<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.19.111-116 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 19.111-116

# Maṇimēkalai's Renunciation 19.111-116

Maṇimēkalai 19.111-116

- **Language:** Tamil

### [19.111](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.19.111)

பவளத் திரள் கால் பல் மணிப் போதிகைத்  
தவள நித்திலத் தாமம் தாழ்ந்த  
கோணச் சந்தி மாண் வினை விதானத்துத்  
தமனியம் வேய்ந்த வகை பெறு வனப்பின்  
பைஞ் சேறு மெழுகாப் பசும் பொன் மண்டபத்து

### [19.116](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.19.116)

இந்திர திருவன் சென்று இனிது ஏறலும்  
வாயிலுக்கு இசைத்து மன்னவன் அருளால்  
சேய் நிலத்து அன்றியும் செவ்வியின் வணங்கி  
எஞ்சா மண் நசை இகல் உளம் துரப்ப  
வஞ்சியின் இருந்து வஞ்சி சூடி

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.20.18) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.19.111-116](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.19.111-116) · Pramāṇa
