<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › [Manimekalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai) › 6

# Maṇimēkalai's Renunciation 6

Maṇimēkalai urai 6

- **Language:** Tamil

### [6.1](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6.1)

மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை  
  
5  
இளங்கோன் கண்ட இளம்பொற் பூங்கொடி  
விளங்கொளி மேனி விண்ணவர் வியப்பப்  
பொருமுகப் பளிங்கின் எழினி வீழ்த்துத்  
திருவின் செய்யோள் ஆடிய பாவையின்  
விரைமல ரைங்கணை மீன விலோதனத்து  
உருவி லாளனொ டுருவம் பெயர்ப்ப  
  
1  
  
உரை  
  
6  
  
இளங்கோன் கண்ட இளம்பொற் பூங்கொடி-அரசிளங்குமரன் கண்ணுற்ற அழகிய இளம் பூங்கொடியனைய மணிமேகலை, விளங்கு ஒளி மேனி விண்ணவர் வியப்ப-விளங்குகின்ற பேரொளி பொருந்திய திருமேனியையுடைய வானவர்களும் வியக்குமாறு, பொருமுகப் பளிங்கின் எழினி வீழ்த்து - பளிங்கினாலாய பொருமுக வெழினியை வீழ்த்து, திருவின் செய்யோள் ஆடிய பாவையின் - திருமகளாடிய பாவையைப்போல, விரைமலர் ஐங்கணை மீன விலோதனத்து உருவிலாளனொடு உருவம் பெயர்ப்ப - மணம் பொருந்திய மலராகிய ஐந்தம்புகளையும் மீனக்கொடியையும் உடைய அநங்கனுடன் தன் உருவத்தை வெளிப்படுத்த ;  
  
பொற்பூங்கொடி - காமவல்லியுமாம் ; இது பொன்னுலகத்துள்ள தென்பர். எழினி - திரைச்சீலை ; பொருமுக வெழினி-மூவகைத் திரைச் சீலைகளுள் ஒன்று ; அரங்கின் வலத்தூண் இரண்டிலும் உருவு திரை யாய் அமைவது ; எழினி மூன்றனையும் ¹"ஒருமுக வெழினியும் பொரு முக வெழினியும் ; கரந்துவர லெழினியும் புரிந்துடன் வகுத்து"என் பதனாலறிக. திருவின் செய்யோள் - திருவாகிய செய்யோள் ; திருமகள்- இன் : சாரியை. ஆடிய பாவையின் - ஆடுதற்குக் கொண்ட பாவை யுருவைப்போல ; கொல்லிப் பாவையுருக்கொண்டு ஆடினமையின் அக் கூத்தும் பாவை யெனப்படும் ; அது போர் செய்தற்குச் சமைந்த கோலத்துடன் அவுணர் மோகித்து விழும்படி திருமகளாடியது ; பதினோராடலுளொன்று ; ²"செருவெங் கோல மவுணர் நீங்கத், திரு வின் செய்யோ ளாடிய பாவையும்' என்பது காண்க. "உருவி லாளனொ டுருவம் பெயர்ப்ப" என்பதன் கருத்து இவளுருவைக் கண்டவுடன் இளங்கோவனுக்குக் காமவுபாதை உண்டாயிற் றென்பதாம்.  
  
1 சிலப். 3 : 109-10. ² சிலப். 6 : 60-1.

### [6.2](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6.2)

மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை  
  
10  
  
ஓவிய னுள்ளத் துள்ளியது வியப்போன்  
காவியங் கண்ணி யாகுதல் தெளிந்து  
தாழொளி மண்டபந் தன்கையில் தடைஇச்  
சூழ்வோன் சுதமதி தன்முக நோக்கிச்  
சித்திரக் கைவினை திசைதொறுஞ் செறிந்தன  
எத்திறத் தாள்நின் இளங்கொடி யுறையெனக்  
  
7  
  
உரை  
  
12  
  
ஓவியன் உள்ளத்து உள்ளியது வியப்போன் - (மணிமேகலையின் உருவத்தை ஓவியம் என நினைந்து) ஓவியக்காரன் அதனை எழுதுமாறு மனதில் அமைத்ததை வியக்கின்றவனாய் உதயகுமரன், காவியங் கண்ணி யாகுதல் தெளிந்து - அவ்வடிவம் நீலமலரனைய கண்களையுடைய மணிமேகலை யாதலைத் தெளிந்து, தாழ் ஒளி மண்டபம் தன் கையில் தடைஇச் சூழ்வோன் - தங்கிய ஒளியுடைய பளிக்கு மண்டபத்தைத் தன் கையாலே தடவிப் பார்த்துச் சுற்றி வருபவன், சுதமதி தன்முகம் நோக்கி - சுதமதியின் முகத்தைப் பார்த்து, சித்திர கைவினை திசைதொறும் செறிந்தன எத்திறத்தாள் நின் இளங்கொடி உரை என - சித்திரக் கைத்தொழில் எப்பக்கமும் நிறைந்திருக்கின்றன நின் இளங்கொடி போல்பவள் எவ்விடத்தாள் கூறுக என ;  
  
தாழ்தல்-தங்குதல். வாயில் கரண்டற்கு மண்டபத்தைத் தடவிச் சூழ்ந்தனனென்க. சூழ்ந்து வருங்கால் மணிமேகலையின் உருவம் எத் திசையினும் வெளிப்பட்டமையின் "சித்திரக் கைவினை திசைதொறுஞ் செறிந்தன" என்றான் ; மண்டபத்திலுள்ள ஓவியப்பாவை பலவற்றுடன் மணிமேகலையின் உருவம் வேறுபாடின்றி யிருந்தமையின் அங்ஙனம் கூறினானெனலுமாம் ; ¹"மேவிய பளிங்கின் விருந்திற் பாவையிஃ தோவியச் செய்தியென் றொழிவேன் முன்னர்" ²"ஈங்கிம் மண்ணீட்டியாரென வுணர்கேன்" எனப் பின்வருவன காண்க. திறம்-இயல்புமாம். சுதமதி காவற் பெண்டாகலின் 'நின் இளங்கொடி' என்றான். ஓவியன் என்பதற்கு உதயகுமரன் சித்திரம் போன்றவனாய் நின்றென்றுரைத்தல் ஈண்டைக்குப் பொருந்தாமையோர்க.  
  
1 மணி. 18 : 69-7. ² மணி. 18 : 156.

