<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.11.131-136 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 11.131-136

# Maṇimēkalai's Renunciation 11.131-136

Maṇimēkalai 11.131-136

- **Language:** Tamil

### [11.131](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.11.131)

வந்து தோன்றி அவர் மயக்கம் களைந்து  
அந்தில் அவர்க்கு ஓர் அற்புதம் கூறும்  
'இரவிவன்மன் ஒரு பெரு மகளே!  
துரகத் தானைத் துச்சயன் தேவி!  
அமுதபதி வயிற்று அரிதின் தோன்றி

### [11.136](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.11.136)

தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும்  
அவ்வையர் ஆயினீர் நும் அடி தொழுதேன்  
வாய்வதாக மானிட யாக்கையில்  
தீவினை அறுக்கும் செய் தவம் நுமக்கு ஈங்கு  
அறவண அடிகள் தம்பால் பெறுமின்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.12.19) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.11.131-136](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.11.131-136) · Pramāṇa
