<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4.20 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 4.20

# Maṇimēkalai's Renunciation 4.20

Maṇimēkalai urai 4.20

- **Language:** Tamil

### [4.20](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4.20)

மலர்வனம் புக்க காதை  
  
130 வம்ப மாக்கள் கம்பலை மூதூர்ச்  
சுடும ணோங்கிய நெடுநிலை மனைதொறும்  
மையறு படிவத்து வானவர் முதலா  
எவ்வகை உயிர்களும் உவமங் காட்டி  
வெண்சுதை விளக்கத்து வித்தக ரியற்றிய  
கண்கவர் ஓவியங் கண்டுநிற் குநரும்  
  
126  
  
உரை  
  
131  
  
வம்பமாக்கள் கம்பலை மூதூர்-புதியராய் வரும் மக்களின் முழக்கம் மிகுந்த தொன்மையுடைய புகார் நகரில், சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும்-செங்கலாற் கட்டப்பட்டு உயர்ந்த பெரிய மாடங்கள்தோறும், மையறு படிவத்து வானவர் முதலா எவ்வகை உயிர்களும் உவமம் காட்டி-குற்றமற்ற தெய்வ வடிவினை யுடைய விண்ணவர் முதலாக எவ்வகைப்பட்ட உயிர்களையும் ஒப்புமை காட்டி, வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய - விளக்கத்தையுடைய வெள்ளிய சுதையினால் கைதேர்ந்த ஓவிய்க்காரர் செய்த, கண்கவர் ஓவியம் கண்டு நிற்குநரும் - கண்களைக் கவரும் வனப்புடைய ஓவியங்களைக் கண்டு நிற்போரும் ;  
  
கொடி சுடுமண்-செங்கல்; ¹"சுடும ணோங்கியநெடுநகர் வரைப்பு" என்பது பெரும்பாண். படிவம் - தெய்வ வடிவம். உவமம்-ஒப்புமை; ²"எவ்வகைச் செய்தியு முவமங் காட்டி, நுண்ணிதி னுணர்ந்த நுழைந்த நோக்கிற், கண்ணுள் வினைஞரும்," ³"மயனெனக் கொப்பா வகுத்த பாவையின், நீங்கே னியான்" என்பதன காண்க. வித்தகர்-சிற்பாசாரியர்; ⁴"வித்தக ரியற்றிய" என்பர் பின்னும்.  
  
¹ பெரும்பாண். 405. ² மதுரை. 516-8. ³ மணி. 21: 132-3 ⁴ மணி. 3 : ;167.

- [Previous: 4.19](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4.19)
- [Next: 4.21](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4.21)
- [Up: 4](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.3.126-131) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4.20](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4.20) · Pramāṇa