### [6.3](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6.3)

மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை  
  
15  
  
குருகுபெயர்க் குன்றங் கொன்றோ னன்னநின்  
முருகச் செவ்வி முகந்துதன் கண்ணால்  
பருகா ளாயினிப் பைந்தொடி நங்கை  
ஊழ்தரு தவத்தள் சாப சரத்தி  
காமற் கடந்த வாய்மைய ளென்றே  
தூமலர்க் கூந்தற் சுதமதி யுரைப்பச்  
  
13  
  
உரை  
  
18  
  
குருகு பெயர்க் குன்றங் கொன்றோன் அன்ன நின் முருகச் செவ்வி- கிரவுஞ்ச மலையை எறிந்த முருகவேளை யொத்த நினது இளமை யழகினை, முகந்து தன் கண்ணால் பருகாள் ¹ஆயின் பைந்தொடி நங்கை-ஆராயுமிடத்துப் பசிய வளையல்களை யணிந்த மணிமேகலை தன் கண்களால் முகந்து பருகாள், ஊழ்தரு தவத்தள் - முறையாகப் பெற்ற தவத்தினையுடையள், சாபசரத்தி-சாபமாகிய அம்பையுடையவள், காமற் கடந்த வாய்மையள் என்றே - காமனை வென்ற மெய்ம்மையை யுடையவள் என்று, தூமலர்க் கூந்தல் சுதமதி உரைப்ப-தூய மலரணிந்த கூந்தலையுடைய சுதமதி கூற ;  
  
குருகு-அன்றில்; கிரவுஞ்சம்; அதன் பெயர் பெற்ற குன்றமென்க ; ² "குருகுபெயர்க்குன்றங் கொன்ற நெடுவேலே" "குருகுபெயர்க்குன் றங்கொன்றான்" என்பன காண்க. முருகு-இளமை ; ஈறு திரிந்தது ; ஊழ்தரு தவத்தள்- ஊழினாலே தரப்பட்ட தவத்தினள் என்றுமாம் ; என்னை? ³ தவமுந் தவமுடையார்க் காகும்" என்பவாகலின். சாப சரத்தி - வில்லையும் அம்பையும் உடையாள் என்பதோர் பொருளும் தோன்ற நின்றது ; சாபம் - வில். ஆயின், நங்கை பருகாள் ; தவத்தள் ; சரத்தி ; வாய்ம்மையள் ; என்று உரைப்பவென்க.  
  
1 பா. வே. ஆயினிப் பைந்தொடீ என்பதும் பாடம். ² சிலப். 34 : 'சரவண' : ஆய்வளை. ³ குறள். 262.

### [6.4](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6.4)

மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை  
  
20  
  
25  
  
சிறையு முண்டோ செழும்புனல் மிக்குழீஇ  
நிறையு முண்டோ காமங் காழ்க்கொளின்  
செவ்விய ளாயினென் செவ்விய ளாகென  
அவ்விய நெஞ்சமோ டகல்வோ னாயிடை  
அஞ்செஞ் சாய லராந்தா ணத்துளோர்  
விஞ்சைய னிட்ட விளங்கிழை யென்றே  
கல்லென் பேரூர்ப் பல்லோ ருரையினை  
ஆங்கவ ருறைவிடம் நீங்கி யாயிழை  
ஈங்கிவள் தன்னொ டெய்திய துரையென  
  
19  
  
உரை  
  
27  
  
சிறையும் உண்டோ செழும்புனல் மிக்குழீஇ- வளவிய நீர் மிகுந்த விடத்து அதனைத் தாங்கும் அரணும் உண்டோ, நிறையும் உண்டோ காமம் காழ்க்கொளின்-அவ்வாறே காமம் அடிப்படின் அதனை நிறுத்தும் தன்மையும் உளதாகுமோ, செவ்வியள் ஆயின் என் செவ்வியள் ஆகென - செவ்வியையுடையளாயின் என்னை ? அவள் செவ்வியளாகட்டும் என்று, அவ்விய நெஞ்சமொடு அகல் வோன்-பொறாமை கொண்ட உள்ளத்தோடும் நீங்குவோன்,ஆயிடை-அப்பொழுது, அம்செஞ் சாயல் - அழகிய சிவந்த சாயலையுடையாய் அராந்தாணத்துள்-சமண் பள்ளியில், ஓர் விஞ்சையன் இட்ட விளங்கிழை என்றே-ஒரு விஞ்சையனாலிடப்பட்ட மெல்லியல் என்றே, கல்லென் பேரூர்ப் பல்லோர் உரையினை-கல்லென்னும் ஒலியினையுடைய நகரின்கண் பல்லோராலுங் கூறப்படுவாய், ஆங்கவர் உறைவிடம் நீங்கி ஆயிழை-ஆயிழாய் நீ அச்சமணமுனிவர் வாழ்விடத்தை நீங்கி, ஈங்கிவள் தன்னோடு எய்தியது உரை என - இம் மணிமேகலையுடன் ஈண்டு எய்திய காரணத்தைக் கூறு வாயாக என ;  
  
குருகு-அன்றில்; கிரவுஞ்சம்; அதன் பெயர் பெற்ற குன்றமென்க ; சிறை-அணை. நிறை-காமத்தை உள்ளேயடக்கி நிறுத்துதல் ; மனத்தை நிறுத்தலுமாம் ; காழ்க்கொளின்-வைரமேறின் ; முதிர்ந்தால் என்றபடி; ¹ "நீர் மிகிற் சிறையுமில்லை" ² "நீர்மிகி னில்லை சிறை" ³ "சிறையென்ப தில்லைச் செவ்வே செம்புனல் பெருகு மாயின், நிறை யென்ப தில்லைக் காம நேர்நின்று சிறக்குமாயின்" ⁴ "பிறிது மாகுப காமங்காழ்க் கொளினே" என்பன ஈண்டு அறியற்பாலன. தவத்தள், சரத்தி, வாய்மையள் என்பவற்றைச் செவ்வியள் என அடக்கிக் கூறினான். ஆகென, விகாரம், அவ்வியம்-பிறர்க்குரியளாதல் கூடா தென்னும் பொறாமை; கோட்டமுமாம். அஞ்செஞ் சாயல், விளி. அராந்தாணம் என்பதற்கு மேல் (3 : 87) உரைத்தமை காண்க.  
  
1 புறம். 51. ² பழ.190. ³ சூளா. கல்யாண. 155. ⁴ குறுந். 17

### [6.5](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6.5)

மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை  
  
30  
  
வார்கழல் வேந்தே வாழ்கநின் கண்ணி  
தீநெறிப் படரா நெஞ்சினை யாகுமதி  
ஈங்கிவள் தன்னோ டெய்திய காரணம்  
வீங்குநீர் ஞால மாள்வோய் கேட்டருள்  
  
28  
  
உரை  
  
31  
  
வார் கழல் வேந்தே வாழ்க நின் கண்ணி - நீண்ட வீரக்கழலை யணிந்த அரசே நின் கண்ணி வாழ்வதாக, தீநெறிப்படரா நெஞ்சினை ஆகுமதி-தீயவழியிற் செல்லாத உள்ளமுடையை ஆவாயாக, ஈங்கிவள் தன்னோடு எய்திய காரணம் வீங்குநீர்ஞாலம் ஆள்வோய் கேட்டருள்-இம் மணிமேகலையுடன் யான் வந்த காரணத்தைக் கடல்சூழ்ந்த நிலவுலகினையாளும் மன்னவனே கேட்டருள் வாயாக ;

### [6.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6.6)

மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை  
  
35  
  
யாப்புடை யுள்ளத் தெம்மனை யிழந்தோன்  
பார்ப்பன முதுமகன் படிம வுண்டியன்  
மழைவளந் தரூஉம் அழலோம் பாளன்  
பழவினைப் பயத்தால் பிழைமண மெய்திய  
எற்கெடுத் திரங்கித் தன்தக வுடைமையின  
குரங்கு செய்கடற் குமரியம் பெருந்துறைப்  
பரந்துசென் மாக்களொடு தேடினன் பெயர்வோன்  
கடன்மண்டு பெருந்துறைக் காவிரி யாடிய  
  
