<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.19.121-126 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 19.121-126

# Maṇimēkalai's Renunciation 19.121-126

Maṇimēkalai 19.121-126

- **Language:** Tamil

### [19.121](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.19.121)

முறம் செவி யானையும் தேரும் மாவும்  
மறம் கெழு நெடு வாள் வயவரும் மிடைந்த  
தலைத் தார்ச் சேனையொடு மலைத்துத் தலைவந்தோர்  
சிலைக் கயல் நெடுங் கொடி செரு வேல் தடக் கை  
ஆர் புனை தெரியல் இளங்கோன் தன்னால்

### [19.126](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.19.126)

காரியாற்றுக் கொண்ட காவல் வெண்குடை  
வலி கெழு தடக் கை மாவண்கிள்ளி!  
ஒளியொடு வாழி ஊழிதோறு ஊழி!  
வாழி எம் கோ மன்னவர் பெருந்தகை!  
கேள் இது மன்னோ! கெடுக நின் பகைஞர்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.20.19) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.19.121-126](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.19.121-126) · Pramāṇa
