<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6.15 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 6.15

# Maṇimēkalai's Renunciation 6.15

Maṇimēkalai urai 6.15

- **Language:** Tamil

### [6.15](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6.15)

மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை  
  
100  
  
105 புலவன் றீர்த்தன் புண்ணியன் புராணன்  
உலக நோன்பின் உயர்ந்தோ யென்கோ  
குற்றங் கெடுத்தோய் செற்றஞ் செறுத்தோய்  
முற்ற உணர்ந்த முதல்வா என்கோ  
காமற் கடந்தோய் ஏம மாயோய்  
தீநெறிக் கடும்பகை கடிந்தோய் என்கோ  
ஆயிர வாரத் தாழியன் றிருந்தடி  
நாவா யிரமிலேன் ஏத்துவ தெவனென்  
றெரிமணிப் பூங்கொடி இருநில மருங்குவந்  
தொருதனி திரிவதொத் தோதியி னொதுங்கி  
நிலவரை யிறந்தோர் முடங்குநா நீட்டும்  
  
98  
  
உரை  
  
108  
  
புலவன்-மெய்யறி வுடையோனே, தீர்த்தன்-தூயோனே, புண்ணியன் - அறவோனே, புராணன் - பழையோனே, உலக நோன்பின் உயர்ந்தோய்-உலக நோன்பினால் மேம்பட்டவனே, என்கோ - என்பேனோ, குற்றம் கெடுத்தோய் - முக்குற்றங்களையும் அழித்தோய், செற்றம் செறுத்தோய் - கடுஞ்சினத்தைக் கடிந்தோய், முற்ற உணர்ந்த முதல்வா-முழுதும் உணர்ந்த முதன்மையுடையோய், என்கோ-என்பேனோ, காமற் கடந்தோய் - மாரனை வென்றோய், ஏமம் ஆயோய்-இன்ப மயமாய் உள்ளோய், தீ நெறிக் கடும்பகை கடிந்தோய்-தீய நெறியாகிய கடிய பகையை நீக்கினோய், என்கோ-என்பேனோ, ஆயிரஆரத்து ஆழியன் திருந்தடி- ஆயிரம் ஆரங்களைக் கொண்ட அறவாழியினையுடைய நின்செவ்விய திருவடிகளை, நாஆயிரம் இலேன் ஏத்துவது எவன் என்று - ஆயிரம் நாவில்லா யான் எவ்வாறு துதிக்க வியலும் என்று, எரி மணிப் பூங்கொடி இருநில மருங்குவந்து-சுடர் விடுகின்ற மாணிக்கப் பூங்கொடியானது பெரிய பூமியின் பக்கலில் வந்து, ஒரு தனி திரிவது ஒத்து-தன்னந்தனியே திரிவதுபோல, ஒதியின் ஒதுங்கி- மெய்ஞ்ஞானத்துடன் ஒதுங்கி, நிலவரை இறந்து ஓர் முடங்குநா நீட்டும்-நிலவெல்லையைக் கடந்து தனது வளைந்த நாவை நீட்டு கின்றாள்;  
  
குற்றம்-காம வெகுளி மயக்கங்கள். ஏமம் - பாதுகாவலுமாம். ஆழியந் திருந்தடி' என்ற பாடத்திற்கு ஆயிரம் ஆரங்களையுடைய சக்கர ரேகை பொருந்திய திருந்திய அடி என்றுரைக்க. நாவாயிர மிலேன் ஏத்துவ தெவன் என்றது என் ஒரு நாவில் அடங்குவதன்று என்றபடி. ஓதி - முக்கால உணர்வு. நிலவரை இறந்து - புவியின் மேலே உயர்ந்து. ஓர்: அசை. நாநீட்டும் - சொல்லும்.

- [Previous: 6.14](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6.14)
- [Next: 6.16](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6.16)
- [Up: 6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.5.101-106) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6.15](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6.15) · Pramāṇa