32  
  
உரை  
  
40  
  
யாப்புடை உள்ளத்து எம் அனை இழந்தோன் பார்ப்பன முதுமகன்-என் தாயை இழந்தோனும் உறுதிபொருந்திய உள்ளத்தை யுடைய பார்ப்பன முதியோனும், படிம உண்டியன்-பட்  
டிணிவிட்டுண்ணும் நோன்பினையுடையோனும், மழைவளம் தரூஉம் அழல் ஓம்பாளன் - மழைவளத்தைத் தரும் முத்தீயோம்பு வோனுமாகிய எந்தை, பழவினைப் பயத்தால் பிழைமணம் எய்திய எற்கெடுத்து இரங்கி-முன் செய்வினையின் பயனால் மாருத வேகனிடம் அகப்பட்டுப் பிழைமணம் எய்திய என்னைக் காணாமையால் வருந்தி, தன் தகவுடைமையின் - தனது தகுதி யுடைமையால், குரங்குசெய் கடல் குமரியம் பெருந்துறைப் பரந்து செல் மாக்க ளொடு-குரங்கு செய்த குமரிக்கடலின் பெரிய துறைக்கண் நீராடுதற்கு மிக்குச் செல்லும் மக்களோடே, தேடினன் பெயர்வோன் ; என்னைத் தேடிச் செல்பவனாய், கடல் மணடு பெருந்துறைக் காவிரி ஆடிய-இடையே காவிரி கடலிற் கலக்கும் பெரிய சங்க முகத்துறையில் நீராடுதற்கு, வடமொழி யாளரொடு வருவோன்- பார்ப்பனரோடு வருபவன் ;32--40. யாப்புடை உள்ளத்து எம் அனை இழந்தோன் பார்ப்பன முதுமகன்-என் தாயை இழந்தோனும் உறுதிபொருந்திய உள்ளத்தை யுடைய பார்ப்பன முதியோனும், படிம உண்டியன்-பட் டிணிவிட்டுண்ணும் நோன்பினையுடையோனும், மழைவளம் தரூஉம் அழல் ஓம்பாளன் - மழைவளத்தைத் தரும் முத்தீயோம்பு வோனுமாகிய எந்தை, பழவினைப் பயத்தால் பிழைமணம் எய்திய எற்கெடுத்து இரங்கி-முன் செய்வினையின் பயனால் மாருத வேகனிடம் அகப்பட்டுப் பிழைமணம் எய்திய என்னைக் காணாமையால் வருந்தி, தன் தகவுடைமையின் - தனது தகுதி யுடைமையால், குரங்குசெய் கடல் குமரியம் பெருந்துறைப் பரந்து செல் மாக்க ளொடு-குரங்கு செய்த குமரிக்கடலின் பெரிய துறைக்கண் நீராடுதற்கு மிக்குச் செல்லும் மக்களோடே, தேடினன் பெயர்வோன் ; என்னைத் தேடிச் செல்பவனாய், கடல் மணடு பெருந்துறைக் காவிரி ஆடிய-இடையே காவிரி கடலிற் கலக்கும் பெரிய சங்க முகத்துறையில் நீராடுதற்கு, வடமொழி யாளரொடு வருவோன்- பார்ப்பனரோடு வருபவன் ;  
  
குருகு-அன்றில்; கிரவுஞ்சம்; அதன் பெயர் பெற்ற குன்றமென்க ; மழைவளந் தரூஉம் அழல் என்க ; ¹"மழைக்கரு வுயிர்க்கு மழற்றிக ழட்டின், மறையோ ராக்கிய வாவுதி நறும்புகை" என்பது காண்க. மாருத வேகனுக்குத் தான் சிலநாள் உரியளானது பற்றி, "பிழைமண மெய்திய" என்றாள். குமரி-கன்னியாகுமரி ; ²"தொடியோள் பௌவமும்" என்பதன் உரை நோக்குக. வடமொழியாளர்-பார்ப்பனர் ; பார்ப்பனியை "வடமொழியாட்டி" (13 : 73) என்று பின்னர்க் கூறுவர்.  
  
¹ சிலப். 10 : 143-4. ² சிலப். 8 : 1.

### [6.7](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6.7)

மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை  
  
40  
  
45  
  
வடமொழி யாளரொடு வருவோன் கண்டீங்  
கியாங்ஙனம் வந்தனை யென்மக ளென்றே  
தாங்காக் கண்ணீ ரென்றலை யுதிர்த்தாங்  
கோத லந்தணர்க் கொவ்வே னாயினும்  
காதல னாதலிற் கைவிட லீயான்  
இரந்தூண் தலைக்கொண் டிந்நகர் மருங்கில்  
பரந்துபடு மனைதொறுந் திரிவோ னொருநாள்  
  
40  
  
உரை  
  
46  
  
கண்டு ஈங்கு-என்னை இந்நகரத்திற் கண்டு, யாங்ஙனம் வந்தனை என்மகள் என்றே தாங்காக் கண்ணீர் என்றலை உதிர்த் தாங்கு-என் மகளே ஈண்டு எவ்வாறு வந்தாய் என்று கூறிப் பெருகிய கண்ணீரை என்மீது சொரிந்து, ஓதல் அந்தணர்க்கு ஒவ்வேன் ஆயினும்-யான் மறையோதும் அந்தணர்களுடனிருத்தற்குத் தகாதவளாயினும், காதலன் ஆதலின் கைவிடலீயான் - என்மீது மிருந்த அன்புடையனாதலால் என்னைக் கைவிடானாய், இரந்தூண் தலைக்கொண்டு-இரந்துண்டு வாழ்தலை மேற்கொண்டு. இந்நகர் மருங்கில்-இவ்வூரின் கண், பரந்துபடு மனைதொறும் திரிவோன் - பரந்து தோன்றும் இல்லங்கள் தோறும் சென்று ஏற்போன் ;  
  
கைவிடலீயான்-கைவிடான் ; "காவலன் மகனோ கைவிடலீயான்" (19 : 32) என்பர் பின்னும் ; "காட்டியதாதலிற் கைவிடலீயான்" (13 : 85) என்பது சிலப்பதிகாரம்.

