<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4.23 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 4.23

# Maṇimēkalai's Renunciation 4.23

Maṇimēkalai urai 4.23

- **Language:** Tamil

### [4.23](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4.23)

மலர்வனம் புக்க காதை  
  
155 மாமலர் கொய்ய மலர்வனந் தான்புகின்  
நல்லிள வன்னம் நாணா தாங்குள  
வல்லுந கொல்லோ மடந்தை தன்னடை  
மாமயி லாங்குள வந்துமுன் நிற்பன  
சாயல்கற் பனகொலோ தையல் தன்னுடன்  
பைங்கிளி தாமுள பாவைதன கிளவிக்  
கெஞ்சல கொல்லொ இசையுந வல்ல  
என் றிவை சொல்லி யாவரும் இனைந்துகச்  
  
151  
  
உரை  
  
158  
  
ஈங்கிவள் மா மலர் கொய்ய மலர்வனம் தான் புகில் - இம்மணிமேகலை சிறந்த மலர் கொய்தற்குப் பூம்பொழிலில் நுழைந்தால், நல் இள அன்னம் நாணாது ஆங்குள வல்லுந கொல்லோ மடந்தை தன் நடை-அங்கோயுள்ள நல்ல இளைய அன்னப் புறவைகள் நாணாமல் இவள் நடைபோல் நடக்க வல்லனவோ, மாமயில் ஆங்குள வந்து முன்நிற்பன சாயல் கற்பனகொலோ தையல் தன்னுடன் - ஆண்டுள்ள அழகிய மயில்கள் இந்நங்கையின் எதிரே வந்து நிற்பனவாகி இவளுடன் சாயலைக் கற்பனவாகுமோ, பைங்கிளி தாம் உள பாவைதன் கிளவிக்கு எஞ்சல கொல்லோ - அங்கிருக்கும் பசிய கிளிகள் இம்மங்கையின் மொழிகட்குத் தோற்பன வல்லவோ, இசையுந அல்ல - இவை யாவும் ஒப்பனவல்ல, என்று இவை சொல்லி யாவரும் இனைந்து உக-என்று இவைகளைக் கூறி அனைவரும் வருந்திக் கெட,  
  
ஆங்குள அன்னம் நாணாது வல்லுந கொல்லோ எனவும், ஆங்கள மாமயில் வந்து முன்னிற்பனவாய்க் கற்பனகொலோ எனவும் இயையும். மயில்கள் கற்றற்குத்ததானும் முன்வந்து நிற்கமாட்டா என்றபடி. சாயல் - மென்னை. எஞ்சுதல் - குறைதல் ; தோற்றல்.

- [Previous: 4.22](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4.22)
- [Next: 4.24](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4.24)
- [Up: 4](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.3.151-156) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4.23](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4.23) · Pramāṇa
