<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6.9 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 6.9

# Maṇimēkalai's Renunciation 6.9

Maṇimēkalai urai 6.9

- **Language:** Tamil

### [6.9](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6.9)

மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை  
  
55  
மையறு படிவத்து மாதவர் புத்தெமைக்  
கையுதிர்க் கோடலின் கண்ணிறை நீரேம்  
அறவோ ருளிரோ ஆருமி லோமெனப்  
புறவோர் வீதியிற் புலம்பொடு சாற்ற  
  
53  
  
உரை  
  
57  
  
இவண் நீர் அல்ல என்று என்னொடும் வெகுண்டு - இவ் விடத்திற்குரிய தன்மை அன்றென்று கூறி என்னையும் சினந்து, மையறு படிவத்து மாதவர் புறத்து எமைக் கையுதிர்க் கோடலின்- குற்றமற்ற தவவடிவத்தையுடைய சமண முனிவர்கள் புறத்தே போகுமாறு எம்மைக் கையை அசைத்துக் குறித்தலினால், கண் நிறை நீரேம்-கண்களில் நிறைந்த நீரினையுடையேமாய், அறவோர் உளீரோ ஆரும் இலோம் என - அறம்புரிவீர் இருக்கின்றீரோ பாதுகாப்போர் யாருமில்லாதேம் என்று, புறவோர் வீதியில் புலம் பொடு சாற்ற - புறத்திலுள்ள ஒரு வீதியில் வருத்தத்துடன் கூற ;  
  
இவணீரல்ல - இவ்விடத்திற்குரியீரல்லீர் என்றுமாம் ; அல்ல என் பது பால்குறியாது வழக்குப்பற்றி நின்றது. என்னொடும் - என்னையும் ; உம்மை : எச்சம் ; தந்தையை என்னொடும் என்றுமாம். படிவம் - தவ வேடம். ஓர் புறவீதியி லென்க ; புறவோர் - புறத்திலுள்ளோர் என்றுரைப்பாருமுளர்.

- [Previous: 6.8](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6.8)
- [Next: 6.10](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6.10)
- [Up: 6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6)

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.5.56) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6.9](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6.9) · Pramāṇa