### [6.8](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6.8)

மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை  
  
50  
  
புனிற்றாப் பாய்ந்த வயிற்றுப் புண்ணினன்  
கணவிரி மாலை கைக்கொண் டென்ன  
நிணநீடு பெருங்குடர் கையகத் தேந்தி  
என்மக ளிருந்த இடமென் றெண்ணித்  
தன்னுறு துன்பந் தாங்காது புகுந்து  
சமணீர் காள்நுஞ் சரணென் றோனை  
இவணீ ரல்லவென் றென்னொடும் வெகுண்டு  
  
47  
  
உரை  
  
52  
  
ஒருநாள் புனிற்றுஆ பாய்ந்த வயிற்றுப் புண்ணினன்-ஒரு நாள் ஈன்றணிமையையுடைய பசுவொன்று பாய்ந்தமையால் வயிற்றுலுண்டான புண்ணினையுடையனாய், கணவிரி மாலை கைக்  
கொண்டென்ன - அலரிமாலையைக் கையிற்கொண்டாற்போல நிணம்நீடு பெருங்குடர் கையகத்து ஏந்தி-நிணத்துடன் நீண்ட பெரிய குடரைக் கையில் ஏந்திக்கொண்டு, என்மகள் இருந்த இட மென்று எண்ணி-பண்டு என்மகள் இருந்த இடமாகும் என்று நினைந்து, தன் உறு துன்பம் தாங்காது புகுந்து - தனது மிக்க துன்பத்துனைத் தாங்க வியலாமற் புகுந்து, சமணீர்காள் நும் சரண் என்றோனை - சமணர்களே உம்முடைய அடைக்கலம் என்று கூறியவனை ;  
  
பாய்ந்த புண் : பெயரெச்சம் காரணப் பொருட்டாயது ; ஆறு சென்ற வியர் என்புழிப்போல. ¹"நிணவரிக் குறைந்தவதர் தொறுங், கணவிர மாலை யிடூஉக்கழிந் தன்னை, புண்ணுமிழ் குருதி பரிப்பக் கிடந் தோர்" என உவமங் கூறியிருப்பது அறியற்பாலது. இடமென்று-இட மாகலின் புரந்தருறள்வரென்று.  
  
¹ அகம். 31.

### [6.9](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6.9)

மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை  
  
55  
மையறு படிவத்து மாதவர் புத்தெமைக்  
கையுதிர்க் கோடலின் கண்ணிறை நீரேம்  
அறவோ ருளிரோ ஆருமி லோமெனப்  
புறவோர் வீதியிற் புலம்பொடு சாற்ற  
  
53  
  
உரை  
  
57  
  
இவண் நீர் அல்ல என்று என்னொடும் வெகுண்டு - இவ் விடத்திற்குரிய தன்மை அன்றென்று கூறி என்னையும் சினந்து, மையறு படிவத்து மாதவர் புறத்து எமைக் கையுதிர்க் கோடலின்- குற்றமற்ற தவவடிவத்தையுடைய சமண முனிவர்கள் புறத்தே போகுமாறு எம்மைக் கையை அசைத்துக் குறித்தலினால், கண் நிறை நீரேம்-கண்களில் நிறைந்த நீரினையுடையேமாய், அறவோர் உளீரோ ஆரும் இலோம் என - அறம்புரிவீர் இருக்கின்றீரோ பாதுகாப்போர் யாருமில்லாதேம் என்று, புறவோர் வீதியில் புலம் பொடு சாற்ற - புறத்திலுள்ள ஒரு வீதியில் வருத்தத்துடன் கூற ;  
  
இவணீரல்ல - இவ்விடத்திற்குரியீரல்லீர் என்றுமாம் ; அல்ல என் பது பால்குறியாது வழக்குப்பற்றி நின்றது. என்னொடும் - என்னையும் ; உம்மை : எச்சம் ; தந்தையை என்னொடும் என்றுமாம். படிவம் - தவ வேடம். ஓர் புறவீதியி லென்க ; புறவோர் - புறத்திலுள்ளோர் என்றுரைப்பாருமுளர்.

### [6.10](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6.10)

மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை  
  
60  
  
65  
  
70  
  
மங்குறோய் மாடம் மனைதொறும் புகூஉம்  
அங்கையைற் கொண்ட பாத்திர முடையோன்  
கதிர்சுடும் அமயத்துப் பனிமதி முகத்தோன்  
பொன்னிற் றிகழும் பொலம்பூ வாடையன்  
என்னுற் றனிரோ என்றெமை நோக்கி  
அன்புட னளைஇய அருண்மொழி யதனால்  
அஞ்செவி நிறைத்து நெஞ்சகங் குளிர்ப்பித்துத்  
தன்கைப் பாத்திர மென்கைத் தந்தாங்  
கெந்தைக் குற்ற இடும்பை நீங்க  
எடுத்தனன் றழீஇக் கடுப்பத் தலையேற்றி  
மாதவ ருறைவிடங் காட்டிய மறையோன்  
சாதுயர் நீக்கிய தலைவன் றவமுனி  
சங்க தருமன் தானெமக் கருளிய  
  
58  
  
உரை  
  
70  
  
மங்குல் தோய் மாட மனைதொறும் புகூஉம் அங்கையிற் கொண்ட பாத்திரம் உடையோன் - வானளாவிய மாடங்களையுடைய மனைகள்தோறும் செல்லும் கையிற்கொண்ட பிச்சைப் பாத்திரத்தையுடையவனும், கதிர்சுடும் அமயத்துப் பனிமதி முகத்தோன்-ஞாயிறு காயும் நண்பகற் பொழுதில் குளிர்ச்சி பொருந்திய மதிபோலும் முகத்தினையுடையவனும், பொன்னில் திகழும் பொலம்பூ ஆடையன்-பொன்போல் விளங்கும் அழகிய ஆடையை உடையவனுமாகி, என் உற்றனிரோ என்று எமை நோக்கி-என்ன துன்பம் எய்தினீர் என்று எங்களை நோக்கி, அன்புடன் அளைஇய அருள்மொழி அதனால் - அன்பொடு கலந்த அருள் மிகுந்த இன் மொழிகளால், அஞ்செவி நிறைத்து நெஞ்சகம் குளிர்ப்பித்து- செவியகத்தை நிறைத்து உள்ளத்தைக் குளிரச்செய்து, தன்கைப் பாத்திரம் என்கைத் தந்து-தன் கையிலுள்ள பாத்திரத்தை என் கையில் கொடுத்துவிட்டு, எந்தைக்கு உற்ற இடும்பை நீங்க - என் தந்தைக்கு எய்திய துன்பம் நீங்குமாறு, எடுத்தனன் தழீஇக் கடுப்பத் தலையேற்றி-விரையத் தழுவி எடுத்துத் தன் உடம்பினிடத்தே சுமந்து சென்று, மாதவர் உறைவிடம் காட்டிய மறையோன்-புத்த முனிவர்கள் உறைவிடத்தைக் காட்டிய மறையவனாகிய, சாதுயர் நீக்கிய தலைவன்-எந்தையின் இறப்புத் துன்பத்தை நீக்கிக் காப்பாற்றிய தலைவன், தவமுனி சங்கதருமன் - சங்கதருமன் என்னும் தவத்தையுடைய முனிவனாவான் ;  
  
இல்லறத்தோர் யாவரும் உண்டபின் உச்சிப்பொழுதிற் பிச்சைக் சூச் செல்வது புத்தமதத் துறவியர் இயல்பாகலின், "கதிர்சுடுமம யத்து" என்றார் ; "வெங்கதி ரமயத்து வியன்பொழி லகவயின், வந்து தோன்றலும்," "வெயில்விளங் கமயத்து விளங்கித் தோன்றிய, சாது சக்கரன் றன்னையானூட்டிய" (10 : 27 - 8 ; 11 : 102 -3) எனப் பின்னர் வருதலுங் காண்க. மருதந் துவரில் தோய்க்கப்பட்டு மஞ்சள் நிறமுள்ளதாகலின் "பொன்னிற் றிகழும பொலம்பூ வாடை" எனப் பட்டது. அன்பும் அருளுமுடைய மொழியா லென்க. கடுப்ப-விரைய. தலை-இடம். ஆடையனாய் நோக்கி நிறைத்துக் குளிர்ப்பித்துத் தந்து ஏற்றிக் காட்டிய மறையோனாகிய தலைவன் சங்கதருமன் ஆவானென்க.

