதலின்" ²"ஏது நிகழ்ச்சி யாவும் பலவுள" என இந்நூலுள்ளே பின்னரும் இப்பெயர் பயின்று வருகின்றது. மாமலர் நாற்றம்போல் என்ற உவமையால் நல்வினை பயனளித்தற் கெதிர்ந்துள தென்பது பெற்றாம். மலரின்கண் நாற்றம் அடங்கியிருந்து பின் வெளிப்படுதல் போல் கன்மமும் மறைந்திருந்து பயனளிக்குங் காலம் வந்துழி வெளிப்படு மென்க.  
  
1 மணி. 9 : 54. ² மணி. 12 : 105 ; 21 : 160.

- [Previous: 3.8](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.3.8)
- [Next: 4.2](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4.2)
- [Up: 4](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.3.1) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4.1](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4.1) · Pramāṇa