### [6.11](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6.11)

மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை  
  
75  
  
எங்கோ னியல்குணன் ஏதமில் குணப்பொருள்  
உலக நோன்பிற் பலகதி உணர்ந்து  
தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன்  
இன்பச் செவ்வி மன்பதை யெய்த  
அருளறம் பூண்ட ஒருபெரும் பூட்கையின்  
அறக்கதி ராழி திறப்பட உருட்டிக்  
காமற் கடந்த வாமன் பாதம்  
தகைபா ராட்டுத லல்லது யாவதும்  
மிகைநா வில்லேன் வேந்தே வாழ்கென  
  
70  
  
உரை  
  
79  
  
தான் எமக்கு அருளிய -அவன் எமக்கு அறிவுறுத்த, எங்கோன் இயல்குணன் ஏதமில் குணப்பொருள் - எம்முடைய இறைவன் இயல்பாகவே தோன்றிய குணங்களை யுடையவன் குற்றமற்ற குணங்களின் பொருளாயுள்ளோன், உலக நோன்பின் பலகதி உணர்ந்து தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் - உலகசீலத்துடன் பல பிறப்புக்களிலும் பிறந்து பிறந்து உணர்ந்து உயிர்கட்கு நல்லறிவு புகட்டிய தனக்கென்று உயிர் வாழாத பிறர்க்கே உரிமைபூண்டொழுகுபவன், இன்பச்செவ்வி மன்பதை எய்த-நிரு வாணமடைதற்குரிய பருவத்தை உயிர்ப்பன்மைகள் அடைய, அருள் அறம் பூண்ட ஒரு பெரும் பூட்கையின் - அருளாகிய அறத்தினைப் பூண்ட ஒப்பற்ற பெரிய மேற்கோளினாலே, அறக்கதிர் ஆழி திறப்பட உருட்டி-அறமாகிய கதிர்களையுடைய ஆழியை உலகத்திற் பலவகையாக உருட்டி, காமற் கடந்த வாமன் பாதம் - மாரனை வென்ற புத்தனது திருவடிகளை, தகை பாராட்டுதல் அல்லது யாவதும் மிகைநா இல்லேன் - பாராட்டித் துதித்தலையன்றி வேறுபொருள் களைப்பற்றிச் சிறிதும் பேசாத நாவினையுடையேன், வேந்தே வாழ்க என-மன்னவ வாழ்வாயாக என்று சுதமதி கூற  
  
உலக நோன்பு-இல்வாழ்க்கையிலிருந்து செய்யும் நோன்பு, ஒழுக்கம் ; அதனால் இல்லறத்தார் உலகநோன்பிகள் எனப்படுவர். கதி- பிறப்பு. புத்தன் அருளாலே பகவகைப் பிறப்பும் எடுத்தானெனப் புத்தசாதகக் கதைகள் கூறாநிற்கும்: ¹"எறும்புகடை யயன்முதலா வெண்ணிறந்த வென்றுரைக்கப் பிறந்திறந்த யோனிதொறும் பிரியாது சூழ்போகி, எவ்வுடம்பி லெவ்வுயிர்க்கும் யாதொன்றா லிடரெய்தின், அவ்வுடம்பி லுயிர்க்குயிரா யருள்பொழியுந் திருவுள்ளம்" ²"வானாடும் பரியாயு மரிண மாயும் வன்கேழற் களிறாயு மெண்காற் புண்மான், தானாயும் பணையெருமை யொருத்தலாயுந் தடக்கையிளங் களிறாயுஞ் சடங்க மாயும், மீனாயு முயலாயு மன்ன மாயு மயிலாயும் பிறவாயும் வெல்லுஞ் சிங்க, மானாயுங்கொலை களவு கட்பொய் காமம் வரைந்த வர்தா முறைந்தபதி மானா வூரே" என்பன காண்க. புத்தன் தனக் கென வாழாப் பிறர்க்குரியாளன் என்ற கருத்து "பிறர்க்கற முயலும் பெரியோய்," "தன்னுயிர்க் கிரங்கான் பிறவுயி ரோம்பு ; மன்னுயிர் முதல்வன்" (11 ; 65 ;55; 116-7) என இந்நூலுள்ளே பின்ன ரும் வந்துள்ளன ; ³"இருட்பார வினைநீக்கி யெவ்வுயிர்ச்குங் காவ லென, அருட்பாரந் தனிசுமந்த வன்றுமுத லின்றளவும், மதுவொன்று மலரடிக்கீழ் வந்தடைந்தோர் யாவர்க்கும், பொதுவன்றி நினக் குரித்தோ புண்ணியநின் றிருமேனி," "தீதியல் புலியது பசிகெடு வகைநின திருவுரு வருளிய திருமலி பெருமையை," என்பனவும் காண்க. சிறுகுடிகிழான் பண்ணன் என்பானைச் சிறப்பிக்குமிடத்து அகப்பாட்டிலே (54) இத்தொடர் முழுதும் வந்துள்ளது ; அருளறம்- அருளாகிய அறம் ; அருளே எல்லா அறங்களிலும் மேலாயது என்பது ⁴"ஒன்றாக நல்லது கொல்லாமை" "அஹிம்ஸா பரமோதர்ம:" என்ப வற்றான் அறியப்படும். கதிர் - திகிரியின்  
  
¹ வீர. யாப்பு, 11 எடுத்திக்காட்டு. ² நீல. சமய. ³ வீ. யாப்பு. 11. எடுத்துக்காட்டு. ⁴ குறள். 323. ⁵ சிலப். 10; 196 - 7.

### [6.12](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6.12)

மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை  
  
80 அஞ்சொ லாழியை நின்திற மறிந்தேன்  
வஞ்சி நுண்ணிடை மணிமே கலைதனைச்  
சித்திரா பதியாற் சேர்தலு முண்டென்  
றப்பொழி லாங்கவன் அயர்ந்து போயபின  
  
80  
  
உரை  
  
83  
  
அஞ்சொல் ஆயிழை நின்திறம் அறிந்தேன்-அழகிய மொழியையுடைய ஆயிழாய் நின் வரலாற்றினை அறிந்தேன், வஞ்சிநுண் இடை மணிமேகலைதனை - கொடிபோலும் நுண்ணிய இடையையுடைய மணிமேகலையை. சித்திராபதியால் சேர்தலும் உண் டென்று-சித்திராபதியால் அடைதலுங்கூடும் என்று கூறி, அப் பொழில் ஆங்கவன் அயர்ந்து போயபின் - உதயகுமரன் அப்  
பொழிலினின்றும் காமத்தால் தளர்ச்சியுடையனாய்ச் சென்ற பின்னர்;

### [6.13](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6.13)

மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை  
  
85  
  
90 பளிக்கறை திறந்து பனிமதி முகத்துக்  
களிக்கயல் பிறழாக் காட்சிய ளாகிக்  
கற்புத் தானிலள் நற்றவ உணர்விலள்  
வருணக் காப்பிலள் பொருள்விலை யாட்டியென்  
றிகழ்ந்தன னாகி நயந்தோ னென்னாது  
புதுவோன் பின்றைப் போனதென் னெஞ்சம்  
இதுவோ அன்னாய் காமத் தியற்கை  
இதுவே யாயிற் கெடுதன் றிறமென  
மதுமலர்க் குழலாள் மணிமே கலைதான்  
சுதமதி தன்னொடு நின்ற எல்லையுள  
  
84  
  
உரை  
  
93  
  
பளிக்கறை திறந்து-மணிமேகரை பளிக்கு மண்டபத்தைத் திறந்து, பனிமதி முகத்துக் களிக்கயல் பிறழாக் காட்சியள் ஆகி- குளிர்மதி போலும் முகத்திலே மதர்த்த கயல்போலுங் கண்கள் பிறழாத காட்சியையுடையளாய், கற்புத்தான் இலள் நற்றவ உணர்விலள் வருணக் காப்பு இலள் பொருள் விலையாட்டி என்று- கற்பில்லாதவள் நல்ல தவவுணர்ச்சியில்லாதவள் மரபிற்கேற்ற காவலற்றவள் பொருள் கொடுப்பார்க்குத் தன்னை விற்கும் விலை மகள் என்று இவ்வாறாக, இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என் னாது-பழித்துரைத்தவனாய் விரும்பினோன் என நினையாமல், புது வோன் பின்றைப் போனது என் நெஞ்சம் - ஏதிலான் பின்னே என்னுடைய உள்ளம் சென்றது; இதுவோ அன்னாய் காமத்து இயற்கை - அன்னையே இங்ஙன முள்ளதோ காமத்தின் இயல்பு, இதுவே ஆயின கெடுக தன்திறம் என-இவ்வாறாயின் இதன்வலி கெடுவதாக என்று, மதுமலர்க் குழலாள் மணிமேகலை தான் சுதமதி தன்னொடு நின்ற எல்லையுள்-தேனவிழும் மலர்களை யணிந்த கூந்தலையுடைய அவள் சுதமதியோடும் கூறிநின்ற பொழுதில் ;  
  
சுமதியை நோக்கிய பார்வை விலகாது நின்றாளென்பர் 'களிக் கயல் பிறழாக் காட்சியளாகி' என்றார். வருணக் காப்பு - வருண மாகிய காவல் என்றுமாம். மணிமேகலை திறந்து காட்சியளாகிக்  
கெடுக தன்றிறமென நின்ற வெல்லையுள் என்க.

### [6.14](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6.14)

மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை  
  
95  
இந்திர கோடணை விழாவணி விரும்பி  
வந்து காண்குறுஉ மணிமேகலா தெய்வம்  
பதியகத் துறையுமோர் பைந்தொடி யாகி  
மணியறைப் பீடிகை வலங்கொண் டோங்கிப்  
  
94  
  
உரை  
  
97  
  
இந்திர கோடணை விழாஅணி விரும்பி வந்துகாண்குறூஉம் மணிமேகலாதெய்வம் - இந்திரகோடணையாகிய விழாவின் எழிலைக் காணுதற்கு விரும்பி வந்த மணிமேகலா தெய்வம், பதியகத்து உறையும் ஓர் பைந்தொடியாகி அப்பதியின்கணிருக்கிற ஒரு பெண் வடிவத்துடன், மணியறைப் பீடிகை வலங்கொண்டு ஓங்கி - பளிக்கறையிலுள்ள பீடிகையை வலம்வந்து விசும்பில் உயர்ந்து;  
  
கோடணை - முழக்கம்; பலவகை ஆரவாரங்களை யுடைமையின், இந்திர விழா-இந்திர கோடணை யெனப்பட்டது. "இந்திர கோடணை யிந்நகர்க் காண," "இந்திர கோடணை விழவணி வருநாள்" (7. 17, 17; 59) எனப் பின் வருதல் காண்க. மணி-பளிங்கு,

### [6.15](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6.15)

மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை  
  
100  
  
105 புலவன் றீர்த்தன் புண்ணியன் புராணன்  
உலக நோன்பின் உயர்ந்தோ யென்கோ  
குற்றங் கெடுத்தோய் செற்றஞ் செறுத்தோய்  
முற்ற உணர்ந்த முதல்வா என்கோ  
காமற் கடந்தோய் ஏம மாயோய்  
தீநெறிக் கடும்பகை கடிந்தோய் என்கோ  
ஆயிர வாரத் தாழியன் றிருந்தடி  
நாவா யிரமிலேன் ஏத்துவ தெவனென்  
றெரிமணிப் பூங்கொடி இருநில மருங்குவந்  
தொருதனி திரிவதொத் தோதியி னொதுங்கி  
நிலவரை யிறந்தோர் முடங்குநா நீட்டும்  
  
98  
  
உரை  
  
108  
  
புலவன்-மெய்யறி வுடையோனே, தீர்த்தன்-தூயோனே, புண்ணியன் - அறவோனே, புராணன் - பழையோனே, உலக நோன்பின் உயர்ந்தோய்-உலக நோன்பினால் மேம்பட்டவனே, என்கோ - என்பேனோ, குற்றம் கெடுத்தோய் - முக்குற்றங்களையும் அழித்தோய், செற்றம் செறுத்தோய் - கடுஞ்சினத்தைக் கடிந்தோய், முற்ற உணர்ந்த முதல்வா-முழுதும் உணர்ந்த முதன்மையுடையோய், என்கோ-என்பேனோ, காமற் கடந்தோய் - மாரனை வென்றோய், ஏமம் ஆயோய்-இன்ப மயமாய் உள்ளோய், தீ நெறிக் கடும்பகை கடிந்தோய்-தீய நெறியாகிய கடிய பகையை நீக்கினோய், என்கோ-என்பேனோ, ஆயிரஆரத்து ஆழியன் திருந்தடி- ஆயிரம் ஆரங்களைக் கொண்ட அறவாழியினையுடைய நின்செவ்விய திருவடிகளை, நாஆயிரம் இலேன் ஏத்துவது எவன் என்று - ஆயிரம் நாவில்லா யான் எவ்வாறு துதிக்க வியலும் என்று, எரி மணிப் பூங்கொடி இருநில மருங்குவந்து-சுடர் விடுகின்ற மாணிக்கப் பூங்கொடியானது பெரிய பூமியின் பக்கலில் வந்து, ஒரு தனி திரிவது ஒத்து-தன்னந்தனியே திரிவதுபோல, ஒதியின் ஒதுங்கி- மெய்ஞ்ஞானத்துடன் ஒதுங்கி, நிலவரை இறந்து ஓர் முடங்குநா நீட்டும்-நிலவெல்லையைக் கடந்து தனது வளைந்த நாவை நீட்டு கின்றாள்;  
  
குற்றம்-காம வெகுளி மயக்கங்கள். ஏமம் - பாதுகாவலுமாம். ஆழியந் திருந்தடி' என்ற பாடத்திற்கு ஆயிரம் ஆரங்களையுடைய சக்கர ரேகை பொருந்திய திருந்திய அடி என்றுரைக்க. நாவாயிர மிலேன் ஏத்துவ தெவன் என்றது என் ஒரு நாவில் அடங்குவதன்று என்றபடி. ஓதி - முக்கால உணர்வு. நிலவரை இறந்து - புவியின் மேலே உயர்ந்து. ஓர்: அசை. நாநீட்டும் - சொல்லும்.

### [6.16](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6.16)

மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை  
  
110  
  
115  
புலவரை யிறந்த புகாரெனும் பூங்கொடி  
பன்மலர் சிறந்த நன்னீ ரகழிப்  
புள்ளொலி சிறந்த தெள்ளரிச் சிலம்படி  
ஞாயி லிஞ்சி நகைமணி மேகலை  
வாயின்மருங் கியன்ற வான்பணைத் தோளி  
தருநிலை வச்சிரம் எனஇரு கோட்டம்  
எதிரெதி ரோங்கிய கதிரிள வனமுலை  
ஆர்புனை வேந்தற்குப் பேரள வியற்றி  
ஊழி யெண்ணி நீடுநின் றோங்கிய  
ஒருபெருங் கோயிற் றிருமுக வாட்டி்  
  
109  
  
உரை  
  
118  
  
புல வரை இறந்த புகார் எனும் பூங்கொடி - அறிவின் எல்லையைக் கடந்த புகார் என்னும பூங்கொடி, பன்மலர் சிறந்த நல்நீர் அகழிப் புள் ஒலி சிறந்த தெள் அரிச் சிலம்பு அடி - பல மலர்களும் சிறந்து விளங்குகின்ற நல்ல நீரினையுடைய புட்களின் ஒலி மிக்க அகழியாகிய சிறந்த தெள்ளிய அரியினையுடைய சிலம் பணிந்த அடியையும், ஞாயில் இஞ்சி நகை மணிமேகலை - ஞாயிலையுடைய மதிலாகிய ஒள்ளிய மணிகளாலாய மேகலையையும், வாயில் மருங்கு இயன்ற வான் பணைத்தோளி - வாயிலின் பக்கலில் அமைந்த பெரிய தோரண கம்பமாகிய தோளையும் உடையாள், தருநிலை வச்சிரம் என இரு கோட்டம் எதிர் எதிர் ஓங்கிய கதிர் கோல் இளவனமுலை-எதிரெதிர் உயர்ந்த கற்பகத் தரு நிற்கும் கோயில் வச்சிரப்படை நிற்கும் கோயில் என்னுமிரண்டுமாகிய ஒளி பொருந்திய இளைய அழகிய கொங்கைகளையும், ஆர் புனை வேந்தற்குப் பேரளவு! இயற்றி - ஆத்திமாலை சூடும் சோழனுக்குப் பெரிய அளவினதாக இயற்றப்பட்டு; ஊழி எண்ணி நீடு நின்று ஓங்கிய - எண்ணப்படும் பல ஊழிக்காலமாக நிலைபெற்றுயர்ந்த, ஒரு பெரும் கோயில் திருமுக வாட்டி-ஒப்பற்ற கோயிலாகிய திருமுகத்தினையும் உடையாள் :  
  
குற்றம்-காம வெகுளி மயக்கங்கள். ஏமம் - பாதுகாவலுமாம். புல வரை - அறிவின் எல்லை; ¹"புலவரை யிறந்த புகழ்சால் தோன்றல் புலவரை யிறந்தோய் போகுதல் பொறேஎன்" என் பன காண்க. மலர் சிலம்பும், புள்ளொளி சிலம்பொலியும், அகழி அடி யுமாம். ஞாயில் - மதிலின் ஓருறுப்பு; ஏப்புழைக்கு நடுவாய் எய்துமறையுஞ் சூட் டென்பர் நச்சினார்க்கினியர்; குருவித் தலையென்பர் அடியார்க்கு நல்லார். பணை - மூங்கில்; ஈண்டுத் தோரண கம்பம. எதி ரெதிரோங்கிய இருகோட்டமென்க. வச்சிரலை என விரித்துக் கொள்க. வேந்தற்கேற்பப் பெரிய அளவினதாக இயற்றப்பட்ட கோயில்; ²"பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனை வகுத்து" என்ப துங் காண்க-சிலம்பு, மேகலை என்பவற்றிற்கேற்ப அடைகள் புணர்த்தி யுள்ளார்.  
  
¹ புறம். 21. சிலப், 28: 174. ² நெடுநல். 78.

### [6.17](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6.17)

மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை  
  
120  
  
குணதிசை மருங்கின் நாண்முதிர் மதியமும்  
குடதிசை மருங்கிற் கென்றுவீழ் கதிரும்  
வெள்ளிவெண் தோட்டொடு பொற்றோ டாக  
எள்ளறு திருமுகம் பொலியப் பெய்தலும  
  
119  
  
உரை  
  
122  
  
குணதிசை மருங்கில் நாள் முதிர் மதியமும்-கீழ்த்திசையில் நான் நிரம்பிய முழு மதியமும், குடதிசை மருங்கில் சென்று வீழ் கதிரும்-மேற்றிசையில் சென்று படிகின்ற ஞாயிறும், வெள்ளி வெண் தோட்டொடு பொன் தோடாக-வெள்ளியாலாகிய வெண் தோட்டுடன் பொன்னாலாய தோடுமாக, எள்ளறு திருமுகம் பொலிப் பெய்தலும்-இதழ்தலற்ற அழகிய முகம் பொலியுமாறு அணிதலும்;  
  
நாள்-கலை. நிறையுவா நாளில் மித கீழ்த்திசைக்கண் உதித்தும், பரிதி மேற்றிசையிற் படிந்தும் கோயிலின் இரு மருங்கும் ஒருங்கு தோன்றுதலின், அவற்றைப் புகார்ச் செல்வி கோயிலாகிய முகத்தின் இரு மருங்கும் தோடாக அணிந்தனள்; என்றாள்; எனவே அந்திப் பொழுது வந்தமை பெற்றாம்; இது பரியாயவணி. திருமுகவாட்டி பெய்தலும் என்க.

### [6.18](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6.18)

மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை  
  
125  
  
130  
  
135  
  
140 அன்னச் சேவல் அயர்ந்துவிளை யாடிய  
தன்னுறு பெடையைத் தாமரை யடக்கப்  
பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடைகொண்  
டோங்கிருந் தெங்கின் உயர்மட லேற  
அன்றிற் பேடை அரிக்குர லழைஇச்  
சென்றுவீழ் பொழுது சேவற் கிசைப்பப்  
பவளச் செங்காற் பறவைக் கானத்துக்  
குவளை மேய்ந்த குடக்கட் சேதா  
முலைபொழி தீம்பால் எழுதுக ளவிப்பக்  
கன்றுநினை குரல மன்றுவழிப் படர  
அந்தி யந்தனர் செந்தீப் பேணப்  
பைந்தொடி மகளிர் பலர்விளக் கெடுப்ப  
யாழோர் மருதத் தின்னரம் புளரக்  
கோவலர் முல்லை குழன்மேற் கொள்ள  
அமரக மருங்கிற் கணவனை யிழந்து  
தமரகம் புகூஉம் ஒருமகள் போலக்  
கதிராற்றுப் படுத்த முதிராத் துன்பமோ  
டந்தி யென்னும் பசலைமெய் யாட்டி  
வந்திறுத் தனளால் மாநகர் மருங்கென்.  
  
123  
  
உரை  
  
141  
  
அன்னச் சேவல் அயர்ந்து விளையாடிய தன்னுறுபெடையைத் தாமரை அடக்க - அன்னச சேவலானது மெய்ம்மறந்து விளையாடிய தனது பேடையைத் தாமரை மலர் குவிந்து தன்னுள் அடக்கிக் கொள்ள பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடை கொண்டு ஓங்கு இருந் தெங்கின் உயர் மடல் ஏற-பூலினது கட்டு அழியுமாறு கிழித்துப் பேட்டினைக் கொண்டு உயர்ந்த பெரிய தென்னையினது வளர்ந்த மடலிற் சேரவும், அன்றில் பேடைஅரிக் குரல் அழைஇச் சென்று வீழ்பொழுது சேவற்கு இசைப்ப-அன்றிலின் பேடு மெல்லிய குரலால் சேவலை அழைத்து ஞாயிறுசென்று மறையும் அந்திப் பொழுதை உரைக்கவும், பவளச் செங்கால் பறவைக் கானத்துக் குவளை மேய்ந்த குடக்கட் சேதா-பவளம்போற் சிவந்த கால்களையுடைய அன்னப்புட்கள் நிறைந்த கானத்தில் குவளை மலரை மேய்ந்த திரண்ட கண்களையுடைய செவ்விய பசுக்கள், முலைபொழி தீம்பால் எழு துகள் அவிப்ப - மடியிலிருந்து பொழிகின்ற இனிய பால் நிலத்தினின்றும் எழுகின்ற புழுதியை அவிப்ப, கன்று நினை குரல மன்று வழிப் படா-கன்றுகளை நினைந்த குரலை யுடையனவாய் மன்றுகளின் வழியே செல்லவும், அந்தி அந்தணர் செந்தீப் பேண - அந்தணர்கள் அந்திச் செந் தீயை வளர்க்கவும், பைந்தொடி மகளிர் பலர் விளக்கு எடுப்ப - பசிய வளையலணிந்த மகளிர் பலர் விளக்குகளை ஏற்றவும், யாழோர் மருதத்து இன்னரம் புளர - யாழினையுடைய பாணர் யாழின் நரம்பினை வருடி இனிய மருதப் பண்ணை யெழுப்பவும், கோவலர் முல்லை குழல் மேற்கொள்ள - கோவலர் முல்லைப்பண்ணை வேய்ங் குழலினிடமாக இசைப்பவும், அமரக மருங்கில் கணவனை இழந்து-போர்க்களத்தில் கணவனை இழந்து, தமர் அகம் புகூஉம் ஒரு மகள் போல-தம்மவரிடம் செல்லும் ஒரு மங்கையைப்போல, கதிர் ஆற்றுப்படுத்த முதிராத் துன்பமோடு - ஞாயிற்றினைப் போக்கிய முடிவில்லாத துன்பத்துடன், அந்தி என்னும் பசலை மெய்யாட்டி - அந்திப்பொழுது என்கின்ற பசலை போர்த்த மேனியை யுடையாள், வந்து இறுத்தனளால் மாநகர் மருங்கு என் - பெரிய நகரத்தின் மருங்கே வந்து தங்கினள்என்க.  
  
அயர்ந்து - விரும்பி என்றுமாம். அடக்க - அடக்கலால். இரவிற் சிறிதும் பிரிந்திருத்தலருமையின் 'சேவற் கிசைப்ப' என்றார். கானம் - ஈண்டு நீர்நிலை. சேதா - செவ்விப் பசு ; செந்நிறமுடைய பசுவுமாம். கன்றினை நினைந்தமையாற் பால் பொழிவனவாயின. மன்று-ஆனினங்களை அடைத்து வைக்கும் வேலி நடுவணதாய வெளியிடம் ; கொட்டிலுமாம். பகலில் மேயச்சென்ற ஆனினங்கள் மாலைப்பொழுதில் கன்றை நினைந்து அழைக்குங் குரலோடு போந்து மன்றிலே புகுதல் இயல்பு ; ¹''ஆன்கணம், கன்று பயிர்குரல மன்றுநிறை புகுதர,'' ² "மதவு நடை நல்லான், வீங்குமாண் செருத்த றீம்பால் பிலிற்றக், கன்று பயிர் குரல மன்றுநிறை புகுதரு, மாலையும்'' என்பனவுங் காண்க. எடுத்தல் - கொளுத்தல், 'யாழோர்...புளர' - ஈண்டு மருதத்திற்குரிய இயைபு புலப்பட்டிலது ; இவ்வடி இடைப்புகுத்துப் போலும். 'முல்லைக் குழல்' என்ற பாடத்திற்கு முல்லையைக் குழலுக்கு அடையாக்குக ; என்னை? ³ "முல்லைக் கொடியால் முப்புரியாகத் தெற்றிய வளையை வளைவாய்க் கட்செறித்தூதலின் முல்லைக் குழலாயிற்று" என அடியார்க்கு நல்லார் உரைத்தலின் என்க. தமர்-தந்தை, தமையன் முதலியோர். முதிர்தல் ஈண்டு முடிதல் ; மேல் முதிதற்கு இடனில்லாத என்றுமாம். கணவனைப் பிரிந்தாட்கு மெய் பசக்குமாகலின் 'பசலை மெய்யாட்டி' என்றார் ; ஈண்டுப் பசலையாவது அந்திப் பொழுதின் புற்கென்ற நிறம். திருமுக வாட்டி தோடாகப் பெய்தலும் பசலை மெய்யாட்டி மாநகர் மருங்கு வந்திறுத்தனள் என்க  
  
பூங்கொடி உருவம் பெயர்ப்ப, சூழ்வோன் சுதமதி முக நோக்கி உரையென, உரைப்ப, அகல்வோன் எய்தியது உரையென, அவள் சங்கதருமன் அருளிய வாமன் பாதத்தைப்பாராட்டுதலல்லது மிகைநா இல்லேன் என, அவன் போயபின், மணிமேகலை சுதமதியோடு நின்ற வெல்லையுள், மணிமேகலா தெய்வம் பைந்தொடியாகிப் பீடிகையை வலங்கொண்டு ஓங்கி ஒதுங்கி நாநீட்டும் ; நீட்டுழி, திருமுகவாட்டி பெய்தலும், பசலை மெய்யாட்டி முதிராத் துன்பமொடு மாநகர் மருங்கு வந்திறுத்தனள் என்று முடிக்க. மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை முற்றிற்று.  
  
¹ குறிஞ்சிப். 217-8. ² அகம். 14. ³ சிலப். 17 : கொல்லை

## Linked texts (1)

- [Maṇimēkalai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.5.1-6) — Cīttalaic Cāttaṉār, Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6) · Pramāṇa
